Author: Thana
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) நண்பகல் 12.27 மணிக்குக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட விசேட நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமானது. கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையிலேயே இந்தத் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்போது, நீதிமன்றத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன. எனினும், பிரதிவாதிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டியிருந்ததால், வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று பிற்பகல் 1.45 வரை ஒத்திவைக்கப்பட்டது. சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 குண்டுதாரிகளுக்குத் துணைபுரிந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, விசேட நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தலைமையில் செல்லவுள்ள இந்தக் குழுவில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர். இந்த விசேட தூதுக்குழுவினர் சவூதி அரேபிய மன்னரை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பிவைக்கப்படும் விசேட கடிதத்தை அந்தக் குழு சவூதி மன்னரிடம் கையளிக்கவுள்ளது. அதேநேரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள சிவராசா அனோஜனின் வழக்கிற்காக, இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாகப்…
அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை
அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார். இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனவும் அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றுக்கு இவ்வாறு அறிவித்தார்.
20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!
கொழும்பு சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை =செப்டம்பர் 20 )மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 20 ஆவது ஆண்டு ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கோலாகலமாக அரங்கேறியது. காலையில் கொழும்பின் வானம் லேசான மேக மூட்டத்துடனும் குளிர்ந்த காற்றோடும் விழித்தெழுந்தாலும், களத்தில் வீரர்களின் வியர்வை சிதறச் செய்யும் இதமான சூழலே நிலவியது. வெறும் கோப்பையை வெல்வது மட்டுமல்லாமல், மலையகத்தின் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வி ஒளிக்காக நிதி திரட்டும் உன்னத நோக்கோடு இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 39 அணிகள் களம் கண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. பரபரப்பான இறுதிப் போட்டி இறுதிப் போட்டி வரை நீடித்த அட்லஸ் சிசி (Atlas CC) மற்றும் யுவர்போய்ஸ் (Youth Boys) அணிகளுக்கிடையேயான மோதல், பார்வையாளர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது: முதல் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய அட்லஸ் சிசி அணி, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்டு,…
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர். சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள தமது மகனின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். பெற்றோரின் கோரிக்கையைக் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்கச் சட்டரீதியாகவும் இராஜாங்க மட்டத்திலும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சவூதி அரசாங்கத்திடம் இது தொடர்பாக எழுத்துமூலமான பொதுமன்னிப்புக் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியான அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முஹம்மர்…
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். இச்சந்தப்பில் சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவராசா அனோஜன் அவர்களின் விடுதலை தொடர்பான விடய விபரங்களைக் கேட்டறிந்தார். மேலும் சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்த பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்,சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என பெற்றோர் மத்தியில்…
லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம். லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண் தொழிலாளர் குழுவினர் கொழுந்து பறித்து கொண்டிருக்கும் போது குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (21) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த அப்பாவு சுப்பிரமணியம் (வயது 71) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளன. கெளசல்யா
தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு
தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது. 10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் காபனீரொக்சைட் (CO2) வெளியேற்றத்தை சுமார் 6,440 மெட்ரிக் தொண்களினால் குறைத்துக் கொள்ள முடிவதுடன், ஆண்டுதோறும் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும்…
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம் எதிர்காலத்தில் இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாகக் கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (19) நாள் முழுவதும் ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு பொருந்தும் கண்ணாடிகள் வழங்கும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன், தனியார் துறையின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற கண்ணாடிச் சட்டங்களை (பிரேம்கள்) பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழினுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, நாட்டின் அனைத்து…
பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.
வி.தீபன்ராஜ் வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள். ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் (20) கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுண் மதிக்கத்தக்க 3 இலட்சத்து 90ஆயிரம் ரூபாய் பெறுமதி யான தங்க கைச்சங்கிலி ஒன்று கண்டெ டுக்கப்பட்டு பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த தங்கச் கைச்சங்கிலியை கண்டெடுத்த இருவரும் உரிமையாளரை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதன் உரிமையா ளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று சங் கிலியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.