Author: Thana
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டு, வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
100 கோடி ரூபா செலவில், 1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சில் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது நாடு முழுவதும உள்ள 100 கல்வி வலயங்கள், 120 கல்வி வலயங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இவ்வாறு கல்வி வலயங்களை அதிகரித்ததன் பின்னர் ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம என்பவற்றின் முன்னாள் ஆசிரியை திருமதி. பாக்கியவதி லோகநாதன் இன்று அதிகாலை இறைபதமடைந்தார். இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (2022-12-18 ம் திகதி) நடைபெற்று பிற்பகல் 5.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை நண்பர்கள் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
நானுஓயா கிளாசோ தோட்டத்தில் முதலாவது பட்டதாரிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (16/12/22) கிளாசோ தோட்டத்தில் இடம்பெற்றுது. எம் .நாராயனன் ,ஆர்.புகனலோஜினி ஆகியோரின் புதல்வரான புண்ணியசெல்வனுக்கே நேற்று இவ்வாறு பொதுமக்களால் வீரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது ஆரம்ப கல்வியை : நு/ கிளாசோ த.வி, நானுஓயாவிலும் இடைநிலை, உயர்க் கல்வியை :நு/ நாவலர் கல்லூரியிலும் கற்றுள்ளார். நிஷாந்தன், கவிதாசன் https://youtu.be/P4lN0wIlTPg
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகர் மருதானை – அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில் அருவுருவாய் ரூபமாய் இருந்தியக்கி அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் சிவனே அருள் பொழிந்து வளமளித்து காத்து நலன் தருவாய் இருள் போக்கி மனத்தில் ஒளியேற்ற வேண்டும் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே அருள்வாய் உயிரினுள் உயிராக உறைகின்ற சிவனே உண்மையெங்கும் உறுதிபெற காத்து நலன் தருவாய் ஆசையறுத்து மனதில் ஒளியேற்ற வேண்டும் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே அருள்வாய் மூத்தபிள்ளை விநாயகரின் கோயில் அருகமர்ந்த சிவனே முத்தமிழுக் குரிமை தந்து காத்து நலன் தருவாய் மூர்க்க குணம் களைந்து மனதில் ஒளியேற்ற வேண்டும் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட கைலாதநாத சுவாமியே அருள்வாய் ஐந்தெழுத்து மந்திரத்தில் உறைந்தருளும் சிவனே ஐம்புலன்கள் சீர்செய்து காத்து நலன் தருவாய் ஐயம் களைத்து மனதில் ஒளியேற்ற வேண்டும் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட…
தமிழ்ச்செல்வனின் ஊடாக கண் பார்வை பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு.
நமுனுகுலை கனவரல்ல C.V.E பகுதியில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைத்தியரினால் மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் வாழும் குறித்த சிறுமியின் பெற்றோருக்கு மூக்கு கண்ணாடியை பெற்றுக் கொடுப்பதில் சிரமமான நிலையில் குறித்த தோட்டத் தலைவர் முருகதாஸினால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பேரில் குறித்த மூக்குக் கண்ணாடி பாராளுமன்ற உறுப்பினரின் பசறை இணைப்பு அதிகாரி தமிழ்ச்செல்வனின் சொந்த பணத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வருடம் பாடசாலை செல்லவிருக்கும் சுமார் 15 பாட சாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று கனவரல்ல C.V.E சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றதோடு இதில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா
பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளது. – வடிவேல் சுரேஷ்
“பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளது.” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். நேற்றைய தினம் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் பதுளை மாவட்ட அபிவிருத்தி சங்க கூட்டம் நடைபெற்ற போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெற்று பதுளை பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் திகழ்கின்றார்கள். இருந்தபோதிலும் பதுளை மாவட்ட பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது குறிப்பாக விஞ்ஞானம் கணிதம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் குறைந்த அளவில் காணப்படுவதினால் மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள ரோபெரி தமிழ் வித்தியாலயம் ஸ்ப்ரிங்வெலி மேமலை , பண்டாரவளை லியங்காவலை பாடசாலைகளுக்கும் காணி பெற்றுக் கொள்வதில் இழுபறிநிலை காணப்படுவதையும் ஜனாதிபதி…
பசறை கோணக்கலையை பிறப்பிடமாகவும் பட்டாவத்தை குருவிகலை தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வானை காலமானார். இவர் நடராஜா மலர்வேந்தனின் மாமியாருமாவர். அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பட்டாவத்தை குருவிக்கலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் – மலர்வேந்தன்
சர்ச்சைக்குரிய அட்டுலுகம சிறுமி கொலை சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை. பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம் பாதீமா அயேஷா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். பாணந்துறை மேல் நீதிமன்றத்தில், சட்ட மாஅதிபர் இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கடந்த மே மாதம் 27ம் திகதி சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த பகுதியிலுள்ள சேற்று நிலத்திற்குள் புதைத்து, இந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. சேற்று நீர், நுரையீரலுக்குள் சென்றமையே, சிறுமி உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்தது. இந்த நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பள்ளி குட்டி என அழைக்கப்படும் பாஃரூக் மொஹமட் என்ற சந்தேகநபர்,…
“Jamb start srilanka” மூலம் 2 பில்லியன் பெருமதியான தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள் வழங்கிவைப்பு.
“Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேண்டுகோலுக்கு அமைய “Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் ரொட்டரி கழகத்தினால் 500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. இப்புலமை பரிசில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப துறையில் நான்கு வருட உயர்கல்விக்காக சுமார் 2பில்லியன் ரூபா பெருமதியான புலமை பரிசில்கள் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 500 இளைஞர் யுவவழங்கி யுவதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் இதன் மூலம் பிளீப்பைன் நாட்டின் பல்கலை கழகத்தில் இத்துறைக்கான உயர்கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 15.12.2022(வியாழன் )அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு ரொட்டரி கழக சர்வதேச தலைவி திருமதி. ஜெனிபர் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றதோடு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அவ்வமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ…