Author: Thana
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு நாளை பதிவு செய்ய முடியும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் நாளை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்த பெண், முதல் தளத்தின் முன்புறம் உள்ள ன்கிரீட் தளத்தில் விழுந்தார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் நீராடச் சென்ற ஜயவர்தனபுர பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் குழு திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவனின் வீட்டுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது இடையில் குறித்த ஏரியில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் நேற்று (17) இரவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (17) காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த திலினி லக்ஷானி என்ற யுவதியும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் ரந்திக என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ரெயில் நிலையத்தை அண்மித்த கடற்கரைக்கு சென்ற அவர்கள் புகையிரத பாதையை கடக்க முயன்ற போது மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரெயிலில் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுகயீனம் உற்ற நிலையில் பரீட்சைக்காக நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நாளை இவ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்துள்ளது. ஆனால் இம்மாணவனுக்கு மீண்டும் கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு பிரயாணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு பொருத்தமான சூழ்நிலை நிலை காணப்படாத நிலை பற்றி வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் தாய் ஆகியோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா அவர்களிடம் விடயத்தை கூறினர். அவர் உடனடியாக பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டதற்கும் தேவையான சகல ஆவணங்களும் அவருக்கு புலணம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் அமைவாக பரீட்சை ஆணையாளர் திருமதி.ஜீவராணி புனிதா அம்மையார் குறித்த மாணவன்…
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். காலை 09:30 முதல் 10:45 மணி வரை, இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க நேரம் ஒதுக்கப்படும். அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு 11:15 மணிக்கு முதலாவது வினாத்தாள் வழங்கப்படும்.விடைகளை எழுதுவதற்காக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒரு மணித்தியால கால அவகாசம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் நுவரெலியா சீதா எலிய அருள்மிகு சீதை அம்மன் திருக்கோயில் வளங்கொண்ட மலையகத்தின் மத்தியிலே வந்தமர்ந்தாய் வல்லமனம் கொண்டவளே மாசற்ற பெருந்தேவி உள்ளமெல்லாம் நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா சீதை அம்மன் கோயிலுறை எம்தாயே சீதையம்மா அழகுமிகு சூழலிலே அருளிக்க வந்தமர்ந்தாய் அச்சம் அகற்றியெம்மை அரவணைக்கும் பெருந்தேவி உதிரத்தில் நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா. மலை சூழ்ந்த திருநகரில் காட்சிதர வந்தமர்ந்தாய் மாதர் குல நாயகியே மாசற்ற பெருந்தேவி உணர்வு தனில் நிறைந்து உரிய வழி காட்டிடம்மா சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா. இலங்கை திருநாட்டில் அறம் காக்க வந்தமர்ந்தாய் இணையில்லா தாயவளே எங்கள் குல பெருந்தேவி உயிரினிலே நீ நிறைந்து உரிய வழி காட்டிடம்மா சீதை அம்மன் கோயிலுறை எம் தாயே சீதையம்மா. இராமபிரான் அருளினையும் உடன் கொண்டு வந்தமர்ந்தாய்…
களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த நபரை சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Source- Dearana
அயலகத் தமிழர் தினம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் 2023 ஜனவரி மாதம் 11.01.2023 மற்றும் 12.01.2023 தினங்களில் இடம்பெறவிருக்கிறது. குறித்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் அமைப்புகள் ,குழுக்கள் ,அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். கீழே உள்ள லிங்கின் மூலம் பதிவு செய்து குறித்த நிகழ்வில் பங்குகொள்ளலாம். https://wtdd2023.xenovex.com/en/beforereg/ https://wtdd2023.xenovex.com/en/
பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்த துரைசாமி விஜிந் உட்பட இந்தியாவில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு அமோக வரவேற்பு
பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் பெற்று இலங்கை வந்த நிலையில் அவர் உட்பட இந்தியாவில் பல பதங்கங்களை பெற்ற வீரர்களுக்கு அமோக வரவேற்பு இன்று (17/12/2022) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்டது. சேர்ந்ததுரைசாமி விஜிந் மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 02 தங்கப்பதக்கங்களையும் 02 வெள்ளிபதங்களையும் பெற்றதோடு பெங்ளூர் உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டிகலில் 02 தங்கப் பதகங்களையும் 01 வெள்ளி உட்பட 01 ஒரு வெங்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.