Author: Thana
கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனமாக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அபாயகரமான பகுதிகள் மற்றும் மாவட்டங்கள்: கட்டம் 3 – சிவப்பு எச்சரிக்கை (வெளியேறுவதற்கான எச்சரிக்கை) காலி: நெலுவ களுத்துறை: வலல்லாவிட்ட கண்டி: பஸ்பாகே கோரளை கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு இரத்தினபுரி: இரத்தினபுரி கட்டம் 2 – அம்பர் எச்சரிக்கை (அவதானமாக இருப்பதற்கான எச்சரிக்கை) கொழும்பு: பாதுக்கை காலி: நாகொட, தவலம களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர நுவரெலியா: தலவாக்கலை இரத்தினபுரி: பெல்மடுல்ல,…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…
அப்புத்தலை தங்கமலை தோட்டத்தில் வீடுகள் மீது தொடரும் கல்வீச்சுத் தாக்குதல்கள்: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!
அப்புத்தலை தங்கமலை தோட்டத்தில் வீடுகள் மீது தொடரும் கல்வீச்சுத் தாக்குதல்கள்: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்! அப்புத்தலை – தங்கமலை தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், பொலிஸார் தமது முறைப்பாடுகளைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த அச்சுறுத்தல் சூழல் குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “நேற்றைய தினமும் எமது வீட்டின் மீது தொடர்ச்சியாக கற்கள் வீசப்பட்டன. இந்தச் திடீர் தாக்குதலாலும் பயங்கர சத்தத்தாலும் எனது சிறு குழந்தை சற்று நேரம் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகித் தவித்தது. பாதுகாப்பற்ற சூழலில் எமது வாழ்வாதாரமும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது”என வேதனையுடன் தெரிவித்தார். புதிதாகக் குடியேறியுள்ள மக்களின் அமைதியைக் குலைக்கும் வகையிலும்,…
அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் பாய்ந்த மின்னல் தாக்குதல் அந்த மாணவனையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவன் அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக, பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. க. யோகா இன்று இப்பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளுடன் மண்சரிவும் பிரதான வீதிக்கு வந்துகிடைத்துள்ளது. இதனால் அப்பகுதிக்கான போக்குவரத்துச் செயற்பாடுகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸாரும், அனர்த்தப் பாதுகாப்புப் பிரிவினரும் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதையைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் கொட்டகலை நிருபர் சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்குமாறு கோரியும் “”மனிதாபிமான வேண்டுகோள்” எனும் தலைப்பில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்பின் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொட்டும்மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!
தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்! விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், கடந்த நாட்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது. முன்னதாக போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது. எனினும், தொடர்ச்சியான மழையால் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் இந்த வீதி மற்றும் பால பிரச்சினைக்கு தற்காலிக சீரமைப்புகள் மட்டுமன்றி, நிரந்தரமான பாலம் அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் பாதுகாப்பையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் கருத்தில்…
மலையகத்தின் பெருமை தினேஷ் கனகராஜிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்! கோலாகலமாக இடம்பெற்ற அரச ‘சரசவி’ திரைப்பட விருது விழாவில், சிறந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை மலையகம் பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இயக்குனர் தினேஷ் கனகராஜ் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி மலையக சமூகத்திற்கும், ஒட்டுமொத்த கலை உலகிற்கும் பெருமை சேர்க்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், தற்போது முழுநேர சினிமா இயக்குனராக இலங்கையின் சவாலான திரைத்துறையில் காலடி பதித்து வெற்றிகளைக் குவித்து வருவது பாராட்டுக்குரியது. இவர் இயக்கிய ‘அதிரன்’ திரைப்படம் பலரதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மலையகப் பின்னணியில் படமாக்கிய விதம், தொழில்நுட்ப நேர்த்தி, பின்னணி இசை உள்ளிட்ட பலம்சங்கள் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துள்ளன. மேலும், இப்படத்தின் நாயகன் சுதர்சன் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தற்போத்து சிங்கள மொழித் திரைப்படமாக இயக்கத் தயாராகி வரும் இயக்குனர்…
அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் பேச ரிசாட் பதியுதீன் முயற்சி! இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக் கருத்தை முன்வைத்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை, நற்பிட்டிமுனை இளைஞர் அனோஜனின் நிலைமை தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் உடனடியாகப் பேசுவதற்குத் தொடர்புகொண்டேன். எனினும், அவர் தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் அவரை நேரடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. இருப்பினும், இப் பாரதூரமான விவகாரத்தில்…