Author: Thana

நு/வ இராகலை உயர் தேசிய பாடசாலையில் இன்று 2023/03/23 காலை 8.30 மணியளவில் அதிபரின் தலைமையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நான்கு வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=9iJsQUk7cL4&feature=youtu.be இதில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 1187 ஆகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 1021 ஆகவும் பதிவாகியுள்ளது. (ரவி சரண்யா)

Read More

லிந்துலை ,சென்றெகுலர்ஸ் மற்றும் கிளனிஈகல்ஸ் ஆகிய தோட்டங்களில் நேற்று (22/03/23) கடும் காற்றுடன் பெய்த மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட 133 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் தற்காலிகமாக பாடசாலை மண்டபங்களிலும் ,உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்க பட்ட குடும்பங்களில் 5 வயதுக்கும் குறைவான 45 சிறுவர்களும் உள்ளடங்குவதாக,லிந்துலை சுகாதர வைத்திய அதிகாரி திருமதி ரேஷினி துரைராஜா தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்த அவர் அவர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார்.மேலும் அவர் எங்கள் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கூரைகளை முழுமையாக சீர் செய்ததும் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்குக் குஜராத் – சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் வைத்து, ‘எல்லா திருடர்களும் மோடி என்ற குடும்பப்பெயரை கொண்டிருக்கிறார்கள்’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரவ் மோடி மற்றும் லலித் மோடி போன்றவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஒப்பிட்டு அவர் வெளியிட்ட இந்த கருத்துக்கு எதிராக பிஜேபியின் சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்தவழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இரண்டு வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டதுடன், தண்டனை காலம் 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மேன்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

Read More

இராகலை உயர் பாடசாலையில் “ஏற்றிடுவோம் ஒரு தீபம்” கல்விக்காக உதவி கோரும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2023/03/22ம் திகதி இராகலை உயர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது இராகலை பிரதேசத்தை சூழவுள்ள பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கபட்டதோடு இராகலை உயர் பாடசாலையில் கல்வி கற்று கடந்த ஆண்டு கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A உயர் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்து உயர்தரத்திற்கான புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை கருதி ஆண்டுதோறும் நடாத்தப்படும் பழைய மாணவர் நட்புறவாடல் நிகழ்வுக்கு பதிலாக இம்முறை கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைதிட்டம் முன்னெடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்ச்சிதிட்டத்திற்கான அனுசரணையினை பழைய மாணவர்கள், இராகலை நகர வர்த்தகர்கள், மற்றும் நலன் விரும்பிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

Read More

மட்டக்களப்புச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடுமீன் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் செங்கலடி – செல்லம் பிரீமியர் திரையரங்கில் இடம்பெறவுள்ளது. ஈரான் நாட்டு திரைப்படங்களான “Bodyguard“ மற்றும் “Tragedy”, வியட்நாம் திரைப்படமான “Don’t Burn”, கியூபத் திரைப்படமான “Viva Cuba” ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுவதுடன், அத்திரைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும். நுழைவு இலவசம்.

Read More

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண…

Read More

பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர RSP USP psc IG அவர்கள் தனது கடமைகளை  (21) பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு துணை பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் வெலகெதர அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக தாய் நாட்டிற்காக சேவையாற்றி வருவதுடன், இலங்கை இராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான மிகப்பெரிய தொண்டு நிறுவனமான இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவதுஆண்டுவிழா நிகழ்வு (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1917 ஆம் ஆண்டில், சாரணர் இயக்கத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய இளம் பிரித்தானிய ஆசிரியை ஜென்னி கெல்வர்லியினால் முதலாவது மகளிர் சாரணர் குழுவை கண்டி உயர்மகளிர் பாடசாலையில் ஆரம்பித்தார். அதன்படி, நேற்று (21) இலங்கை சாரணர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டு 106 வருடங்கள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொடி தினத்தை முன்னிட்டு, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் கலாநிதி சாந்தி வில்சன், தொடர்பாடல் ஆணையாளர் ருக்‌ஷானி அஸீஸ் மற்றும் பல்வேறு திறமைகளை கொண்ட மாணவர் பிரிவின் சாரணத் தலைவியான வசந்தா சரோஜனி ஹேமசிங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு சாரணர் கொடியை வழங்கி வைத்தனர். இலங்கை சாரணர் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் சாரணர் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டது.

Read More

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது அரச சேவையில் பணிபுரியும் பயிலுனர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காகக நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கு 53,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களில் 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள உள்ளோம். அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த 33,000 ஆசிரியர்களையும் பாடசாலை கட்டமைப்புக்கு உளவாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் பிரதான நகரங்களான…

Read More

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே வளங்கொண்ட வன்னியிலே கோயில் கொண்ட விநாயகரே வரும் துன்பம் தடுத்துவிடு வல்லமையைத் தந்துவிடு அடிபணிந்து தொழும் எமக்கு ஆறுதலைத் தந்துவிடு வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே வடஇலங்கை கோயில் கொண்டு வழித்துணையாய் இருப்பவரே வற்றாத கருணையினை எமக்கென்றும் ஆக்கிவிடு வெற்றிகளைத் தந்தெம்மைத் தலைநிமிரச் செய்துவிடு வரம் கேட்டு நிற்கும் எமக்கு வளவாழ்வைத் தந்துவிடு வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே தமிழ் ஒலிக்கும் நம் மண்ணில் காட்சி தரும் பெருமானே தெளிவான வழியை நீ எமக்கென்றும் காட்டிவிடு தவறான செயல்களைத் தடுத்தெம்மை வழிநடத்து வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே திக்கின்றித் தவிப்போர்க்கு வழிகாட்டும் நாயகனே நேர்வழியைக் காட்டிவிடு நிலைத்த நலம் தந்துவிடு தடுமாறா நிலைதந்து உரிய…

Read More