Author: Thana
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். அதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது
நானுஓயா நிருபர் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை பசுமலை பிரதான நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திஸ்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை இன்று (17) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொட்டகலை பிரதேச சபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், டெங்கு ஒழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது இராஜமணி பிரசாந்த் தலைவர், கொட்டகலை பிரதேச சபை,சுதர்ஷன் – பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH), கொட்டகலை,.தேவன் – பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI)வி. விஜேசுந்தரம் – செயலாளர், கொட்டகலை பிரதேச சபை,R.M.D.P. ராஜகருணா – சுற்றாடல் அதிகாரி, கொட்டகலை பிரதேச சபை ஆகியோர் கலந்துகொண்டர். இந்தக் கலந்துரையாடலின் முக்கிய தீர்மானமாக, எதிர்வரும் 20.06.2026 அன்று கொட்டகலை நகரப் பிரதேசத்தில் விசேட டெங்கு பரிசோதனை நிகழ்வை…
சமூக நீதிக் கட்சியும் ஏனைய அமைப்புக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதி ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நேற்று (16) நண்பகல் நடைபெற்றது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளவும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவு உண்டு எனவும் கொல்லப்பட்ட கத்தோலிக்க மக்களின் உறவுகளுக்கும் எமது பூரண ஆதங உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது. சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா: நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அருகே இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி பாரிய சுமைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றின் தடையாழி (Brake) திடீரெனச் செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் எனத் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆபத்தான வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, முன்னால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் வண்டி ஆகியவற்றுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் பயணித்தவர்கள் எவ்வித உயிரிழப்புமின்றி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற ‘திட்வா’ சூறாவளி காரணமாக, ஹக்கல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதி சேதமடைந்து தாழிறங்கியிருந்தது.…
கலஹா கண்டி பிரதான வீதியில் கலஹாகுறுப் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி மேல் பய்னஸ் மரம் முறிந்து விபத்து. கண்டி கலஹா பிரதான வீதியில் இந்த சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது. கலஹாவில் உள்ள சன்முகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவனை முச்சக்கரவண்டியில் தந்தை ஏற்றி கொண்டு வீட்டுக்கு செல்லும் போது பாரிய பய்னஸ் மரம் முறிந்து முச்சக்கரவண்டி மேல் விழுந்துள்ளது, இதில் பயணித்த தந்தையும் மகனும் தெய்வாதீனமாக உயிர் தப்பித்தனர்., இதனால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளதோடு இதற்கு முன் இந்த பிரதான வீதியில் பஸ் மீதும் மரம் முறிந்து விழ்ந்த சம்பவம் பதிவாகி இருந்துள்ளது.பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பிரதான வீதி அருகில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை உடனடியாக அகற்றி தறுமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டு கொள்கின்றனர் . மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!
நாட்டில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:பாடசாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை துல்லியமாக இனங்கண்டு அவற்றை உடனடியாக அழித்தல்.அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் கூட்டுப் பங்களிப்புடன் கூடிய துப்புரவாக்கல் பணிகளை முன்னெடுத்தல். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றாடலைத் தூய்மையாகப் பேணுவது குறித்து மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள பின்னணியில், மாணவர்களின்…
கொட்டகலையில் பரபரப்பு: சட்டவிரோத கம்பிப் பொறிகள் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
காணியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறிகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் தாக்கப்பட்ட சம்பவம் கொட்டகலை பகுதியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை, கொமர்சல் (Commercial) நேத்ரா பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பகுதியில் நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவர் தனது விவசாயக் காணியில் வனவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் கம்பிப் பொறிகளை அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தொழில் நிமித்தமாகக் கொழும்பில் இருந்த வேளையில், அவரது விவசாயக் காணியின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் அவரது வளர்ப்பு நாய் சிக்கியுள்ளது. இதனையடுத்து, விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நபரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர், அப்பகுதியில்…
Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 125 தொழில்நுட்ப அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் நிலப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்குவதில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான தீர்வாக, தற்போது 125 தொழில்நுட்ப அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உரிய நிறுவனங்களுக்கு…
மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் கடந்த 11-ம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி, ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று (16) மதியம் 12 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த கிட்ணன் சிவபெருமான் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11-ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போனதையடுத்து, ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவு தொழிலாளர்கள் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரைக்கு அருகில் அவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து ஆரம்பித்து மவுசாகலை நீர்த்தேக்கம் வரையிலும் தேடுதல் பணியை மேற்கொண்டனர். சுமார் 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் பயனாக, அவர் வசித்து வந்த பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு,…