Author: Thana

கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம் ​கேகாலை, மொலகொட – மங்களகம பகுதியில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் இன்று (ஜூன் 22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ​சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்கள் உட்பட மொத்தம் 7 வாகனங்கள் எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ​விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ​காயமடைந்தோர்: விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார்…

Read More

கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.94 கிலோகிராம் ஐஸ் மற்றும் 215 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 600000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

மாற்றமே உலக நியதி என்ற கோட்பாட்டிற்கு மனித சமூகமும் அதன் கலாசாரமும் என்றுமே விதிவிலக்கல்ல. தொன்மையும் ஆழமான வாழ்வியல் தத்துவங்களையும், ஆன்மீகப் பின்னணியையும் கொண்ட இந்து கலாசாரம், இன்று உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்தேய நாகரிகத்தின் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. ‘வசுதைவ குடும்பகம்’ எனப்படும் உலகமே ஒரு குடும்பம் என்ற பரந்த சிந்தனையையும், தனிமனித ஒழுக்கத்தையும் ஒட்டுமொத்த சமூக நலனையும் வலியுறுத்தும் ‘அறம்’ என்ற தார்மீகக் கோட்பாட்டையும் அடித்தளமாகக் கொண்டது நம் பண்பாடு ஆகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் பக்குவத்தைத் தரும் கூட்டுக் குடும்ப முறை, அனுபவத்திற்கு முன்னுரிமை அளித்து வழிகாட்டும் பெரியோரை மதித்தல், மற்றும் ஆடம்பரமற்ற எளிமையான மன அமைதியை மையமாகக் கொண்ட ஆன்மீக வாழ்வியல் என்பன இதன் முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன. மறுபுறம், அறிவியல் தொழிற்புரட்சிக்குப் பின் உருவான மேற்கத்திய கலாசாரம் என்பது முற்றிலும் தனிமனித சுதந்திரம், பகுத்தறிவு மற்றும் உலகாயுத இன்பங்களை அடைதல் ஆகியவற்றின் அடிப்படையில்…

Read More

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. * தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின்படி, உயர் தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும். * 2026 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும். * 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இப்பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும். *…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

“பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு தித்வா புனருத்தாரணம் தொடர்பில் நீங்கள், இலங்கைக்கு பாதுகாப்பான நிலத்தை தெரிவு செய்வது எப்படி என்ற தொழில் நுட்ப உதவிகள் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான காணி இல்லை என நம் தித்வா மலையக அகதிகளை இன்னும் கூடாரங்களில் இந்த அரசு வைத்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, மாவட்டங்க‌ளி‌ல் இந்நிலை தொடர்கிறது. ஆகவே உங்கள் உதவி வழங்கப்படும் வேளைகளில் மலையக மக்களுக்கு அது பயன்படுகிறதா என்பதை கண்காணியுங்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஆஸ்திரேலிய தூதர் மெத்யூ டக்வொர்த்திடம் எடுத்து கூறினார். ஆஸ்திரேலியா ஹவுஸில் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தூதுக்குழுவினருக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்…

Read More

செ.திவாகரன் நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம். நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் திரு. தனுஷ்கா ஆகியோரின் தலையில் குறித்த ஆரம்ப நிகழ்வு சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை தூரமானது 85 கிலோமீட்டர் கொண்டதும் சுமார் 3 மணித்தியாலயமும் 15 நிமிடங்கள் எடுக்கும் எனவும்…

Read More

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இந்தநிலையில், குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.

Read More

மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கலந்தாய்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுப்ப ​மலையகத் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்த விசேட தேசிய கலந்தாய்வு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) ஏற்பாட்டில் கடந்த ஜூன் 17, 2026 அன்று கொழும்பில் நடைபெற்றது. ​இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெற்றது. ​ ​அண்மையில் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட உண்மைக்கண்டறியும் களவிஜயங்களின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் இந்த நிகழ்வில் முன்வைக்கப்பட்டன. இதன் ஊடாக மலையக மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது: ​காணி மற்றும் வீட்டு உரிமைகள்: வாழ்விடங்கள்…

Read More

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். ​இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: ​குறித்த தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் தற்போது பராமரிப்பின்றி காடு மண்டிக் காணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 17) வழமை போன்று தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை பாம்பு திடீரென தீண்டியுள்ளது. ​பாம்பு தீண்டியதைக் கண்ட சக தொழிலாளர்கள், அவரை உடனடியாக மீட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். ​உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர், நேற்று (ஜூன் 18) மதியம் உறவினர்களின் அஞ்சலிக்காக சோளங்கந்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ​பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொழிலாளர்கள் கோரிக்கை ​தங்கள்…

Read More