Author: Thana
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 1,444 பேரும், துருக்கியில் 2,300 பேரும் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர். சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறியுள்ளார். 1939…
வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம், முந்தல் கருங்காலிச்சோலை, அருள்மிகு கல்யாண முருகன் திருக்கோயில் புத்தளம் பெருநிலத்தில் கோயில் கொண்ட வேல்முருகா புத்துணர்வு தந்தெமக்கு எழுச்சி தரவாருமைய்யா என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா வெற்றி வேல் தாங்கி நின்று நலமளிக்கும் வேல்முருகா வெற்றிகளை நாம் பெற்று வாழ வழி தரவாருமைய்யா என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா சூரனை அடக்கி அருள்தந்த வேல்முருகா சுற்றமெல்லாம் நலமடைந்து எழுச்சி தரவாருமைய்யா என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா தெய்வானைத் திருமகளை அருகு கொண்ட வேல்முருகா தெளிந்த மனம் கொண்டவராய் வாழும் வழி தரவாருமைய்யா என்றும் உன்னருளால் ஏற்றம் நாம் பெற்றுவிட கருணை செய்வாய் கருங்காலிச் சோலையிருந்து காத்தருளும் கல்யாண முருகா துணிவு…
இன்று அதிகாலை துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. துருக்கியின் தொழில் நகரமாக அறியப்படும் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் மேலும் சில…
துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலும் அதனை அடுத்துள்ள சிரியாவின் எல்லை பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (06) ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரிய நாட்டு சுகாதார அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள பிந்திய தகவலில் 237 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிலும் 100 மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன. அவற்றில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்யைடுத்து துருக்கியில் அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளின் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை 3.20 மணிக்கு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசியன்டெப் இடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான்,…
ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்விட்ட ஹிங்குருகடுவ பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் நபர் ஒருவர் மதுபோதையில் பிறிதொரு வீடொன்றுக்கு சென்று பெற்றோலை ஊற்றி தீ வைக்க முற்பட்ட வேளையில் குறித்த வீட்டில் மூவர் நித்திரையில் இருந்துள்ளனர். வெளியே சத்தம் கேட்பதை அறிந்து உடன் வெளியே வந்து பார்க்கும் போது குறித்த சந்தேக நபர் ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் குறித்த வீட்டார் அவரை பிடிப்பதற்கு முற்பட்டு அவரை பின்தொடர்ந்து ஓடிய போது குறித்த சந்தேக நபர் அவரது கையில் வைத்திருந்த துப்பாக்கியினால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டாரினால் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்தைத் தொடர்ந்து உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதலை மேற்கொண்ட ஹிங்குருகடுவ பொலிஸார் உல்விட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.…
நானுஓயா நிருபர் நானுஓயா டெஸ்போட்டில் திருடச் சென்ற வீட்டில் கையடக்கத்தொலைபேசியை விட்டு ஓடிய திருடன். நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டினுள் திருடும் நோக்குடன் ஒருவர் உள்நுளைந்துள்ளார். வீட்டினுள் திருடனை இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர்கள் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார் , சத்தம் கேட்டு திருடன் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார் தப்பி ஓடியவனை அயலவர்கள் துரத்தி சென்ற போது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக விழுந்துள்ளது அதனை அறிந்து கொள்ளாத திருடன் தப்பி சென்றுள்ளார். வீட்டு உரிமையாளர்கள் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி மூலம் திருடனை அடையாளம் காண்பதற்கு நானுஓயா பொலிஸார் நிலையத்தில் கையடக்கத் தொலைபேசியை ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி சனிக்கிழமை மாலை நானுஓயா மாகாஎலிய தோட்டத்தில் கையடக்கத் தொலைபேசியும் , 23000/= ரூபாய் பணமும் களவாடப்பட்டதாக இளைஞன் ஒருவரினால் ஞாயிற்றுக்கிழமை மாலை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று…
(அந்துவன்) இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (05.02.2023) ஸ்ரீமத் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ் தலைமையில் கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷணர் பூஜை, ஹோமம், ஆரதி, பஜனை, ஆகியன இடம்பெற்று அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பமாகியது. இதன் போது பிரதம அதிதிகள் மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க கலை, கலாசார அம்சங்களுடன் வரவேட்கப்பட்டனர். குறித்த நிகழ்வின் போது இராமகிருஸ்ண மிஷனுக்கு ஸ்ரீமான் விஜயபாலன் ரெட்டியார் அவர்களால் இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன. இராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை நூற்றாண்டு நோக்கிய தனது ஆன்மீகமும் சமூக சேவையினையும் என்னும் சுவாமி விவேகானந்தரின் அடியொட்டிய பயணத்தில் கடந்த 96 ஆண்டுகளாக பெரும் பங்கினை ஆற்றி வருகிறது. இராமகிருஷ்ண மிஷன் தனது சேவைப் பணிகளை விரிவுபடுத்தும் அடுத்த கட்ட நிகழ்வாக,…
அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயாகல தியலகொட கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (05) மாலை 5.45 மணியளவில் பயாகல தியலகொட கடற்கரையில் நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது போதைப்பொருளை திருடியதாக கூறி வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று அவரை மோசமாக தாக்கியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.