Author: Thana
தென்மாகாணம் – ஹம்பாந் தோட்டை மாவட்டம்- ஹம்பாந்தோட்டை- வில்மட்தெரு – அருள்மிகு கதிரேசன் திருக்கோயில் தென்னிலங்கை கோயில் கொண்ட திருமுருகா அருள்தரவா இன்னல் களைந்தெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய் துன்பம் அண்டா நிலை தந்தெம்மை வாழவைப்பாய் ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா வேல் தாங்கி நின்றிருக்கும் வேல்முருகா அருள்தரவா அல்லல் அணுகாத நல்வாழ்வை உறுதி செய்வாய் வல்லமை தந்தெம்மை வளமாக வாழவைப்பாய் ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா ஆணவத்தை அடக்கிடவே அவதரிக்கும் திருமுருகா அருள்தரவா ஆசை அறுத்தெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய் ஆறுதலைத் தந்தெம்மை அனுதினமும் வாழவைப்பாய் ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா கோல மயில் மீதமர்ந்து குறைகளையும் திருமுருகா அருள்தரவா குறையற்ற வாழ்வுதந்து நல்வாழ்வை உறுதி செய்வாய் குற்றம் குறை பொறுத்தெம்மை குறையின்றி வாழவைப்பாய் ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா அன்னையர் இருவரையும் அருகு கொண்ட திருமுருகா அருள்தரவா அச்சம் அகற்றியெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய் அனைத்து நலன் தந்தெம்மை…
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மின்சார கட்டணம் அபரிமிதமாக அதிகரிக்கப்படுவதை ஆட்சேபித்து,மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அம்மாசி நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று லிந்துலை மெராயா நகரில் (11/12/2022) நண்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக உட்பட தொழிலாளர்கள் , வர்த்தக சமூகம், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் -அரசியல்வாதிகளின், மின்சார சபையினரின் முறையற்ற நிதி நிர்வாகம், ஊழல்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நஸ்டங்களை மக்கள் மீது சுமத்துவதை வன்மையாக கண்டித்ததோடு மீண்டும் கட்டண ஊயர்வை ஏற்றுக்கொள்ள இயலாதெனவும் கட்டணத்தை செலுத்த முடியாது எனவும் உறுதி மொழி மேற்கொண்டனர்.
பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கி வரும் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Aylesbury, Roman Park மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஒன்றியத்துக்கு புதிய அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கடந்த 17 வருடங்களாக சேவையாற்றிய ஐயர்தேவன் முத்து, சுப்பிரமணியம் ஆகியோரை B.A.காதர் மற்றும் அருளீஸ்வரன் ஆகியோர் கௌரவித்தனர். மேலும் நிகழ்வில் புதிய நிருவாக குழு தெரிவு செய்யப்பட்டது,அதன் அடிப்படையில் புதிய தலைவராக சிவசங்கரும் செயலாளராக திருமதி. மதிவதனாவும் பொருளாளராக பாலசேகரும் தேர்வுசெய்யப்பட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பிரித்தானிய மலையக மக்கள் ஒன்றியமானது பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதோடு மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக நீண்டகாலமாக செயலப்பட்டு வரும் அமைப்பாகவும் இருக்கின்றது.
டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா பொலிஸாரால் மரம் நடுகை! சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து நானுஓயா பொலிசாரினால் மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு (11/12/22) இடம்பெற்றது . இதன்படி நானுஓயா பொலிஸாரால் ,நு/எபற்ஸ்போட் தமிழ் வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்து கடந்த வாரம் நானுஓயா பிரதான வீதி ஓரமாகவும் ,பாடசாலையை சுற்றியும் மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் வீஜிசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிசாரும் , பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா- ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் 09 தங்க பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வென்றுள்ளார். மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 04 தங்கப்பதக்கங்களையும் ,மதார்ஸ்டா உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 05 தங்கப்பதக்கங்களையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார். மேலும் இவர் பிரதிநிதித்துவ படுத்திய 800 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தை இலங்கை குழு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட பிரதேசங்களில் சுகாதார பாதுகாப்பு செயல்திட்டங்கள் முன்னெடுப்பு
அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு, சுற்றாடல் சுத்தம் ,மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதர பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்தவராம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அக்கரபத்தனை சுகாதார அதிகாரிகள் தமது குழுவோடு மெராயா, மன்றாசி, பசுமலை போன்ற நகரங்களில் தமது மேற் பார்வை பணிகளை மேற்கொண்டார்கள். இது தொடர்பில் தெரிவித்த பிரதேச சபை தலைவர் எதிர்காலத்தில் சிறந்த முறையில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நல்ல மாற்றங்களை உருவாக்க கூடிய விடயங்களை செயல்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அருள்மிகு உடுக்கிவளை மகாகணபதிப் பிள்ளையார் திருக்கோயில் வட்டு மாநிலத்திலே கோயில் கொண்ட கணபதியே வாட்டவரும் துன்பங்களைப் போக்கியெமக் கருள்வோனே நாற்றிசையும் நன்மைகளைப் பரப்பிவிடும் தலைமகனே உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா எங்கும் நலன் பெருகிவிட அருளளிக்கும் கணபதியே ஏங்கி நிற்கும் மக்களின் ஏக்கம் போக்கிக் காப்போனே என்றும் உடனிருந்து அருள் பரப்பும் பெருமானே உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா எழில் சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் கணபதியே எதிர்காலம் வளமுறவே வாழ்த்தி எமக்கருள்வோனே ஏற்றமிகு சிந்தனையை எங்குமே பரவவிடும் சிவன் மகனே உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா அமைதி கொண்ட திருவுருவம் தாங்கி நிற்கும் கணபதியே அச்சமில்லா மனநிலையை தந்தெமக்கு அருள்வோனே அல்லல் அகற்றி அரவணைக்கும் பேரருளே உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா வடஇலங்கை காட்சி தந்து வளமளிக்கும் கணபதியே வரும் நோய்கள் போக்கியெமக்கருள்வோனே வற்றாத துணிவினையே தந்து காப்பளிக்கும் உமைமகனே உடுக்கிவளைப் பிள்ளையாரே…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யூரி மாப்பாகளைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான இடத்தினை சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது. சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (short gun) ஒன்றினையும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்களும் கைப்பற்ற பட்டதோடு 54 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கைது விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.ராமு தனராஜா
மலையக மக்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்து இருநூறு வருடங்கள் எட்ட உள்ள நிலையில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாத மலையகத்தின் ஹட்டன் நகரில் கடந்த டிசம்பர் 6,7 மற்றும் 8ம் திகதிகளில் Organization of inspire People நிறுவனத்தின் அங்கத்தவர்களால் மலையகத்தில் முதல்முறையாக சமகால ஓவிய கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நவீன சமகால ஓவிய நுட்ப முறையை கையாண்டு வரையப்பட்ட மிக துல்லியமான நுட்பம் மிகுந்த ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களில் எவ்விதமான நிற பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மலையகத்தின் அடையாளமான தேயிலை சாயத்தை வைத்தே குறித்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் அற்ற மலையகத்தை உருவாக்குவதற்காக இந்த கண்காட்சியில் எவ்விதமான பிளாஸ்டிக் பொருட்களும் கையாளவில்லை, என்பதுடன் அதற்கு பதிலாக சணல் சாக்கு, இதுவரை மலையக மக்களால் பாவனைக்குட்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது, ஒரு சிறப்பு அம்சமாகும். Manipulate…