Author: Thana

கேகாலை மாவட்டம் புளத்கொஹுப்பிடிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயல உடுவ தேதுகல பிரதேசத்தில் தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் மிருகங்கள் வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த பொறியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருக்கு போராடுவதை இன்று காலை பிரதேச மக்கள் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மக்கள் வன ஜீவராசி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். அதன் போது வருகை தந்த வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் சிறுத்தை புலியை மீட்க முயற்சி எடுத்த போதிலும் முயற்சி பலனின்றி புலி பரிதாபமாக உயிரிழந்தது. வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் உயிரிழந்த புலியின் உடலை புளத்கோபிட்டிய மிருக வைத்திய அதிகாரியிடம் சென்று சிறுத்தை புலியின் உடலை மேலதிக பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக வீரியமுள்ள மருந்து ஒன்றை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று (28) இரவு, மாணவி தங்கியிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மலலசேகர மாணவர் விடுதியில் குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்ததை ஏனைய மாணவர்கள் அவதானித்துள்ளனர். பின்னர், நேற்று இரவு 11:15 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அபேவர்தன முதலிகே டொன் வித்யானி மதுமாலிகா டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

Read More

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ,கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கு அமைவாக ,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபாய் 92 சதமாகவும் கொள்வனவு  விலை 357 ரூபாய் 68 சதமாக அமைந்திருந்தது.. கடந்த மாதம் 24 ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபாய் 77 சதம் ஆகும். இதன் கொள்வனவு  விலை 358 ரூபாய் 45 சதம் ஆகும். அரசாங்கத்தின் சர்வதேச நாணயக்கொள்கை ,புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் வெளிநாட்டு நாணயங்களின் அதிகரிப்பு என்பன அதற்கு காரணம் ஆகும்.  இது மாத்திரம் அன்றி முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் .

Read More

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)  மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாவினால் குறைத்துள்ளது மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு (01) முதல் நடைமுறைக்கு வருவதாக கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது. இருப்பினும், ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்படவில்ல என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மறுசீரமைபப்புக்கு அமைவாக ,தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் விலை  பின்வருமாறு: மண்ணெண்ணெய் – ரூ. 305.00 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 400.00 95 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 510.00 லங்கா ஓட்டோ டீசல் – ரூ. 405.00 லங்கா சுப்பர் டீசல் – ரூ. 510.00

Read More

வரி விதிப்பு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக இன்று பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதுளை பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இருந்து நடைபவனியாக பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பதுளை-கொழும் வீதி வழியாக இந்நடைபவணி முன்னெடுக்கப்பட்டு, பதுளை பொது வைத்திய சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமு தனராஜா

Read More

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.” என நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். பிரித்தானிய தரப்பினரிடம், பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது, “பிரித்தானியாவின் தார்மீக பொறுப்பு, பிரிட்டீஷ் அரசாட்சி, இம்மக்களை இருநூறு…

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை…

Read More

சவுதி நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக அந்நாட்டு உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. மத்திய நடவடிக்கை மற்றும் மேற்கு ஆசிய விடயங்கள் தொடர்பிலான பணிப்பாளர், பொறியியலாளர் Eng. Mohammad Al-Masoud,( Director of Operations for Central and West Asia,)  தலைமையிலான குழுவினரே தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த குழுவினர், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர்  Khalid Hamoud Alkahtani, கலந்து கொண்டார். இந்த குழுவினர் ,நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில், நீர், வலுசக்தி, சுகாதாரம்,வீதி அபிவிருத்தி, கல்வி ஆகியன தொர்பில் 12 திட்டங்களை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அந்நாடு 424.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எந்த வகையிலும் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது நியாயமானது அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம் – வெளிவட்ட வீதி, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் புத்தளம் நகரினிலே கோயில் கொண்ட திருமகளே புனிதம் நிறை நல்வாழ்வைத் தந்தெமக்கு காப்பளிப்பாய் பதற்றமில்லா சூழ்நிலையில் நாம்வாழ வழியைச் செய்வாய் வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா தூயமனம் கொண்டோர் தம் உள்ளங்களில் உறைகின்ற திருமகளே தூய்மை நிறை நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய் தெளிவான சூழ்நிலையில் நாம் வாழ வழியைச் செய்வாய் வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா வெற்றிகளைத் தந்தென்றும் உயர்வு தரும் திருமகளே வீரம் நிறை நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய் வெறுப்பில்லா சூழ்நிலையில் நாம்வாழ வழியைச் செய்வாய் வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா குறையில்லா பெருவாழ்வை எமக்கருளும் திருமகளே குற்றமில்லா நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய் குவலயத்தில் தலைநிமிர்ந்து நாம்வாழ வழியைச் செய்வாய் வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா நெஞ்சினிலே உறைந்திருந்து நிம்மதியைத் தரும் திருமகளே நீதி நெறி…

Read More