Author: Thana

விசேட அதிரடிப்படையினரால் 35 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 700 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இதில் அடங்கியுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் பி.எச்.டி.சி.குமாரசிங்க உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பணம் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்ற்பட்டன.

Read More

2023ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெற்செய்கை மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கு நீர் விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, மகாவலி மற்றும் சிறிய நீர்பாசன கால்வாய்களின் ஊடாக, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை நீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த மாதம் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இடையூறு இன்றி நீரை வழங்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நீர்ப்பசனம் பெறும் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 77 சதவீதமாக உள்ளது. அதில் 66 வீதமான நீரை பயிர்ச்செய்கைக்காக விடுவிக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக , நெற் செய்கைக்கு 75 வீதமும், மேலதிக பயிர்ச் செய்கைக்கு 25 வீதமும் நீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட விவசாய பிரதிநிதிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள்…

Read More

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (10) இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Read More

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு, உலகில் துணிச்சலான பெண்களாக பலர் பல்வேறு நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் வௌ்ளை மாளிகையில் கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில் இலங்கையில் இருந்து இலங்கையின் சட்டத்தரணியான ரனித்தா ஞானராஜா அவர்களும் தேர்வு செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் கௌரவிக்கப்பட்டார். திருமதி. ரனித்தா ஞானராஜா அவர்களுக்கு மலையகம்.lk சார்பில் வாழ்த்துக்கள்.

Read More

பெண் ஒருவர் சிறுமியை எட்டி உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாற்றாந்தாய் ராகமை குருகுலவ பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதுடைய கரவிட்ட ஆராச்சிலாகே தினுஷா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ராகமை போதனா வைத்தியசாலையின் 42ஆவது வார்டில் ராகமை பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தையின் இரண்டாவது மனைவியான இந்த பெண்ணுடன் சிறுமி வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் இருந்தவாறு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெகமராவில் பதிவான சிறுமியை தாக்கும் வீடியோவை இணையத்தின் உதவியுடன் கையடக்கத் தொலைபேசியில் பார்வையிட்டு, பின்னர் அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தை…

Read More

மட்டக்களப்பு ரயில் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) இரவு 7 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் வைத்து இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

இத்தாலியில் தொழில் வேலை வாய்ப்புக்கு இணையவழி ஊடாக விண்ணப்பிப்பது குறித்து இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2023.03.07 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாப்புப் பணியகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக  பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலிய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற கோட்டா முறையின் கீழ் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, இத்தாலியில் உள்ள வேலை வழங்குபவர்களின் ஊடாக அல்லது வணிக நிறுவனங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக இலங்கையில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. இதற்காக , எந்தவொரு நபருக்கும் பணம் வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிசற்சங்க ரீதியான தீர்வுகளை காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியான விடயங்களை கையாள மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் இரண்டாவது கூட்டம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

Read More

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் கொடுப்பனவை ,இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சை மேற்பார்வைப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின், கொடுப்பனவையும் 2000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தாமதமானால் அது ஏனைய பரீட்சைகள் மற்றும் வழமையான பாடசாலை தவணைகளையும் பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மாணவர்களின், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒன்றிணையுமாறு ஆசிரியர் சங்கங்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

கேகாலை – ருவன்வெல்ல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த ஆணின் சடலம் இரத்தக்காயங்களுடன் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More