Author: Thana
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வின் சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் சர்வதேச சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ், செப்டம்பர் 25-ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை இத்தேசிய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள், அரச பாதுகாப்பிலுள்ள சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இலக்காகக் கொண்டு, நாடு தழுவிய ரீதியில் விசேட திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் பிரதான தேசியக் கொண்டாட்ட நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷண ஆகியோரின் பங்கேற்புடன், ஒக்டோபர் முதலாம் திகதி மாட்டேகொட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே தலைமையிலான கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவதை ‘புதிய நியமனமாக’ கருதாமல், ‘பதவி உயர்வாக’ கருதும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நடைமுறையால் சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கல்விமாணி B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 2 ஆம் தரத்திற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண மட்டத்திலுள்ள பாடசார் வெற்றிடங்களுக்கு அமைவாக இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, தென் மாகாணத்தில் 261 ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் காவலாளிகளுக்கு…
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்
நடைமுறைப்படுத்தப்படும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹிணி குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் அவர்கள் நேற்று (22) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம் 2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 2023/2024 கல்வி ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவு ரீதியாகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பாராட்டப்பட்டனர். அதன்போது, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் உயர் சித்திகளைப் பெற்ற தலா பத்து மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், இம்முறை அந்தத் தொகையை இருபது மாணவர்களாக அதிகரித்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதன்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 3,000 க்கும் அதிகமான மாணவர்கள்…
புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோர் புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (23) முற்பகல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-09-23
ஏ.எம். ஜலீல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் பிராந்திய சேவையான கந்துரட்ட (கண்டி) வானொலி ஒலிபரப்புச் சேவை, மாணவர் மாணவியர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறியொன்றைக் கண்டி வானொலி அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்தவுள்ளது. 9 வயது முதல் 18 வயது வரையான மாணவர் மாணவியர்கள் கலந்துகொள்ளவுள்ள இப்பயிற்சி நெறியில், தொடர்பாடல் திறன், குரல் வளம், இலத்திரனியல் ஊடக மொழிப் பயன்பாடு, நேரலை நிகழ்ச்சி மற்றும் வர்ணனைகள், கலந்துரையாடல்கள், சிறுவர் நாடகம், மைக்ரோபோன் கையாளும் நுட்பங்கள் உள்ளிட்ட அவசியமான துறைகள் தொடர்பாக மாணவர்களின் தொடர்பாடல் திறனூடாக ஆளுமையை மேம்படுத்தும் வகையில் துறைசார் நிபுணர்களால் இப்பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது. அத்துடன், பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குப் பயிற்சியின் இறுதியில் கூட்டுத்தாபளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கந்துரட்ட வானொலி நிலையத்துடன் தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.
நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை
நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் முக்கிய சுற்றுலா நகரமாக நுவரெலியா விளங்குகிறது. இந்நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட புனித சவேரியார் கல்லூரி அமைந்துள்ளது. நீண்டகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட இப்பாடசாலை, பல கல்வியாளர்களையும், பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களையும் உருவாக்கியுள்ளதுடன், விளையாட்டுத் துறையிலும் திறமையான வீரர்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரிவுகளில் மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலை, நுவரெலியா நகரின் கல்வி வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. எனினும், பாடசாலையின் ஆரம்பப் பிரிவிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பழமையான கட்டிடம் தற்போது கடுமையாக சேதமடைந்த நிலையில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு பொருத்தமற்றதாக காணப்படுவதால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் காணப்படும் இந்தக் கட்டிடம், பாடசாலையின் வளாகத்திற்குள் ஒரு பயனற்ற பகுதியாக…
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (22) அறிவித்துள்ளது. நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகியோர் அடங்கிய குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாதக் கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 269 பேர் உயிரிழந்து, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில்…
2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் வழங்கி வருகிறது. சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன. விசாரணைகளின் முடிவில், வழக்கில் சம்பந்தப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 9 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதி மன்றம் அறிவிக்க இருக்கின்றது.