Author: Thana
மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது. திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனி கிளிப் தேயிலை தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைப் பகுதியில், (05) அன்று அதிகாலை 05:00 மணியளவில் தோட்டத் தொழிலாளர்கள் கண்ட சுமார் 08 அடி நீளமுள்ள சிறுத்தை புலி (Panthera padus) ஒன்று, நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு புதர் நிறைந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியது நிலையில் காணப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் அந்த வனப் புலி சிக்கியிருந்தது. வனவிலங்கு அதிகாரிகள் ரந்தெனிகல கால்நடை மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், இன்று (06) அதிகாலை 01:00 மணியளவில் குறித்த புலி பொறியிலிருந்து விடுவிக்கப்பட்டு ரந்தெனிகல கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று திம்புல-பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மஸ்கெலியா நிருபர்.
மத்திய மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, நல்லதண்ணிய சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையின் எஹெல கனுவ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை தடைபட்டுள்ளது. நிலைமை குறித்து விசாரணை மேற்கொண்டபோது பேசிய ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, இப்பகுதிகளில் நிலவும் மழை காரணமாக, நல்லதண்ணிய சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையின் எஹெல கனுவ பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பகுதி சாலையின் மீது சரிந்து விழுந்து, சாலையைத் தடை செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சாலையின் மீது சரிந்து விழுந்த மண்ணை அகற்றி, சாலையை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்காக, அப்பகுதிக்கு ஒரு குழு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் வீரசேகர கூறினார். மஸ்கெலியா நிருபர்.
கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்
தற்போது நிலவும் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலையில் இன்று (6) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. 2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத்…
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உண்மைகளை வெளிப்படுத்தியது. இதற்கமைய, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த நபர்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் மீதான அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், தொடர்புடைய ஊடக நிகழ்ச்சிகளின் காணொளிகளைப்…
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராக பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளார்.
நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம், கல்லாறு பகுதியைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் தங்களது குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு அரச அதிகாரிகளிடம் எழுத்து மூலமாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர். எனினும், சில சந்தர்ப்பங்களில் பதில் கடிதங்கள் கிடைத்த போதிலும், அவர்களின் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் குடியிருப்பு பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில், 2026 ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்துத் தங்களது அவலநிலையை எடுத்துரைக்கச் சென்றபோது, தங்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த…
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் நிலவும் தற்போதைய வானிலையைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே ஹட்டன் வலயப் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராளுமன்றத்தில் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராளுமன்றத்தில் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஈட்டியெறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச்சாதனையைப்பாராட்டி உரையாற்றினார். அவர் தனதுரையின் தொடக்கத்தில், ஈட்டியெறிதல் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இது நீரஜ் சோப்ராவின் சாதனைத்தூரத்தை விடவும் 4 மீட்டருக்கும் அதிகமான தூரமாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த அசத்தலான முன்னேற்றம், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் டங்கன் வைட் மற்றும் சுசந்திகா ஜெயசிங்கவிற்குப்பிறகு நாட்டிற்காக ஒரு பதக்கத்தை வென்று தரும் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இவ்வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ள ருமேஷ் தரங்கவிற்கும் அவரது பயிற்சியாளர்களுக்கும் அவரை உருவாக்கிய புனித பீட்டர்…
இலங்கையின் புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார் இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்ன, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார். புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்ன ஜனாதிபதியைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரசு தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சம்பிரதாயபூர்வமான நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டார். இதன்போது, புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.