Author: Thana

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற செயல் திட்டத்தில் உயர்தரமாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியில் முதலாம் கட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பட்டறை இலங்கையை சின்மயா மிஷன் பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாதம் தோறும் இந்த பயிற்சி பட்டறை நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவைகர்.வி. பிரசன்னா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் செயலாளர் பழைய மாணவர் சங்கம் சரஸ்வதி மத்திய கல்லூரி

Read More

நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச பேருந்துகளை அனுமதிக்க முடியாது என நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச பேருந்துகளை அனுமதிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அரச போக்குவரத்து ஊழியர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன், நுவரெலியா பொலிசாருடன் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேருந்து கழகத்தினர் பிரச்சினை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டும் வருகின்றனர். சரத் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அரச போக்குவரத்து ஊழியர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன், நுவரெலியா பொலிசாருடன் தனியார் மற்றும்…

Read More

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் iii நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலயதத்தை சேர்ந்த மாணவி விஜயராம் கீர்த்தனா மத்திய மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்பட்ட நவராத்திரி போட்டி 2022 பிரிவு ஒன்றில் வாக்கியம் எழுதுதல் போட்டியில் கோட்ட மட்டத்திலும், வலய மட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்பாடசாலையை சேர்ந்த அண்ணாத்துரை பவின்ஷா பிரிவு ஒன்று பேச்சு போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் போட்டிகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் பன்னீர்செல்வம் உட்பட ஏனைய ஆசிரியர்களையும் ஆலோசனைகளை வழங்கிய அதிபருக்கும் எமது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டமும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் ,கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் 20/11/2022 மாலை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான ஆரம்கட்ட கலந்துரையாடல்  இடம்பெற்றது. கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள், மதகுருமார்கள், வாகன சாரதிகள், பெற்றோர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவர்கள் பல்வேறு போதைப்பொருட்களை பாவிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்…

Read More

ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சமபவங்களின் பின்னணில் செயல்பட்டவர்களுடன் தொடர்பு பட்ட வலைப்பின்னல் அடையாளங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ.சேனநாயக்கா தெரிவித்தார் இதேவேளை, வெளிநாட்டு தொழில் வாப்பை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிறுவனங்கள் குறித்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அனுமதி பத்திரத்தைக்கொண்ட அல்லது அனுமதிப்பத்திரம் அற்ற முகவர் நிலையங்கள் தொடர்பில் நாடு முழுவதும் விசாரணை அதிகாரிகள் .விசாரணைகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசாரணை முகாமையாளர் கபில கருணாரத்ன கூறினார். ஓமான் நாட்டில் இலங்கைகைப் பணிப்பெண்களுக்கு ஏற்பட்ட அவலம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன. அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்திவருவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதிவரையில் நால்வர் பதுளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு கைது…

Read More

அருளளித்து அரவணைத்து ஆற்றல் தரும் எங்கள் தாயே அசையாத மனவலிமை தந்திடவே வரவேண்டும் தீராத துன்பங்கள் அண்டாத நிலை தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா கேட்டவரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் தாயே காலமெல்லாம் உடனிருந்து துணைதரவே வரவேண்டும் காவலாயிருந்தெமக்கு காப்பினைத் தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா கருத்தினிலே நீயிருந்து கவலைகளைப் போக்கிடவே வரவேண்டும் கேடு செய்ய நினைப்போர் எமை அண்டா நிலை தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா நம்பி வந்து அடிதொழுவோர் நலம் காக்கும் தாயே நெஞ்சகத்தில் உறைந்திருந்து நிம்மதியைத் தந்திடவே வரவேண்டும் நிரந்தர நிம்மதியை என்றும் எமக்குத் தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா கல்வியகம் அருகினிலே அமர்ந்தருளும் தாயே அறிவொளியைப் பாய்ச்சி எங்கும் ஒளிபெருக்க வரவேண்டும் நல்லெண்ணம் கொண்டோரின் உறவு நிலை தந்திடுவாய் அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா வடஇலங்கை வந்தமர்ந்து வளமளிக்கும் தாயே வற்றாத…

Read More

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு பிராணிகளுக்கு புல் வெட்டுவதற்காக வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19 ம் திகதி வேலுகுமார் சுந்தரத்தின் சகோதரரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்ட லுணுகலை பொலிஸாரும் மற்றும் காணாமல் போன நபரின் உறவினர்களும் ஹொப்டன் அம்பலாங்கொடை தோட்ட பொதுமக்களும் இணைந்து காட்டுப் பகுதிகள் எங்கும் தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஐம்பது ஏக்கர் தனியார் காணியில் தேயிலை செடிகளுக்கு மத்தியில் இன்று 21.11.2022 சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதோடு மரணித்தமைக்கான காரணத்தை கண்டறியும் முகமாக‌ விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

விவசாய சேவை மத்திய நிலையங்களில் இருந்து ,விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்கும் போது உர பொதிகளின் எடையை பரிசோதித்து விநியோகிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெமடுவ விவசாய சேவை மத்திய நிலையத்தில் பதிவான சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த முறையினால் விவசாயிகள், விவசாய சேவை நிலையங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் உர விநியோகத் திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதால் இதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

Read More

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு பெண்களை அனுப்பி முறைகேடான தொழில்களில் ஈடுபட்ட் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  கைது செய்துள்ளது. . தோட்டப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்று பல்வேறு முகவர்களுக்கு விற்பனை செய்தவர் இவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Read More

சுதத்.எச்.எம்.ஹேவா சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சில பெண்களும் ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக அகில இலங்கை முற்போக்கு சேவையாளர் முன்னணி சங்கத்தின் தலைவர் எஸ்.பி. இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த  அதிகளவான பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் நிலையில், ஓமானுக்கு பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 25 பெண்கள்  சென்றுள்ளதுடன், இதில் சிலர் பாலியலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். நன்றி – தமிழ்மிரர்

Read More