Author: Thana

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 440 கிராமசேவை பிரிவுகளில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூ றினார். இதன்படி, பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் அத்தனகல்ல மற்றும் பஸ்ஸயால பகுதிகளுக்கு புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், நிட்டம்புவ, மினுவாங்கொடை மற்றும் கம்பஹாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட…

Read More

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினால் கெல்சி தமிழ் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நுவரெலிய பிராந்திய இயக்குனர் அவர்களும் நிதியத்தின் பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்,ஓஸிப் நிறுவனர்கள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read More

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் 10 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை 151,800 ரூபாவகவும், 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 165,000 ரூபாவகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையின் அதிபராக திருமதி. எஸ். மனோகரன் பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது கோட்டக்கல்வி பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி நிர்வாக குழுவினர், முன்னாள் அதிபர் எஸ். ரமேஷ் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடராஜா மலர்வேந்தன்

Read More

மலையக கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கிடையேலான சிநேக பூர்வமான சந்திப்பு ஒன்று 19.03.2023 அன்றைய தினம் , கிரேன்ட் ஓரியண்ட் ஓட்டல் (Grant Orient Hotel) கொழும்பில் இடம்பெற்றது. ACT அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான இரா. சத்தியசீலன் – (கனடா) அவர்களின் வழிகாட்டலில், ACT Sri Lanka அமைப்பின் பிரதிநிதிகளாக  இரா.சிவயோகன் – உப.தலைவர்/ ஆலோசகர், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர். செல்வி. ப.பவித்ரா – ஊடகத்துறை தலைமை பொருப்பாளர் ஆகியோரின் ஏற்பாடில் இடம்பெற்றதுடன், இந்த முக்கிய கலந்துரையாடலில் எம். வாமதேவன் – தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் மற்றும் மலையகம் தொடர்பான விவகாரங்களில் முன்னணி மூத்த செயற்பாட்டாளர், இரா. சடகோபன் – முன்னணி வழக்கறிஞர், நாவலாசிரியர் மற்றும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணை செயலாளர்,கோ.சேனாதிராஜா – முன்னணி சட்டத்தரணி, செயற்பாட்டாளர் மற்றும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணை செயலாளர்,சுலோச்சனா ராமையா மோகன் – துணை ஆசிரியர்…

Read More

வெல்லவாய – எல்லாவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன நான்கு இளைஞர்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஒருவருடைய சடலமும், இன்று காலை ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை, சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நீராடச் சென்ற போது காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா

Read More

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியில் பயணித்த 19 வயதுடைய மீதும்பிட்டி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் குறித்த இளைஞனின் தந்தை (வயது 50) படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பதுளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரணித்த தகப்பன் மகன் இருவரும் பசறை மீதும்பிட்டி  கலபட  பகுதியை சேர்ந்தவர்கள் பசறை  மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும் மொனராகலையில்…

Read More

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் இடமாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும். எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் இடமாற்றங்கள், பாடத்திற்கு ஏற்ப முறையான முறையில் மேற்கொள்ளப்படும். 10 வருடங்களுக்கு…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (21) விடுத்துள்ள விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி…

Read More