Author: Thana
தனியார் பேருந்து உரிமையாளர்கள், வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை முன்னர் தீர்மானிக்கப்பட்ட ஜூலை 5-ஆம் திகதிக்கு முன்பாக, ஜூலை 1-ஆம் திகதியே நடைமுறைப்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் (NTC) எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், அனைத்து தனியார் பேருந்து சங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த கோரிக்கை நேற்று ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டண திருத்தம் குறித்த இறுதி கலந்துரையாடல்கள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. இந்த மாற்றத்தை ஒரு வழமையான திருத்தமாகப் பார்க்காமல், கட்டண உயர்வாகவே கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விஜயரத்ன, இது தொடர்பாகத் தெளிவுபடுத்தும் போது, “நாங்கள் 15% முதல் 20% வரையிலான பேருந்து கட்டண உயர்வை எதிர்பார்க்கிறோம். கடந்த சில மாதங்களாகவே இந்தத் துறை பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் அதிகரித்து வரும் செயல்பாட்டுச்…
இலங்கையின் நலன்புரி நன்மைகள் சபை, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அஸ்வெசும நலத்திட்டம், தற்போது இரண்டாம் கட்டத்திற்குள் நுழையவுள்ளது. இதற்கான பயனாளிகளின் விவரங்களை அதிகாரிகள் தற்பொழுது புதுப்பித்து வருகின்றனர். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 1.6 மில்லியன் பயனாளிகள் நிதியுதவி பெற்று வந்தனர். இருப்பினும், தற்போதுள்ள விதிகளின்படி பயனாளிகளின் பட்டியலில் கட்டம் கட்டமாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன: தற்காலிக மாறுதல் பிரிவு (4ஆம் பிரிவு): இப் பிரிவைச் சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த 2025 ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்பட்டன. பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்கள் (3ஆம் பிரிவு): இப் பிரிவைச் சேர்ந்த 425,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நடப்பு ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன. இது…
தெல்தெனிய பிசியோதெரபிஸ்ட் கொலை விவகாரம்: யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த காதலன் உட்பட மூவர் கைது!
தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் பிசியோதெரபிஸ்டின் மரணம் தொடர்பான விசாரணைகளில், பிரதான சந்தேகநபரான காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான காதலன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், அடையாளத்தை மாற்றிக் கொண்டு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தில் பயணிப்பதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்ப உதவியுடன் பேருந்தை இடைமறித்த வலான ஊழல் தடுப்புப் படையணி மற்றும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இன்று (24) காலை அவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த சந்தேகநபர்களுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லேகலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபரே, சந்தேகநபர்கள் தப்பிச் செல்வதற்குத் துணை புரிந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்…
மத்திய மாகாண கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர சந்திப்பு!
மத்திய மாகாண கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர சந்திப்பு! மத்திய மாகாணத்தின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காணக்கோரி, மத்திய மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (23-06-2026) பிற்பகல் 1:00 மணிக்கு நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் திருமதி மல்லிங்கொட கலந்துகொண்டு மாகாண கல்வித்துறையின் வீழ்ச்சி நிலை குறித்து ஆளுநரின் கவனத்திற்குப் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விபரங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் மேலும் விபரங்களை ஊடகங்களுக்குத் பகிர்ந்து கொண்டார். நிர்வாகச் சீர்கேடுகளும் முடங்கியுள்ள ஓய்வூதியக் கோவைகளும்: ஹட்டன் கல்வி வலயத்தில் நீண்ட காலமாக நிரந்தர கோட்டக் கல்வி அதிகாரி (AO) ஒருவர் நியமிக்கப்படாததன் காரணமாக, அங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதியக் கோவைகள்…
அரச பேருந்தில் மாணவர்களிடம் அடாவடி காட்டும் நடத்துனர். நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக தலவாக்கலைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் 2:20 மணிக்கு நிறுத்தப்பட்டு பயணிகளுடன் 2:40 மணிக்கு தலைவாக்கலை நோக்கிப் புறப்படும் இதில் நடத்துனராக செயற்படும் நபர் பாடசாலை மாணவர்களிடம் பொறுப்பற்ற, அநாகரிகமான நடந்து கொள்வதாகவும் குறித்த அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை குறித்த பேருந்து நடத்துநரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை தகாத வார்த்தை மூலம் திட்டுவதாகவும் மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி எழுப்புவதும், தரக்குறைவாகப் பேசுவது போன்ற நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகத் தொடர்கின்றது எனவும் குறிப்பாக (23) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில்…
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான அமைதியின்மை மற்றும் தர்க்க நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சியினரின் இந்த கோரிக்கை குறித்து, சபாநாயகர் ஆளுந்தரப்பின் நிலைப்பாட்டை வினவினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சியினர் கோரும் அவசர விவாதத்திற்கு இணங்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், தேவை எனின் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் சபை முதல்வர் குறிப்பிட்டார். சபையில் அமைதியின்மை: சபை முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், சபைக்குள் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. நிலைமையைக்…
நாடு முழுவதும் டெங்கு அபாயம்: 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ‘அதி அவதான வலயங்களாக’ அறிவிப்பு!
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அதன் ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் (GN Divisions) அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட அறிக்கையின்படி, மேல் மாகாணமே டெங்கு தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இந்த அதி அவதானப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன. மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் விபரம் வருமாறு: கொழும்பு மாவட்டத்தில் பின்வரும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதானமிக்கவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன: கொழும்பு மாநகர சபை அதிகாரப் பகுதி மஹரகம, பிலியந்தலை, ஹோமாகம கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை…
“ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளுக்கான வழிகாட்டி” வெளியீடு. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக பிரகடனப்படுத்தி மக்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதற்காக விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் ஏற்பாடு செய்கிறது. தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (22) கொழும்பு மருத்துவ பீட அரங்கத்தில் நடைபெற்றது. பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான மற்றும் நியாயமான விலையில் உணவை வழங்கும், ‘மாணவர்களுக்கு உகந்த பாடசாலை சிற்றுண்டி சாலைகளை உருவாக்கிப் பராமரித்தல்’ என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட “ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் குறித்த வழிகாட்டுதல்கள்”, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் ஆதரவுடன் வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டி,…
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் முறையின் இரண்டாம் கட்டத்துடன் சம்பந்தப்பட்ட 270,025 (இரண்டு இலட்சம் எழுபதாயிரத்துஇருபத்தைந்து) பயனாளிக் குடும்பங்களுக்கு மாத்திரம் 2026 ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவாக 3,287,163,750.00 ரூபாய் (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் நூற்று அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது) நிதி 2026 ஜூன் மாதம் 23 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பயனாளிகள் தமது நலன்புரிக் கொடுப்பனவை 2026 ஜூன் மாதம் 23 ஆம் (இன்று) முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது