Author: Thana
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ரணவிரு (போர் வீரர்கள்) நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று (25) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு நினைவுத் தூபி வளாகத்தில், அடுத்த நாள் நடைபெறவிருந்த பிரதான விழாவிற்கான ஒத்திகை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது அங்கு சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸாரின் கடமைகளைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு விமல் வீரவன்ச சமூகமளித்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சற்று முன்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைது. நேற்று 24 ம் திகதி மஸ்கெலியா பொலிசாரினால் 21 வயது 38 வயது உடைய இருவர் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவிக்கையில் சாமி மலை கவரவலை தோட்ட பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில். கடந்த 21 ம் திகதி சுமார் 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் போன்ற பொருட்கள் களவாட பட்டு உள்ளது என கிடைக்க பெற்ற புகாரைத் தொடர்ந்து தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளனர். கொள்ளை…
பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் (Massage Parlour) என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடியாகச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 22ஆம் திகதி இரவு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வியூகம் வகுத்த பொலிஸார், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வாடிக்கையாளர் போல் அனுப்பி இந்தச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இந்த முற்றுகையின் போது அங்கிருந்த மூன்று பெண்களும், அந்த விடுதியை நடாத்தி வந்த முகாமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 35 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் தற்சமயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான…
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட் என பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நபர், இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது பாதுகாப்புத் தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார். நசீர் பெஸ்ட் என்ற இந்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தபோது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மனநல மருத்துவச் சிகிச்சைகளுக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமை தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை முழுமையாக வந்தடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பிராந்தியத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த பல பிரதான ஆறுகள், நேற்று (23) மழை வீழ்ச்சி குறைந்தமையால் தற்போது வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்மட்டம் தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது. மில்லகந்தை பகுதியில் இன்னமும் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதன் கிளையாறான குடா கங்கையின் நீர்மட்டம் இன்று முற்பகல் 6.51 மீற்றராகப் பதிவாகியுள்ளது. இது படிப்படியாகக் குறைந்தாலும் இன்னமும் ‘அனர்த்த மட்டத்திலேயே’…
டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது. செ.திவாகரன் டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார். குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையொட்டி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் இந்நிலையில், சந்தேக நபர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.
நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம். நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் நிலவியது . குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து வருகிறது. இதில் நுவரெலியா நகருக்கு உள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது இதில் நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் போன்ற வீதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொது…
ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் சிசிடிவி (CCTV) காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) ஆகியோரே உயிரிழந்தனர். கொலையைச் செய்த சந்தேகநபர், அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், தற்போது சந்தேகநபரின் நடமாட்டங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகளைத் திரட்டியுள்ளனர். விசாரணைகளில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்: சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று,…
செ.திவாகரன் நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்புத் திருடப்பட்டுள்ளது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.04.2026 முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று (22) சிறப்பு விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகைந்தந்தனர். நுவரெலியாவில் பழமையான இவ் கட்டிடத்தில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அறிவியல் கருவியாக காணப்பட்டது இது கட்டிடத்தை விட உயரமாக காணப்பட்ட கடிகார கோபுரத்தின் பொருத்தப்பட்டு, மின்னலின் அதிகப்படியான மின்சாரத்தை ஈர்த்து, பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தும் இவ் கருவியே…
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையானது, அரசாங்கத்தின் கொள்கை அல்லது தவறான தீர்மானம் அல்ல எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உருவான உலகளாவிய நெருக்கடியின் விளைவே எனவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் விலைகள், எரிவாயு மற்றும் உர விலைகள், அத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் வேகமாக அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும் மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஏற்றுமதி பொருட்களின் டொலர் விலையை விட இறக்குமதி பொருட்களின் டொலர் விலைகள் அதிகரித்தமை இலங்கையை பிரதானமாகப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உலகளாவிய…