Author: Thana

மேல்மாகாணம்- கம்பஹாமாவட்டம் வத்தளை ஹேகித்த – அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மனவமைதி தந்தெம்மை வாழவைக்கும் வேல்முருகா மானமுடன் நாம் வாழ வழி அமைக்க கருணை செய்வாய் தளம்பாத மனவுறுதி தந்தெமக்கு அருளவேண்டும் ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்கும் வேல் முருகா மருட்சியின்றி நாம்வாழ வழி அமைக்க கருணை செய்வாய் மழுங்காத மனவுறுதி தந்தெமக்கு அருளவேண்டும் ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா வருந் துன்பம் தடுத்தெம்மை வாழவைக்கும் வேல்முருகா வீரமிகு வாழ்வுதனை நாம் வாழ வழி அமைக்க கருணை செய்வாய் திறமையுடன் முன்னேறும் ஆற்றல் தந்தெமக்கு அருளவேண்டும் ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா வெற்றிவேல் தாங்கி நின்று வாழவைக்கும் வேல்முருகா வேற்றுமை களைந்து நாம் வாழ வழியமைக்க கருணை செய்வாய் வற்றாத நல்லுணர்வு தந்தெமக்கு அருளவேண்டும் ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே…

Read More

பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் வென்றுள்ளார். https://youtu.be/wsX3ycEKgDo மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 02 தங்கப்பதக்கங்களையும் 02 வெள்ளிபதங்களையும் பெற்றதோடு பெங்ளூர் உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டிகலில் 02 தங்கப் பதகங்களையும் 01 வெள்ளி உட்பட 01 ஒரு வெங்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இவர் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு தங்கபதக்கங்கள் அடங்களாக எட்டு பதக்கங்களை வெற்றியீட்டி மலையத்துக்கு பெருமைதேடி தந்த  சேர்ந்ததுரைசாமி விஜிந்துக்கு  மலையகம் .lk யின் வாழ்த்துக்கள்.

Read More

சதோச’ 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக  புதிய விலைகள் இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக  லங்கா சதொச தெரிவித்துள்ளது. விலை குறைப்புக்கு அமைவாக  ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். கோதுமை மா ஒரு கிலோ  15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 250 ரூபாவாகும். ஒரு கிலோ பூண்டு அல்லது உள்ளி 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும். ஒரு கிலோ பெரிய வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது  அதன் புதிய விலை 190 ரூபாவாகும் உள்ளூர் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபா.

Read More

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வைரவப் புளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில் எட்டுத்திக்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச் செய்வாய் நன்மைகளை வைரவப் புளியங்குளம் அமர்ந்த ஆதிவிநாயகப் பெருமானே குளம் சூழ்ந்த பெருநிலத்தின் மத்தியிலே குடி கொண்டாய் அலைமோதும் மனங்களுக்கு அமைதியையே தருவோனே நிலை குலையா நிம்மதிக்கு உன்னருளே வேண்டுமைய்யா தலைநிமிர்ந்து வாழ வைப்பாய் ஆதிவிநாயகப் பெருமானே எழில் சூழ்ந்த தமிழ் மண்ணின் மத்தியிலே அமர்ந்தவனே வழித்துணையாயிருந் தெமக்கு நேர்வழியைக் காட்டிடைய்யா இழி நிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு விழிமலர்ந்து காப்பவனே ஆதிவிநாயகப் பெருமானே சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை தருவோனே கிலிகொண்டு துவண்டு நிற்போர் துயர் களைந்து அருள்வோனே வலிந்து வரும் துன்பங்களைப் போக்கி அருள் செய்திடுவாய் நலிவில்லா நலமளிக்கும் ஆதிவிநாயகப் பெருமானே நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும் உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும் மென்மையுள்ளம் கொண்டவனே…

Read More

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட பூனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் வைத்து (10) வெளிநபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (12) பண்டாரவளை நகரில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோஷங்கள் எழுப்பினர். இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=DPB4h0PqDGM&feature=youtu.be

Read More

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Read More

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் நகர சபைகளாக மாற்ற முடியுமா என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சரவையில் பிரதமரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Read More

காணாமல் போயிருந்த பெண்ணொருவர், காசல்றி நீர்த்தேக்க பகுதியிலிருந்து இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா- காபெக்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆறுமுகம் கமலம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீர்த்தேக்கத்திலிருந்து 300 மீற்றர் தொலைவிலேயே பெண்ணின் வீடு காணப்படுவதாகவும், நேற்று (12) இரவிலிருந்து   இப்பெண் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காணாமல் போன பெண் உறவினர்களால் தேடப்பட்ட போது,  இன்று  காலை 7.30 மணியளவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார். ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கிராம அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஓய்வூதியர்களின் கையொப்பமிடப்பட்ட படிவத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாரிடம் ஒப்படைப்பது அவசியமாகும். அந்தத் தகவலின்படி, ஓய்வூதிய அதிகாரிகள் தரவுக் கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அதுவரை உறுதிப்படுத்தப்படாத…

Read More

பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையில் பல்துறை ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்தவர்களான அண்ணாவிமார்களுக்கான மாநாடொன்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 14.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30மணிக்கு மட்டக்களப்பு, பிள்ளையாரடி, தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வண்ணாவிமார் மாநாடு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. ச. நேசராஜா ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி அவர்களும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சி. சுதாகர் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ்வண்ணாவிமார் மாநாட்டிற்கு கௌரவ…

Read More