Author: Thana
ஐக்கிய மக்கள் சக்தியின் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (மார்ச் 29) தெரிவித்தார். இந்த எம்.பி.க்கள் குழு பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு உடன்படிக்கையை வழங்கியுள்ளதாகவும் முன்னாள் எம்.பி. கூறியுள்ளார் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த எம்.பி.க்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, காலியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வெளிநாட்டினரை பயமுறுத்தி சுற்றுலா வர்த்தகத்தை உடைக்க ஜே.வி.பி முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் விஜேமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பாடசாலையில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரேனிய கொடியுடன் நிற்கும் ஒரு பெண்ணையும், குழந்தையையும் நோக்கி ரஷ்ய கொடி அருகே ஏவுகணைகள் செல்லும் ஓவியத்தை வரைந்தாள். இது தொடர்பாக அப்பாடசாலை தலைமை ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சமூக வலைதளங்களில் ரஷ்யாவின் போர் தாக்குதலை விமர்சிக்கும் கருத்துகளை தெரிவித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 13 வயது மகள் பிரிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டாள். அலெக்சி மொஸ்கலியோவை வீட்டு…
யாழ்ப்பாணம், மடகல் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 165 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Agbo மடகல் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கால் ரோந்து நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு தொகுதியை கைப்பற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, கடற்படையினர் கடற்கரையில் விட்டுச் சென்ற சந்தேகத்திற்கிடமான 8 சாக்கு பொதிகளை மீட்டுள்ளனர், மேலும் அதில் 150 கிலோ 390 கிராம் எடையுள்ள 71 கேரள கஞ்சா பொதிகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், எஸ்எல்என்எஸ் அக்போவால் மடகல் அருகே நடத்தப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில், மடகல் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கிடைந்துள்ளது. மீட்கப்பட்ட சாக்கு பையில் ஏழு பொதிகள் இருந்துள்ளன. அதில் சுமார் 15 கிலோ 05 கிராம் கேரள கஞ்சா அடைக்கப்பட்டிருந்தது. கடற்தொழிலாளர்கள் தொடரும் கடற்படை நடவடிக்கைகளினால் கேரள கஞ்சாவை நாட்டுக்குள் கொண்டு வர…
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார். “அதிகரிப்பு விஷயத்தில் நாங்கள் அதிகரித்ததைப் போல, பெற்றோர் மற்றும் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலையைக் குறைக்க அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே, அதை அடிப்படையாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..” இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பின் அனுகூலத்தை பேரூந்து கட்டணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைந்தாலும் புகையிரத கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் புனித பாப்பரசருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் விரிவான விவரங்கள் எதையும் வத்திகான் வெளியிடவில்லை. எனினும், திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் வழமையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புனித பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.(
முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா
முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா. பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று தசாப்த கால உன்னத கல்வி சேவையாற்றி பணி ஓய்வு பெறுகின்ற ஒரு பெண் ஆளுமை ஆசிரியை ஜனாபா ஏ.ஜே. சித்தி நஸீலா அவர்கள். 1963.03.30 அன்று அப்துல் ஜப்பார், ஒஜிதா உம்மா ஆகியோருக்கு மகவாக ஜனாபா சித்தி நஸீலா அவர்கள் பசறை ஊரில் பிறந்தார். இவர் தனது பாடசாலை கல்வியை பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார். மர்ஹும் எம்.பி.எம். ரஹீம்தீன் அவர்களுடன் இல்வாழ்வில் இணைந்தார்கள். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது கல்வி பணியை ஆரம்பித்தார். அன்று முதல் இன்றுவரை சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இப்பாடசாலையில் சேவையாற்றி பாடசாலை மாணவர்களின் கல்வி…
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு கும்பத்துமால் கருமாரியம்மன் திருக்கோயில் தாயே கருமாரி கருணைமிகு மாமணியே தஞ்சமென்று உன்பாதம் சரணடைந்தோம் நாடிவரும் துன்பங்களைக் களைந்தெறிய கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா தாயாக இருந்துலகைக் காக்கின்ற மாமணியே சஞ்சலங்கள் போக்கிவிட நம்பிவந்தோம் எம்குறைகள் எல்லாமே களைந்தெறிய கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா காவல் தெய்வமாயிருந்து வழிகாட்டும் மாமணியே மகிழ்ச்சி நாடி உன்பாதம் தொழுகின்றோம் வஞ்சனைகள், சூழ்ச்சிகள் அண்டாது களைந்தெறிய கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா அதர்மம் அழித்தொழிக்க அவதரிக்கும் மாமணியே அச்சம் அகற்றி விட உன்னையே நாடிவந்தோம் தோல்விகள் துரோகங்கள் அண்டாது களைந்தெறிய கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா கிழக்கிலங்கை கோயில் கொண்டு கோலோச்சும் மாமணியே எழுச்சி பெற்று நாம்வாழ உன்பாதம் தொழுகின்றோம் வீழ்ச்சிகளும், தாழ்ச்சிகளும் அண்டாது களைந்தெறிய கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா திருமலை நகரினிலே காட்சிதரும் மாமணியே திருப்தியென்றும் அடைந்திடவே உன் பாதம் பற்றுகின்றோம் தொல்லைகளும், தீமைகளும்…
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டோகிராமில் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் சாதனையொன்றை புரிந்துள்ளார். இந்த போட்டியில் லிட்டன் தாஸ் 18 பந்து வீச்சுக்களை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக அரைசதம் பெற்றார். ஐ.சி.சி. டி:20 போட்டிகளில் பங்களாதேஷ் வீரர் ஒருவர் வேகமாக பெற்ற அரைசதமாக இது பதிவானது. முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடக்க ஐ.சி.சி. ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்காக மொஹமட் அஷரபுல் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந் நிலையில் பங்களாதேஷின் இந்த சாதனை 16 வருடங்களின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். எவ்வாறெனினும் அயர்லாந்துக்கு எதிராக சட்டோகிராமில் தற்சமயம் நடைபெற்று வரும் ஆட்டத்தில்…
ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து ஜாம்பவானான ரஷித் கான் மீண்டும் ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளார். குறித்த தரவரிசையில் 24 வயதான ரஷித் கான் முதன் முறையாக 2018 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்திருந்தார். வலது கை சுழற்பந்து மற்றும் துடுப்பாட்ட வீரரான ரஷித் கான் ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று டி:20 போட்டிகளிலும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மொத்தமாக 710 புள்ளிகளுடன் வனிந்து ஹசரங்கவை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்தார். மேலும் ரஷித் கானின் சக வீரரான ஃபசல்ஹக் ஃபரூக்கி இந்த தொடரில் 4.75 என்ற சராசரியுடன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இடது கை வேகப் பந்து வீச்சாளரான ஃபரூக்கி தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 12 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்துக்கு வந்தார். அது மாத்திரமல்லாமல் குறித்த தரவரிசையில் இன்னுமோர் ஆப்கானிஸ்தான் வீரரான…