Author: Thana

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லொத்தர் சபையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை வேலை வாய்ப்புக்காக வழி நடத்தும் நிகழ்ச்சி நேற்று (12) கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய லொத்தர் சபையினால் இன்று அதிர்ஷ்ட இலாப  சீட்டு விற்பனை முகவர் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை சமூகமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் இது போன்ற பல தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு திட்டமிடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சம்பத் பண்டார ஜயசிங்க, வைத்தியசாலை மனநல மருத்துவர் செல்வி நிர்மலா சில்வா மற்றும் கண்டி தேசிய லொத்தர் சபையின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – பாலையூற்று அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில் நானிலத்தில் நல்லாட்சி நாளும் நிலவிவிட நல்லவர்கள் வாழ்வில் எழுச்சி கிட்டிவிட நிம்மதியே எங்கும் நிறைந்து அமைதி நிலவிவிட அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே உன்னடியார் வாழ்வு வளம் பெற்றுவிட உள்ளங்களில் நல்லெண்ணம் நின்று நிலைத்துவிட உண்மை யெங்கும் உயர்ந்து நிலைத்து நிலவிவிட அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே எங்கள் மண்ணின் காவலனாய் இருந்து காத்துவிட எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கிவிட ஏற்றமுடன் எழுச்சி பெற்று வாழ்ந்துவிட அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே வளமான பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட வரலாற்றில் எம் பெருமை நிலைத்து நின்றுவிட வற்றாதவுன் கருணை நாம் என்றும் பெற்றுவிட அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே வெற்றிகளைப் பெற்று நாம் வீரமாய் வாழ்ந்துவிட ஆற்றலுடன் என்றும் முன்னேறிச் சென்றுவிட அனைத்து நலன் பெற்று…

Read More

நானுஓயா நிருபர் தி.தர்வினேஷ் அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்திருந்து தேயிலை மலைகளுக்கு உரம் ஏற்றிச் சென்ற ட்ராக்டர்  வண்டி கடந்த 05 ம் திகதி அன்று குடை சாய்ந்ததில் மூவர் படுங்காயங்களுடன் அக்கரப்பத்தனை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நிலையில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய சங்க புள்ள தங்கையா என்ற இரண்டு பிள்ளைகளில் தந்தை கடந்த 11ஆம் திகதி காலை உயிரிழந்தார். இவ்வாறு இறந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்க்கு தோட்ட நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரி கல்மதுரை டொரிங்டன் அலுப்புவத்த மோர்சன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 900 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த வருகின்றனர். விபத்தில் இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களை…

Read More

இராகலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட மகாகவி பாரதியின் ஜனன தினம்! இராகலை உயர் பாடசாலை பாரதி திருவுருவச்சிலை முன்றலில் அதிபரின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் அஞ்சலி நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன வெகு விமரிசையாக  (11/12/22) இடம்பெற்றன. மேலும் இந்நன்னாளில் இராகலை மற்றும் அதனை சூழ வறுமையின் பிடியில் வாடும் மாணவர்களின் கல்விக்கு புத்தாண்டில் கை கொடுக்கும் முகமாக அனைவரும் ஒன்றிணைந்து கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினையும்  ஆரம்பித்து வைத்தனர்.

Read More

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில்…

Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது புதல்வரைத் தாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிசார் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றுமுன்தினம் முன்னாள் உபவேந்தரின் உத்தியோகபூர்வ வீட்டை முற்றுகையிட்டு சுமார் 300 மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தை அடுத்து பேராதனைப் பொலிசார் சிலர் அங்கு விஜயம் செய்துள்ளனர். இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில்தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் அங்கு காணப்படவில்லை. முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்னவின் புதல்வர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

Read More

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது. அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று குறிப்பிட்டார். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

ஓமானில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரதிநிதிகள் ஓமானுக்குச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள இலங்கையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இவர்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டவிதிகளை மீறிய வகையில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பிய சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் விசேட கவனத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.

Read More

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Read More