Author: Thana

ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம் கதிர்காமம்- அருள்மிகு சிவன் திருக்கோயில் கதிர்காமத் திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே கருணை ஒளிபரப்பி எங்கும் காத்திடுவாய் ஐயா பெருமனது கொண்டெமது துயர் போக்க வேண்டும் ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே தமிழ் மொழியை உலகிற்கு உவந்தளித்த சிவனே தடம்புறழா மனவுறுதிதந்து எமைக் காத்திடுவாய் ஐயா உரிமைகளை உறுதி செய்து துயர் போக்க வேண்டும் ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே மாணிக்க கங்கை கரையில் இருந்தருளும் சிவனே மானமுடன் வாழும்வழி தந்து எமைக் காத்திடுவாய் ஐயா உள்ளத்தில் மகிழ்ச்சி தந்து துயர் போக்க வேண்டும் ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே வேல் கொண்ட வேலவனைத் தந்திட்ட சிவனே வேறுபட்டு சிதையும் நிலை போக்கி எமைக் காத்திடுவாய் ஐயா நெஞ்சமதில் நிம்மதியைத் தந்து துயர் போக்க வேண்டும் ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே அகிலத்தின் மூலமுமாய் இருக்கும் எங்கள் சிவனே ஆதரித்து, அரவணைத்து எமைக்…

Read More

4000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. 20 வருடங்களின் பின்னர் இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் சுகாதாரத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்; தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவின் தலைவர் நிபுன திப்புடுமுணுவ தெரிவித்தார். சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்த ஆய்வுப் பயணத்தில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழுவானது, இலங்கை தாதியர் கல்லூரி,  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை,   கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்று மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பான பாடங்கள் குறித்தும்  ஆராய உள்ளனர். சிங்கப்பூரின் சுகாதாரத் துறையானது அந்நாட்டின், சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களால் கையாளப்படுகிறது. மேலும் அந்நாட்டிற்கு அழைத்துச் செல்லவிருக்கும் இலங்கை தாதியர்களும் தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிகளில்…

Read More

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது .இருப்பினும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். காய்ச்சல், தலைவலி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக நீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தாங்கிகள் மற்றும் வீட்டினுள் அடிக்கடி சுத்தப்படுத்த படாத சிறிய பாத்திரங்கள் மற்றும் பூச்சாடிகள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு முட்டையிட்டு, குடம்பி கூட்டுப்புழுக்கள் உருவாவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த வருடம் இது வரை மன்னார் மாவட்டத்தில் 236 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 118 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…

Read More

கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள கோழி இறைச்சி கடையில் நேற்று (22/11/) இரவு இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ அளவிலான கோழிகள் திருடப்பட்டுள்ளாதாக வியாபாரி தெரிவித்தார். பழைய மரக்கறி வியாபார சந்தை பகுதி பக்கமாக வந்தே குறித்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் இன்று காலை காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக நீண்டகாலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்ததோடு ,பொருளாதர அபிவிருத்தி மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் டன்பார் கீழ்ப்பிரிவு அருள்மிகு ஓம்ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் குளிர்ச்சி தந்து வளர்ச்சி தந்து வாழவைக்கும் அம்மா குறையின்றி வளத்துடனே வாழ எமக்கருள்வாய் தாயே உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள் உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி குறைகளைந்து நிறை காத்து வாழவைக்கும் அம்மா கலக்கமின்றி நிம்மதியாய் வாழ எமக்கருள்வாய் தாயே உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள் உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி மலையகத்தில் உயர் நிலத்தில் இருந்தருளும் அம்மா மானமுடன் வாழ என்றும் எமக்கருள்வாய் தாயே உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள் உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி அருள் பொழிந்து அரவணைத்து வாழவைக்கும் அம்மா அச்சமின்றி உறுதியுடன் வாழ எமக்கருள்வாய் தாயே உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள் உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி டன்பாரில் கோயில் கொண்டு காட்சி தரும் அம்மா தெளிவுடனே என்றும் வாழ எமக்கருள்வாய் தாயே உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம்…

Read More

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல பகுதியில் வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல பகுதிக்கு விரைந்த பதுளை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது புதையல் தோண்டிய குற்றசாட்டில் 58வயதுடைய கீரியகொல்ல பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர் அத்தோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்ற ப்பட்டதோடு சந்தேக நபரையும் புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் குற்றத்தடுப்பு பொலிஸார் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நாளைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Read More

அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட அம்மன் ஆலயத்தில் இன்று (22/11/22) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிரமதானமானது தோட்ட ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களினாலும், தோட்ட இளைஞர்களினாலும் முன்னேடுக்கப்பட்டது. மேலும் தோட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலரும் இந்த சிரமதான பணியில் மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சரத்

Read More

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற செயல் திட்டத்தில் உயர்தரமாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியில் முதலாம் கட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பட்டறை இலங்கையை சின்மயா மிஷன் பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாதம் தோறும் இந்த பயிற்சி பட்டறை நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவைகர்.வி. பிரசன்னா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் செயலாளர் பழைய மாணவர் சங்கம் சரஸ்வதி மத்திய கல்லூரி

Read More