Author: Thana
கொழும்பில் இன்று(10) சில பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளுக்கான இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுகிறது: கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கடுவெல மாநகர சபை, மஹரகம,கொலன்னாவ நகரசபை, கோட்டே, பொரலஸ்கமுவ , கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை பிரதேசங்கள், இரத்மலானை , கட்டுபெத்த
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு சொல்லும் பாதையை சீர்திருத்தும் பணிகள் ஆரம்பம்
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு சொல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன், டயகம முதல் தலவாக்கலைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உகந்த நிலையில் காணப்பட்டது.  குறித்தப் பாதையூடாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேரூந்தும் இரண்டு மாதத்திற்கு முன்பு இயக்கப்பட்டது. எனினும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட சீரற்ற மழைக்காரணமாக குறித்த பாதையில் உள்ள பாலம் ஒன்று பகுதியளவில் உடைந்து போக்குவரத்துக்கு தடையேற்ப்பட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து சேவையும் கடந்த சில காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதையை புணரமைக்க இலங்கை மின்சார சபையில் அகற்றப்பட்ட மின்சார தூண்கள் வழங்ப்பட்டுள்ளதுடன் கிறன்லி தோட்ட நிர்வாகம் பாலத்தின் சீர்த்திருத்த பணிகளை முன்னேடுத்தப் போதும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக பாதையை புணரமைக்க வேண்டாமென குறிப்பிட்டதன் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பிரதேசவாசி ஒருவர்…
வடமத்திய மாகாணம் – பொலன்நறுவை மாவட்டம் – பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் சோழத் தமிழ் மன்னர் ஆட்சி செய்த பூமி சோதனைகள் பல கண்ட தமிழர் வாழும் பூமி சோர்வகற்றி வாழவைக்கும் விநாயகர் பூமி செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி இராஜேந்திர சோழன் ஆட்சி செய்த பூமி இதயத்தில் விநாயகர் எழுந்தருளும் பூமி இன்னல் களைந் தெம்மை வாழவைக்கும் பூமி செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி சித்திகள் தந்தருளும் சித்திவிநாயகருறை பூமி சீர்மைமிகு நல்வாழ்வைத் தந்தருளும் பூமி சீறிவரும் கொடும் பகையை அடக்கி விடும் பூமி செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி நாற்புறமும் செழிப்புடைய மருதநிலப் பூமி நம் தமிழர் வாழுகின்ற நலமளிக்கும் பூமி நெறி தவறா வாழ்வு தரும் ஐயன் உறை பூமி செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி எழுச்சி தரும் விநாயகர் வந்துறையும் பூமி எட்டுத்திக்கும்…
சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று ஹட்டன் டீவிலா ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை டிக்கோயா க்ரோஸ்ஓவர் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. வெளிவந்த பெறுபேறுகளின் படி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவப்படுத்தியதோடு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
தி.தர்வினேஷ் நுவரெலியாவில் பேருந்து விபத்து! ஒருவர் பலி அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுல் வீதியினை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றன . மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் உடுப்பியில் நடைபெற்று வரும் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் இதுவரை 05 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். https://youtu.be/-i1ba9P-dpo
வடமாகாணம் – மன்னார் மாவட்டம் மன்னார் எழுத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் தாயாக இருந்துலகைக் காக்கின்ற அம்மா தளர்வில்லா நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் தளராத மனவலிமை நாம் பெற்றுவாழ அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா மங்காத பெருமையினைத் தருகின்ற அம்மா மாசில்லா நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் சீரான நல்வழியை நாம் பெற்றுவாழ அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா மன்னார் பெரு நிலத்தில் உறைகின்ற அம்மா மாண்புமிகு நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் மகிழ்வு கொண்ட நல் வாழ்வை நாம் பெற்றுவாழ அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா நல்வரங்கள் தந்தெம்மை வாழ்த்துகின்ற அம்மா நிம்மதி நிறை நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் நேர்மை கொண்ட நல்வாழ்வை நாம் பெற்றுவாழ அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா தமிழ் ஒலிக்கும் திருநிலத்தில் கோயிலுறை அம்மா திறமைமிகு நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் துணிவு கொண்ட பெருவாழ்வு நாம் பெற்றுவாழ அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும்…
மத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் பல பாகங்களில் நிலவும் குளிரான காலநிலைக்குக் காரணம், வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (8) கண்டியில் வளிமண்டல வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. இன்று மாலைக்குப் பின்னர், நிலைமை சீரடைந்து விடலாம் என கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவிற்குப் பொறுப்பான பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். இன்று பகல் எமது நிலையத்திற்குக் கருத்து வெளியிட்டபோது, சராசரி வளித் தரச் சுட்டெண் 150 ஆக இருந்ததென திரு. பிரேமசிறி தெரிவித்தார். இது சிறுபிள்ளைகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் போன்ற உணர்திறன் மிக்கவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை என்பதால், இத்தகையோர் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுவாச நோய் நிபுணர் டொக்டர் துஷ்யந்த மெதகெதரவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்டி நகரத்தில் வளிமாசடைந்திப்பதால், அந்நகருக்குள் அனாவசிய நடமாட்டத்தை தவிர்த்துக்…
சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசியதினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனைத்தொடந்தே இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் இவ்வாறு அறிவித்துள்ளார் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிந்துவழ்ந்துள்ளன. நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் நேற்று (07) இரவு முதல் பலத்த காற்று வீசுகின்றது. அதே வேளை கடுமையான குளிர் கால நிலையும் நிலவுகின்றது. வலப்பனை பிரதேசத்தில் ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால் வீதியோரங்களில் பாரிய மரங்கள்…
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.