Author: Thana

LPL போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு, பார்வையாளர்களுக்கு  சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக (21) ஆரம்பமான லங்கா பிரீமியர் தொடரின் இறுதிப் போட்டி வரையில் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் சி மற்றும் டி பார்வையாளர் அரங்கின் கீழ் பிரிவில் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு இதற்கமைவாக  சந்தர்ப்பம் உண்டு. கடந்த 11 நாட்களாக நடைபெற்ற தொடரின் 20 போட்டிகளுக்கு பின்னர் ,பிரீமியர் தொடரின் இறுதி சுற்றுக்கு கண்டி பெல்கன்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. போட்டி தொடரின் இறுதி சுற்று தொடரின் முதல் போட்டி (21) நடைபெற்றது. இதில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின. .

Read More

தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ,இம்மாதம் 19ம் திகதி முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தாமரைக் கோபுரத்தை அண்மித்த பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதனை கண்டுகளிப்பதற்கு வருவோரின் வசதி கருதி வாகனங்களை கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டள்ளன. MOD  கார் தரிப்பிடம், காலி முகத்திடல் வீதி ஓரத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதி மற்றும் புதிய பாலதக்(சாரணர்) ஷ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடம் இடம் என்பன ஆகும்.

Read More

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25, 26, 31, ஜனவரி 01 திகதி ஆகிய நாட்களில் மின் துண்டிப்பு இடம் பெறாது என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார். நேற்று முன்தினம் (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதேவேளை ஜனவரி மாதத்தில் மின் துண்டிப்பு 2.20 நிமிடங்கள் மாத்திரம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டண அதிகரிப்பு  இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின் கட்டணத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரின் சிபாரிசுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார் இந்த விடயத்தை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

Read More

மேல்மாகாணம் – கொழும்பு மாநகர் – பம்பலப்பிட்டி அருள்மிகு கதிரேசன் பிள்ளையார் திருக்கோயில் கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட பிள்ளையாரே குற்றம் களைந்தெம்மை வாழவைப்பாய் பெருமானே நல்லவரம் தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா ஆறுதலைத் தந்தெம்மை அரவணைக்கும் பிள்ளையாரே அமைதி தந்து நிம்மதியாய் வாழவைப்பாய் பெருமானே அறிவு தந்து ஆற்றல் தந்து வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் பிள்ளையாரே நிம்மதியாய் என்றென்றும் வாழவைப்பாய் பெருமானே நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா தேடியுன்னை நாடிவரும் அடியவர்க்கு அருள் வழங்கும் பிள்ளையாரே தொல்லையின்றி நிம்மதியாய் வாழவைப்பாய் பெருமானே அவதியின்றி ஆறுதலாய் வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா தம்பி கதிரேசன் பெயரையும் உடன் கொண்ட கோயிலுறை பிள்ளையாரே உன்னடியார் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் வாழவைப்பாய் பெருமானே மனவுறுதி தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா சித்திகள் வழங்கி…

Read More

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு விழாகல்லூி முதல்வர் எஸ். சந்திரமோகன் அவர்கள் தலைமையில், கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று (21.12.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  அநுராத ஜயரத்னவின் தமிழ் விவகார பொறுப்பாளர் கவாஸ்கர் உட்பட சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்னம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவிக் கல்வி பணிப்பாளரும், புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆர். விஜேந்திரன் அவர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜா அவர்களும் (பழைய மாணவர்), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிர்வாகப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐ. ரவிக்குமார் அவர்களும் (பழைய மாணவர்),…

Read More

கிளிநொச்சி, பளை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

மெதகம பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (21) பகல் ஐஸ் போதைபொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் 240 மில்லிகிராம் போதைபொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர் காத்தான்குடி பகுதியிலிருந்து மெதகம பகுதிக்கு வருகைதந்தவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது. நடராஜா மலர்வேந்தன்

Read More

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று (21) காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, Bromin (புரோமின்) என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் தினறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுப்பிட்டிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி – இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில். காலமெல்லாம் உன்னடியைப் பற்றிநிற்கும் அடியவர்கள் வாழ்வில் பெரும்பேறு பெற்றிடவே அருள்தருவாய் பாழ்படா நிலைதந்து வாழ்வில் எழுச்சிபெற கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம் தேடிவந்து உன்னடியைத் தொழுது நிற்கும் அடியவர்கள் வாழ்வில் வளம் பெற்று உயர்ந்திடவே அருள் தருவாய் வீழும் நிலை அண்டாமல் வாழ்வில் எழுச்சிபெற கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம் நம்பிவந்து உன்னடியை நாளும் வணங்குகின்ற அடியவர்கள் வாழ்வில் ஒளியேற்றி எழுச்சிபெற அருளிடுவாய் நாளும் நன்மைகளை நாம் பெற்று வளம்பெறவே கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம் நன்மைகள் பெற்றுய்ய நாளும் உன்னை நாடுகின்ற அடியவர்கள் வாழ்வில் துணையிருந்து வழிகாட்டி அருளிடுவாய் மனவலிமை உடல் வலிமை நாம்பெற்று வலிமைபெற கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு…

Read More

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறி லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறி லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10. சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்தும் R.W.P.L.U. எட்வின் இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7. சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறி லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. நடுநிலை J.V.P. ஒருவரும் மலையக மக்கள்…

Read More