Author: Thana
இலங்கை கடற்பகுதியில் கப்பல்கள் மூலம் எரிபொருள் கசிவுகளை கண்காணிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவை
இலங்கைக் கடற்பகுதியில் கப்பல்களால் ஏற்படும் எரிபொருள் கசிவைக் கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஆரம்பிப்பதற்கான அமைச்சுப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டிற்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எண்ணெய் கசிவு கண்காணிப்பு சேவை முதலில் குறுகிய கால முன்னோடி திட்டமாக தொடங்கப்பட உள்ளது. அதற்காக பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சு 601,810.00 யூரோக்களை மானியமாக வழங்குவதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஒரு வருடத்திற்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சேகரிக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் செயற்கைக்கோள்கள் Collected Localization Satellite (CLS) மற்றும்…
சொகுசு காருக்குள் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமொன்று கண்டெடுப்பு. பாணந்துறை – பின்வத்த பகுதியில் சொகுசு வாகனமொன்றிற்குள் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைவேகத்தில் ஓரளவு பலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.…
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார். இதனூடாக பயணிகள் அல்லது பொருட்களை வௌியேற்றுதல், கொள்கலன் பெட்டிகளை இறக்குதல், சேமித்து வைத்தல், விநியோகித்தல் மற்றும் உணவு மற்றும் பானப் பொருட்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்றவற்றை துறைமுகங்களில் உள்ள இயந்திரங்களின் ஊடாக வௌியேற்றுவதற்காக பொதுப் போக்குவரத்து சேவை இவ்வாறு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் வீதி, பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வழி போக்குவரத்திற்காக தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk அல்லது http://www.onlineexams.gov.lk என்ற முகவரியினூடாக இணையத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பத்தின் பிரதி ஒன்றை தம் வசம் வைத்திருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை முன்வைப்பதற்கான user name மற்றும் pass word அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம்- அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம்தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் அஞ்சாமை தந்தெமக்கு ஆறுதலைத் தரும் எம் அன்னை நெஞ்சகத்தில் வீற்றிருந்து துணிவினையே தந்தருள்வாள் அறவழியில் வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம் தஞ்சமென்று வருபவர்கள் குறை போக்கும் எம் அன்னை என்றும் உடனிருந்து நன்மைகளைச் செய்திடுவாள் நேர்வழியில் வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம் நெஞ்சினிலே உறைந்திருந்து நேர் வழியைக் காட்டும் எம் அன்னை நெருங்கி வந்து உடனிருந்து நேர்வழியைக் காட்டிடுவாள் துணையிருந்து வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம் மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் எம் அன்னை மாண்புடனே வாழ்வதற்கு உரிய வழி காட்டிடுவாள் மனத்திலே அமைதிதந்து நல்ல மனம்தந்தெம்மை வாழச் செய்யும் அன்னை பன்மூரில் கோயில் கொண்டாள்…
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே ஒழுங்கமைத்திருந்த ஆடற்கலைப் போட்டியின் இறுதி போட்டி கொழும்பு விஹாரமதேவி பூங்காவுக்கு அருகிலுள்ள புதிய நகர சபை மண்டபத்தில் கடந்த 25/02/2023 அன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு அகில இலங்கை கிராமியகலை ஒன்றித்தின் தலைவர் த விஜய்ராஜ் தலைமையில் இடம்பெற்றிருந்தது. போட்டிக்கு அறநெறி பாடசாலைகளை பிரதிநித்துவப் படுத்தி பல மாணவர்கள் பங்குப்பற்றி இருந்தனர்.
மலையகப் பிரதேசத்தில் “கல்விக்கு கரம்b கொடுப்போம் ” அதேபோல ” உணவு கொடுப்போம் பசித்தீர்போம் ” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இயங்கி வரும் கருணை இல்லம் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டினுடைய இடர்பாடான பொருளாதார சூழ்நிலையிலும் பதுளை, பசறை, நுவரெலியா, தலவாக்கலை, பூண்டுலோயா, நாவலப்பிட்டி, குருநாகல், அவிசாவளை, வட்டவளை, அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, மன்ராசி முதலான பல பிரதேசங்களை உள்ளடக்கிய தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளை தாண்டிய மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் விசேட அதிதிகளாக மனித உரிமைகள் இயக்குனர் டி. எல். சார்ஸ் மற்றும் அமைப்பின் அங்கத்தினர்கள், விஷ்ணு அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தராஜ் ஆகியோருடன் தலவாக்கலை, லிந்துல பொலிஸ் நிலையங்களின் பிரதான பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்போடு கருணை இல்லத்தின் தலைவர் திரு…
பலாங்கொடை C.C தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(27/02/23) காலை மேற்கொண்டனர். https://youtu.be/uJJyVAJ_DRY பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபற்ற அதிபர் எங்களுக்கு வேண்டாம் எனக்குறிபிட்டு பெற்றோர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பலாங்கொடை பின்னபாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு C.C.தமிழ் மகாவித்தியாலயத்திற்கு கடமைக்காக சென்ற அதிபருக்கு எதிராகவே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுதுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் பலாங்கொடை வலய கல்வி அதிகாரிகள் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளை சந்திக்க போவதாகவும் தெரிவித்தனர். மொஹமட் அலி
கொழும்பு நகரில் தற்போதுள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே போதே தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காலிங்க மாவத்தை – கொலொம்தோட்டை சரசவி தோட்டம், பொரளை சிரிசர தோட்டம் மற்றும் மெட்சர தோட்டம், தெமட்டகொட மிஹிது சென்புர மற்றும் சியபத் செவன, மாளிகாவத்தை லக்ஹிரு செவன, சியசெத செவன மற்றும் லக்செத செவன, புளூமெண்டல் சிறிமுத்து தோட்டம், சிரிசத தோட்டம், ஹேனுமுல்ல ரத்மித்து செவன, ஹெலமுத்து செவன, சன்ஹிரு செவன, ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஹிஜய செவன, பெர்குசன் வீதி முவதொர உயன, ஒருகொடவத்த புரதொர செவன, கொலன்னாவ சன்ஹித செவன மற்றும் லக்சத செவன ஆகியவை வீட்டுத் திட்டங்கள் தலைவரினது கண்காணிப்பு விஜயத்தின் போது அவதானிக்கப்பட்டன. இதன் போது இந்த வீடமைப்புத் திட்டங்களில் தற்போதுள்ள சில…