Author: Thana
அரசு பணி, வீடுகள் தருவதாகக் கூறி மோசடி: நுவரெலியா மாவட்டச் செயலக போலி முத்திரைகளுடன் 5 பேர் பிடிபட்டனர்!
நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி அலுவலகக் கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டுவந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரும் அடங்குகின்றார். ஏனையோர் நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தொடர்பாடல் மையங்களை (Communication Centers) நடத்தி வருபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எனத் தங்களைப் போலியாக அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையொப்பங்களையும் போலி ஆவணங்களில் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்ட பின்னர்,…
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், ஆழம் கூடிய வங்காள விரிகுடாக் கடற்பரப்புகளுக்காக இன்று முற்பகல் 10 மணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வட ஆந்திரக் கடற்கரையைக் கடந்துள்ள ஆழமான தாழமுக்கம் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகக் குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், பலத்த மழையும் கடலில் பலத்த கொந்தளிப்பும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, வட அகலாங்குகள் 10 முதல் 22 வரையிலான மற்றும் கிழக்கு நெட்டாங்குகள் 82 முதல் 90 வரையிலான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“நுவரெலியா விஷேட பொருளாதார மையத்தில் இன்றைய தினத்திற்கான காய்கறிகளின் கொள்முதல் மற்றும் மொத்த விற்பனை விலைகள் வெளியிடப்பட்டுள்ளன
இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 310 ரூபாவிற்கும், கேரட் 170 ரூபாவிற்கும், லீக்ஸ் 150 ரூபாவிற்கும் மொத்த விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், கோவா 230 ரூபாவிற்கும், பீட்ரூட் 190 ரூபாவிற்கும், பச்சை குடைமிளகாய் 1300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த விலைகளானவை நுவரெலியா பொருளாதார மையத்தின் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.”
நாட்டில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால், நிலவிவரும் தீவிர சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 648 குடும்பங்களைச் சேர்ந்த 2,402 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர்முகாமைத்துவ மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் சிக்கி கொழும்பு மாவட்டத்தில் ஒருவர் உட்பட இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்துடன், இரண்டு வீடுகள் முற்றாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான்கு நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அதில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கின் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான ‘அம்பர்’ (Amber) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கின் கங்கை: தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள். நில்வலா கங்கை: பஸ்கொட, கொட்டபொல,…
குருநாகல் ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் பாரம்பரிய அடையாளத்தையும் சூழலையும் பாதுகாத்து குறுகிய காலத்தில் திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க குருநாகல் ரிதீ விகாரையை, அதன் பாரம்பரிய அடையாளம் மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய காரணியாக விளங்கும் ரிதீ விகாரையை மையமாகக் கொண்டு, முறையான அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, குறுகிய காலத்திற்குள் முறையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து, எதிர்கால அபிவிருத்திப்…
‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சுபக’, ‘தொழில்நுட்பவியல்’ மற்றும் ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் திட்டங்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைவாக மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சு மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்கமைய, எதிர்வரும் ஆண்டு முதல் ‘சுஜாத தியணி’ மற்றும் ‘தொழில்நுட்பவியல்’ புலமைப்பரிசில்களின் கீழ் மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாய் கொடுப்பனவை 1,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், பயனாளிகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்துவதற்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை உடனே செலுத்தி முடிக்குமாறும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்! இலங்கை மற்றும் இந்தோனேசியக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலாவது அரசியல் கலந்தாய்வுச் சுற்று 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இரு அமைச்சுக்களுக்கும் இடையே முறையான இருதரப்பு உரையாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் இரு தரப்பும் கைச்சாத்திட்டன. பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்கவும், நிறுவன ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இக்கலந்தாய்வில் இலங்கை சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருனி ரணராஜ தலைமை தாங்கினார். இந்தோனேசியத்…
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறையை மேலும் இலகுபடுத்தி, முறைமைப்படுத்துவது தொடர்பான விசேட குழுவின் முதற்சந்திப்பு, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே இவ்வாறு கூடியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறும்போது எதிர்நோக்கும் நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அவர்களின் குறைபாடுகளுக்கு ஏற்ப வாகனங்களை மாற்றியமைத்துப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்துதல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான மருத்துவ அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு அனுமதி அளிக்கப்படும் வாகன வகைகளை அதிகரித்தல் மற்றும் வாகனங்களில் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், செவிப்புலன் குறைபாடுடைய…
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுப் பகுதியில் நரிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காலை வேளைகளில் இந்த நரிக் கூட்டங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். நரிகளின் நடமாட்டம் தொடர்வதால் மாணவர்கள் வழமை போன்று மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. வெறிநாய்க்கடி ஆபத்து மற்றும் காட்டு விலங்குகளின் தாக்கங்கள் எற்படலாம் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் இப்பிரச்சினையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை…
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு கிராம அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம அபிவிருத்திச் சங்கங்களையும் ஒன்றிணைத்து, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் “கெமி சக்தி” (Gami Shakthi) வேலைத்திட்டத்திற்கு இணையாக, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே அமைந்திருந்த மலசலகூடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பங்களிப்புடன் செலவினங்களை ஏற்று, குறித்த மலசலகூடத் தொகுதிக்கு புதிய செப்டிக் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் கட்டமைப்பு அமைக்கப்பட்டதுடன், மலசலகூடத் தொகுதியும் முழுமையாக புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட மலசலகூடத் தொகுதி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கஜரூபன் திவ்யா நுவரெலியா