Author: Thana
துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு மாமாங்கேஸ்வரர் திருக்கோயில் மட்டுமாநகர் தனிலே கோயில் கொண்ட மாமணியே ஆட்டி நிற்பாய் உலகினையே ஆட்கொள்வாய் எங்களையே எட்டுத்திக்கும் திருவருளை ஏற்றிவிடும் தலைமகளே மட்டில்லா நன்மைதரும் மாமாங்கப் பிள்ளையாரே எங்கும் இன்பம் நிறைந்துவிட தந்திடைய்யா உன்னருளை ஏங்கி நிற்கும் எங்களுக்குத் துணையாவாய் நீயன்றோ கங்கையம்மை முடி கொண்டு காத்தருளும் சிவன்மகனே எங்கள் நலன் காத்திடவே துணையிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே தம்பி திருமுருகன் வேல்கொண்டு எமக்கருள தும்பிக்கை கொண்டவனே தேவனே அருளிடைய்யா நம்பிக்கை உன்னடியே நலமெமக்குத் தந்திடுவாய் எம்மிதயம் கோயில் கொண்ட மாமாங்கப் பிள்ளையாரே பெருவயிறு கொண்ட உந்தன் பேரருளை நாடுகின்றோம் வருந்தீமை விலக்கிவிட வல்லமையைத் தந்திடைய்யா அருகினிலே நீயிருக்க அச்சமெமக் கில்லையைய்யா கருத்தினிலே நீயிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே கிழக்கிலங்கை கோயில் கொண்ட பார்வதியின் புத்திரனே அழகுமிகு திருநகரின் ஆட்சி நிலை உன்னதன்றோ ஈழநல்ல நாட்டினிலே அமைதியெங்கும் நிலைத்துவிட வாழ்வளித்து வழிவகுப்பாய்…
பிரபல தொழிலதிபரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வருமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் , கடத்தப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். பொரளை கனத்தையில் அவர் மீட்கப்பட்டு. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்தார்
காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம் வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு, சர்ம புற்றுநோய் உள்ளிட்ட குறுகிய கால, நீண்ட கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதா சர்ம மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி தெரிவித்துள்ளார். இதேவேள,இவ்வாறான காலநிலையில் தமது கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான பயிற்சிகளைவழங்குவது அவசியமாகும். காலநிலை மாற்றங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைவெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனைவழங்கியுள்ளார்.
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்தபோது, அங்கிருந்த சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் , குறித்த பிரதேச மக்கள்,பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த தீயினால் சமைத்த உணவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு பல இலட்ச ரூபாய்கள் மோசடி
நாவலப்பிட்டி, கினிகத்தேனை பகுதிகளிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, கீழே உள்ள நபரால் பல இலட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட 197 பேரும் தமது தங்கநகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் பெற்றும் தலா 42,500 ரூபாயை குறித்த சந்தேகநபரிடம் வழங்கியுள்ளனர். சந்தேகநபரின் புகைப்படம் நாவலப்பிட்டி பொலிஸாரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான அதியுயர் ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட எழுதப்பட்ட சிறந்த கட்டுரைக்கான விருது கருப்பையா பிரசன்னகுமாருக்கு வழங்க்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு கடந்த 13/12/2022 அன்று மவுண்ட் லேவனியா ஹோட்டலில் இடம்பெற்றது. நிகழ்வை பத்திரிக்கை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திகை ஆசிரியர் சங்கம் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. மஸ்கெலியா புளும்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளிகளான கருப்பையா ,யோகலெட்சுமி ஆகியோரின் மகனான பிரசன்னா என்று அறியப்படுகின்ற பிரசன்னகுமார் தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை வெளிகொண்டுவந்துள்ளார்.இவர் தற்போது தினக்குரல் பத்திரிகையில் சேவை புரிந்தும் வருகிறார்.
11 வது ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாம் எதிர்வரும் 17-21 (12/22) ம் திகதி வரை நேபாளத்தில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள நிலையில் ,குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை மலையகத்தில் இருந்து இருந்து பூண்டுலோயா கந்தசாமி தேசிய பாடசாலையின் மாணவி சி .யுகாஷினி மற்றும் நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையின் மாணவி சி .சஞ்சீவனி ஆகியோர் இன்று நேபாளம் புறப்பட்டு சென்றுள்ளனர். குறித்த முகாமின் பிரதான நோக்கம் சிறுமிகளுக்கு சர்வதேச தொடர்பினை ஏற்படுத்தி கொடுப்பதுவும் சர்வதேச நாடுகளின் கலாசார பண்புகளை அறிந்துகொ கொள்வதோடு ,தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதுமாகும் .குறித்த நிகழ்வுகளுக்காக ஆசிய நாடுகளான இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் ,பூட்டான்,பங்கலாதேஸ் , நேபால் ,மியான்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் களந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையால் ஊவா மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபையினூடாக நிவரணத்தொகை பகிர்ந்தளிப்பு.
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக இலங்கையில் அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதியளவிலும் 44 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்திருந்தன. குறித்த வீடுகளை சீர்த்திருத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக அரசாங்கத்தினால் 10000 ரூபாய் காசோலை வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு பசறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் 28 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 185 குடும்பங்களுக்கு 10000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பசறை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வு இன்று சுமார் 1.00 மணியளவில் பசறை பிரதேச செயலக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ராமு தனராஜா