Author: Thana

தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் (களுபோவில) புதிதாக நிறுவப்பட்ட இதய வடிகுழாய்ச் சிகிச்சை ஆய்வகப் பிரிவு (Cardiac Catheterization Laboratory) உள்ளிட்ட அதிநவீன நோயாளி பராமரிப்பு வசதிகள் பல நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது, இதய வடிகுழாய்ச் சிகிச்சை ஆய்வகப் பிரிவு, டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி பிரிவு மற்றும் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை கற்களை உடைக்கும் லித்தோட்ரிப்ஸி (Lithotripsy) பிரிவு ஆகியன மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளன. நாட்டின் இருதயம் மற்றும் இரத்த நாள நோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த வாரத்திற்குள் அரசாங்க வைத்தியசாலை அமைப்பில் 04 புதிய கேத் லேப் (Cath Lab) பிரிவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேத் லேப் பிரிவு கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன்,…

Read More

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்து வந்த ‘சுப்பிரமணியன்’ எனும் நாய் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய 21 வயது சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று (27) மாலை கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பாதயாத்திரைக் குழுவினருடன் ‘சுப்பிரமணியன்’ என்று பெயரிடப்பட்ட நாய் ஒன்றும் தொடர்ந்து பயணித்து வந்துள்ளது. இந்நிலையில், கல்முனைப் பகுதியை அவர்கள் கடந்து சென்றபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவரால் அந்த நாய் கொடூரமான முறையில் உதைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வாய் பேசாத பிராணி மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. இதற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கோரி குறித்த இளைஞர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இருப்பினும்,…

Read More

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யட் டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார். சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் வெளியில் சென்ற போது, பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளார் என்றும், எனினும் மீண்டும் அந்தத் தோட்டாக்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி ஆகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை நேற்று (27) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (28) ருவான்வெல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

தமிழ் திரையுலகின் ஈடுஇணையற்ற திரைக்கதை மேதை, இயக்குனர், நடிகர் மற்றும் வசனகர்த்தா **கே. பாக்யராஜ் (73)** இன்று (ஜூன் 27, 2026) காலமானார். **மறைவு குறித்த விவரங்கள்:** இன்று காலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. **திரைப்பயணத்தின் மைல்கற்கள்:** * **பிறப்பு:** 1953 ஜனவரி 7 அன்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பிறந்தார். * **தொடக்க காலம்:** இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, திரைத்துறையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். * **இயக்குனர் அவதாரம்:** ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். * **தனித்துவமான முத்திரை:** ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று…

Read More

தியத்தலாவையில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தே இந்த விபத்து நேர்ந்துள்ளது. ​விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​வைத்தியசாலைத் தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ​விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது. இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், “பெருந்தோட்டத் துறை தீர்மான ஆதரவு அமைப்பு” (Plantation Sector Decision Support System – DSS) நேற்றைய தினம் (24/06/2026) உத்தியோக ப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் வசம் கையளிக்கப்பட்டது. “ஒரே தளம் • பல நிறுவனங்கள் • சிறந்த தீர்மானங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் தளமானது, பெருந்தோட் துறைக்குத் தேவையான அனைத்து முக்கிய தரவுகளையும் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் கொள்கை வகுத்தல் , தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளை மிகவும் திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சான்றுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார…

Read More

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொருவர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து குறித்த பெண் அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளமை பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, உயிரிழந்த…

Read More

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து மாத்தறை – தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Read More

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதான இந்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு அறிவித்தலும் (Red Notice)…

Read More

*மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்* *கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை* மொனராகலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், நேற்று(24/06/2026) குமாரவத்த, பறாவிலை, கும்புக்கன, முப்பனவெளி பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட மலையக மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார். மக்களின் அன்றாட பிரச்சினைகளை களத்தில் நின்று அறிந்துகொள்ளும் நோக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மக்கள் தமது நீண்டகால கோரிகைகளை நேரடியாக பிரதி அமைச்சரிடம் முன்வைத்தனர். *மக்கள் முன்வைத்த முக்கிய பிரச்சினைகள்:* கல்வி தொடர்பான பிரச்சினைகள் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வள பற்றாக்குறை, உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை ஆரம்பித்தல், அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. *காணி மற்றும் வீடமைப்பு*: பெருந்தோட்ட மக்கள்…

Read More