Author: Thana

லிந்துலை ஆக்ரா வாழமலை தோட்டத்தில் முதலாவது சட்ட இளம் மாணிபட்டப் படிப்பை முடித்த ஜெபமாலை செலஸ்டினா. ஹோல்பு ரூக் தேசிய பாடசாலையின் பழைய மாணவியான ஜெபமாலை செலஸ்டினா கடந்த 14/12/22 அன்று கொழும்பு பல்கலைக்கதில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார். இவர் ஹென்போல்ட் வாழமலை தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை சரஸ்வதி ஆகியோரின் மகள் என்பதோடு, குறித்த தோட்டத்தின் முதலாவது சட்ட பீட மாணவி என்பது குறிப்பிடத்தகது. மலைகத்தில் சிறந்த சட்டத்தரணியாக சேவையாற்ற மலையகம்.lk வாழ்த்துகின்றது.

Read More

நு /சென்கிளயார் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று  (19/12/22) நடைபெற்றது. இதனை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர் ள் ஒழுங்கு செய்திருந்தனர். மாணவர்கள் குறித்த தேர்தலில் ஆர்வமாக கலந்துகொண்டனர். அனைத்து பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்புடன் தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது.

Read More

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- மாதம்பை அருள்மிகு முருகப் பெருமான் திருக்கோயில் வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் பெருமானே வளமான பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய் வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய் பெருந்தெருவின் அருகினிலே எழுந்தருளும் பெருமானே பெருமைமிகு பெருவாழ்வைத் தந்தருள எழுந்தருள்வாய் என்றும் அருகிருந்து காப்பு தந்து வாழவைப்பாய் மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய் வெற்றிவேல் தாங்கி நின்று காட்சி தரும் பெருமானே வெற்றிமிகு பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய் ஆற்றல் தந்து ஆதரித்து என்றும் எம்மை வாழ வைப்பாய் மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய் பார்வதியின் இளமகனாய் வந்துதித்த பெருமானே பாவமற்ற பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய் புண்ணியராய் நாம் வாழ வழிகாட்டி வாழவைப்பாய் மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய் வள்ளி தெய்வானையரை உடன் கொண்ட பெருமானே வாழ்க்கையில் மேன்மையினை எமக்கருள வந்தருள்வாய் வல்லமை தந்தெமக்கு வழி காட்டி வாழவைப்பாய் மாதம்பை கோயில்…

Read More

24 வது கொடகே சாகித்திய விழா தேசிய நூலக சபை கேட்போர் கூடத்தில் (15.) சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பொழுது தமிழ் நூல்களுக்கான விருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஓமர் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை வகித்த தேசப்பந்து சிரிசுமன கொடகே, திருமதி நந்தா கொடகே ஆகியோருடன் இணைந்து வழங்கி வைத்தார். 24 வது கொடகே சாகித்திய விழா சிறந்த நாவலுக்கு ஆ.மு..சி வேலழகனின் அன்புடையர் பிறர்க்கு என்ற நாவலுக்கும், சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு பாலரஞ்சனி ஜெயபாலின் நெத்திக்காசு என்ற சிறுகதைத் தொகுதிக்கும், சிறந்த கவிதைத் தொகுதிக்கு ஏ.கே.முஜாரத்தின் கடுவன் பூனை என்ற கவிதைத்தொகுதிக்கும், முதல் நூலுக்கான விருது ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே எனும் நூலுக்கும், இரா.சடகோபனின் மொழிபெயர்ப்பு நூலான தேத்தண்ணிக்கும், ஆக்க இலக்கிய பிரதிப் போட்டியில் தெரிவான சிறந்த நாவலான ஏ.எஸ். உபைத்துல்லாவின் வேராகிப் போன மனிதர்கள் எனும் நாவலுக்கும், சிறந்த சிறுகதைத் தொகுதியான எஸ்.பாயிஸா அலியின் ஒளிப் பொட்டுகளாய்…

Read More

சாதாரண தர பரீட்சையில்  2019.2020.2021 ஆண்டுகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழா இன்று (19/12/22) இடம்பெற்றுது. கிராமிய தோட்ட அபிவிருத்தி மன்றம், நாமகள் ஐக்கிய இளைஞர்,விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் ஸ்டொக்ஹோம் மைதானத்தில் நடைபெற்றது. மன்றத்தின் ஸ்தாபகர்  மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஜோர்ஜ் கேசவன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்ணிட்டு அவரின் உருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, எட்டு அணிகள் பங்கு பற்றிய கரப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள் ஊர்வலமாக வரவேற்கப்பட்டதோடு அவர்களின் பெற்றோர்களையும் நிகழ்வில் மாலை அணிவித்து அவர்களின் பிள்ளைகளையும் நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. பாரதி தமிழ்வித்தியாலயத்தின் அதிபர் வாசுதேவன், அம்பகமுவ செயலக பிரிவின் விளையாட்டு அதிகாரி அரவிந்த மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி கனகராஜ், நோர்வுட் பொலிஸ்உத்தியோகஸ்தர் குமார், சமூக நிறுவனங்களின் பிரதநிதிகளான மோகன். ரஜனிகாந்த், திருமதி.மைதிலி, திருமதி சுலோசனா, மன்றத்தின் தலைவர்திருமதி.பத்மா, திருமதி .சுமதி, .சிவச்சந்திரன், திருமதி.தவமலர். ரவீந்திரன்ஆகியோர் கலந்து…

Read More

தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி தொழிலாளர்கள்.பணிபகிஸ்கரிப்பு ஹொரன பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட மஸ்கெலிய சாமிமலை தொழிற்சாலை பிரிவு (ஸ்டொக்ஹோம்)தொழிலாளர்கள் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். குறித்த தோட்டத்தில் பணியில் இருக்கும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் தொழிலாளர்களை முறையற்ற விதத்தில் நடத்துவதாகவ தெரிவித்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென கடந்த முதலாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் பின்னர் 06 ஆம் திகதி ஹட்டன் தொழில் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஸ்டொக்ஹோம் தொழிற்சாலை பிரிவின் தலமை வெளிக்கள உத்தியோகஸ்தர் இடமாற்றம் செய்ய வேண்டுமென இணக்கம் காணப்பட்ட நிலையில் இன்று அந்த தலமை வெளிக்கள உத்தியோகஸ்தரை மீண்டும் தோட்ட முகாமையாளர் பணிக்கு பலவந்தமாக அமர்த்த முட்பட்டநிலையிலேயே இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

பத்மநாதன் நிரோஷ்குமார் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பசறை இலக்கம் 04 தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக கடமைகளை இன்று (19)பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடராஜா மலர்வேந்தன்

Read More

சிங்கப்பூரில் சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் அரக்கோணம் மங்கம்மாபேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் திவாகர் ஜூனியர் பிரிவில் விளையாடி இரண்டு தங்கம் என்று சாதனை படைத்தார். அதேபோல் இந்தியா யங் ஜூனியர் போட்டியில் 7 ம் வகுப்பு படிக்கும் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த சர்வாணி என்ற மாணவி 2 வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மாஸ்டர் யுவராஜ் லோகநாதன் தலைமையில் 2 தங்கப்பதக்கம் வென்ற வீரர் திவாகர், 2 வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை சர்வாணி ஆகியோருக்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பள்ளி தாளாளர் விமலா உற்சாக வரவேற்பு அளித்தார். பதக்கம் என்று நாடு திரும்பிய தங்கம் வென்ற வீரர் திவாகர், வெள்ளி வென்ற வீராங்கனை சர்வாணி ஆகியோருக்கு அரக்கோணம் ரயில்வே மற்றும் பயிற்சியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு…

Read More

டி.சந்ரு , தி.தர்வினேஷ் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர் குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சுமார் 51 வயதுமதிக்கத்தக்க  ஆண் எனவும் குறித்த சடலம்உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி மீசாலை – பன்றிக்கேணி – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய்க் காட்சிதரும் அழகன் திருக்குமரன் ஆனந்தமாய் நாம் வாழ வழி அருளிடுவான் நெஞ்சகத்தில் நின்றிருந்து நிம்மதியும் தந்திடுவான் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம் மறமழித்து அறம் காக்க வந்துதிக்கும் திருக்குமரன் மாண்புடனே நாம் வாழவழி அருளிடுவான் சிந்தையிலே உறைந்திருந்து சீர்வாழ்வைத் தந்திடுவான் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம் யாழ்ப்பாண திருநிலத்தில் வந்தமர்ந்த திருக்குமரன் வாழ்வு சிறப்புடனே நாம்வாழ வழி அருளிடுவான் ஆழ்மனதில் நிறைந்திருந்து ஆறுதலைத் தந்திடுவான் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம் கணபதிக் கிளையோனாய் பேறுபெற்ற திருக்குமரன் ஆணவத்தையடக்கி நாம் வாழ வழி அருளிடுவான் கணப்பொழுதும் உடனிருந்து காவலையும் தந்திடுவான் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி அடிதொழுவோம் நலன் பெறுவோம் வாழ்வினையே வளமாக்கி மனநிறைவு தரும் திருக்குமரன் பாழ்படா…

Read More