Author: Thana
இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிக சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு மக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தது. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக 69 இலட்சம் பேரின் கையொப்பத்துடன் கூடிய பொது மனுவொன்றுக்கான முதற்கட்ட கையொப்பம் நேற்று (09) மின்சார பாவனையாளர்கள் சங்கத்தினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை தடுப்பதற்காக குறுகிய காலத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைவாக நடமாடும் பாதுகாப்பு வாகன சேவையை புத்தல கதிர்காமம் வீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 6 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து (09) நாட்டை வந்தடைதுள்ளனர். அவர்களுக்கு உணவும், சம்பளமும் வழங்காமல், பலவந்தமாக பணியில் அமர்த்தப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாட்டுக்கு திரும்பியவர்கள். திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சட்ட விரோத முகவர் ஒருவரின் ஊடாக குவைட் நாட்டிற்கு வெளிநாட்டு வேலைக்காகச் சென்றுள்ளனர். நாட்டை வந்தடைந்த அந்த 6 பேரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை – வனப் பாதுகாப்பு ஜெனரல்
இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் இதனை வலியுறுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே வனப்பரப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடையவுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையின் இயற்கை காடுகள் மொத்தப் பரப்பளவில் 29.15% (1,912,970 ஹெக்டெயர்) ) என்று அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய மனித செயற்பாடுகள் காரணமாக காடுகளின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும், ஆனால் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளபடி காடுகளின் அளவு 16% வரை ஒருபோதும் குறையவில்லை எனவும் வனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல்…
வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக, நாட்டில் ஈடு கொடுக்க முடியாத பொருளாதார கட்டமைப்பு உருவானதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தெளிவுப்படுத்தும் விடயங்கள் இந்த நிகழ்வின் போது இடம்பெற்றன. நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க வேண்டியவர்கள் மாணவர் சமுதாயமாகும். மாணவர்கள் மத்தியில் கல்வி ஆற்றல் தவிர வேறு திறமைகளும் உண்டு. தாம் கல்வி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் தொழில்நுட்பத்தை பாடசாலைகளில் அறிமுப்படுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டுக்கு அரசியல் சுதந்திரமே கிடைத்தது. அதனூடாக சுதந்திர பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க வேண்டும். இருப்பினும், ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் ஏற்பட்ட பெருந்தோட்ட பொருளாதாரத்தில் இருந்து எம்மால் மீள முடியாமல் போய்விட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட…
வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரியை அரச மற்றும் அரச சார்ப்பு நிறுவனங்களால் செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றுநிரூபம் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவித் அவர் , எதிர்காலத்தில் இதுதொடர்பான முறைகேடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலிமாநகர்- அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரம் சிவன் திருக்கோயில் தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட சிவனே திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய் கல்லான மனங்களையும் கரைய வைக்கும் கோவே காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா அலை கடலின் கரையிருந்து அருள் வழங்கும் சிவனே அருளளித்து அரவணைத்துக் காத்திடவே வருவாய் மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே மலரடியைப் போற்றுகின்றோம் வந்திடுவாய் தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்திட்ட சிவனே தரணியிலே தமிழர் நிலை உயர்ந்திடவே செய்வாய் உயிருக்குள் உயிராக உள்ளிருக்கும் கோவே உயர்வு தந்து நலமளித்து வாழச் செய்வாய் ஐயா சுடலையிலே ஆடுகின்ற பேரருளே சிவனே சித்தமெல்லாம் சீரடையும் பெருமையை நீ தருவாய் உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே உறுதி தந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா பாண்டியனின் இலச்சினையைக் கொண்ட எங்கள் சிவனே பாசமுடன் உன்னடியைப் பணியுமெம்மைக் காப்பாய் வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா…
கொட்டக்கலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் 10 நாள் வயதுடைய சிசு ( பெண்) ஒன்று முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் சிசு மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் இன்று (09/01)காலை 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கௌசல்யா .
தமிழ்ச்செல்வன் ஊடாக பசறை கல்போக் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையின் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
தமிழ்ச்செல்வன் ஊடாக பசறை கல்போக் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையின் 50 மாணவர்களுக்கு இன்றைய தினம் அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்குமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய தமிழ்செல்வனின் சொந்த நிதியினால் இன்றைய தினம் கல்போக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் இணைப்புச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை, அருள்மிகு திருக்கோணேச நாதர் திருக்கோயில் அருள் தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் சிவனே அல்லல் களைந்தெம்மை வாழவைக்க வருவாய் கருணை மிகு உன்னருளே எமக்கென்றும் காப்பு கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே அச்சமில்லா நிம்மதியை அளிக்கின்ற சிவனே அனைத்து நலன் தந்தெம்மை வாழ வைக்க வருவாய் அன்புருவே உன்னருளே எமக்கென்றும் காப்பு கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே பெருங்கடலின் அருகிருந்து அருளுகின்ற சிவனே பெருநோய்கள் தடுத்தெம்மை வாழவைக்க வருவாய் பெருமைமிகு உன்னருளே எமக்கென்றும் காப்பு கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே சம்பந்தரால் பாடல் பெற்றபதி அமர்ந்த சிவனே சச்சரவுகள் தடுத்தெம்மை வாழவைக்க வருவாய் சீரிய வாழ்வுக்கு உன்னருளே எமக்கென்றும் காப்பு கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே இராவணேசன் பூசையிலே பெருமை பெற்ற சிவனே இடர்கள் அண்டாது தடுத்தெம்மை வாழவைக்க வருவாய் இன்றும் என்றும் உன்னருளே எமக்கென்றும் காப்பு கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே குன்றின்…