Author: Thana

பம்பலபிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்துதியில் ஒருவர் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் இருந்து வேகமாக வந்த யுவதி ,இளைஞர் பயணித்த மோட்டார் வண்டி பம்பலப்பிட்டி வஜிரா ஆலயத்துக்கு முன்பாக பாதையை கடந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடும் காயங்களுடன் கொழுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Read More

#மனிருள்_மாணிக்கம் இன்று நடைபெற்ற உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு மடுல்சீமையில் நடந்தது பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் தொலைந்து பின்னர் மீண்டும் கிடைத்தது. மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார் சுகயீனமுற்ற நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணமடைந்த தன் தாயார் அணிந்திருந்ததங்க ஆபரணங்களான 2 பவுன் மாலை ஒன்றும் மோதிரம் ஒன்றும், ஒரு பவுன் மதிக்கத்தக்க தோடுகள் ஒரு சோடியும் 2440 ரூபாய் பணம் என்பவற்றை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு பதுளையில் இருந்து பசறை வழியாக பிட்டமாறுவை பகுதிக்கு முச்சக்கர வண்டியில் செல்லும் போது பியாஜியோ ரக முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைப்பை தவறி வீதியில் விழுந்துள்ளது. இதனை அவதானிக்காத பெண்ணும் தாய் இறந்த சோகத்தில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். இதன்போது மாளிகாத்த்ன்னை பகுதியில் இருந்து யூரி பௌத்த…

Read More

தன்னலமற்ற சமூக சேவையில் பயணிக்கும் பதுளை ப்ரண்லிஷிப் அமைப்பின் ஏற்பாட்டில் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மீதும்பிட்டிய இல 01 தமிழ் வித்தியாலயம், மீதும்பிட்டிய இல 02. தமிழ் வித்தியாலயம், டெமேரியா இல 01 . தமிழ் வித்தியாலயம், டெமேரியா இல . 02 தமிழ் வித்தியாலயம், பசறை இல. 04 தமிழ் வித்தியாலயம், தன்னுகை தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (19) பசறை தமிழ் தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நடராஜா மலர்வேந்தன்

Read More

பொலிஸாரினால் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் படல்கும்பரை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த லொறியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தேக்கு மரப் பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது லொறியின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது பலகைகளை படல்கும்பரையிலிருந்து பதுளைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதன்போது 35 வயதுடைய குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் தேக்கு பலகைகளும் பசறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. லொறியின் சாரதியை. இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான பரீட்சை வினாத்தாள் மீட்டலும், கருத்தரங்கும். 19.12.2022 நேற்றைய தினம் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் ACT Canada பூரண அனுசரணையுடன், ACT Sri Lanka வழிகாட்டலில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கினை ACT Sri Lanka உப தலைவர்/ ஆலோசகர் திரு. இரா. சிவயோகன், ACT Sri Lanka ஊடகத்துறை தலைமை நிர்வாகி செல்வி ப.பவித்ரா மற்றும் ஆசிரியை செல்வி. கிருஷாந்தினி, திருமதி. மதிவதனா ஆகியோரினால் மங்கள விளக்கேற்றலுடன் கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வளவாளர்களாக செந்தில் குமரன், திருமதி. மதிவதனா ஆகியோரினால் முன்னெடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும். குறித்த கருத்தரங்கினை செல்வி. ராதிகா, செல்வி. சுலோச்சனா, செல்வி. கிருஷாந்தினி ஆகியோரினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

Read More

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, நாவலடி அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில் அற்புதங்கள் பல காட்டி அருள் பொழியும் தாயே அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே அச்சம் போக்கியெம்மை ஆட்கொள்ள வருவாய் நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா கிழக்கிலங்கை கடற்கரையில் காட்சி தரும் தாயே நேர்மையுள்ளம் கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே ஆறுதல் தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய் நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா கடலலையின் சீற்றத்தைத் தடுத்தருளும் தாயே கருணை கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே கலக்கமின்றி வாழ்ந்திடவே எம்மை ஆட்கொள்ள வருவாய் நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா துன்பங்கள் அண்டாமல் காத்தருளும் தாயே நம்பியுந்தன் அடி தொழுவோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே நிம்மதி தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய் நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா காவல் தெய்வமாய் விளங்கி காத்தருளும் தாயே கருத்துடனே செயற்படுவோர் மனங்களிலே…

Read More

கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய நூல் கொட்டக்கலையில் வெளியிடப்பட்டது. (கவிஷான் – ஆர்கே) தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் கோ.ந. மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய நூல் வெளியீடு இன்றைய தினம் (19) கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் பேராசிரியர் சோ. சந்திரசேகர் மண்டபத்தில் இடம்பெற்றது. பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வின் முதல் அம்சமாக மறைந்த மலையக எழுத்தாளர் லெனின் மதிவாணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் திரு ஜெ. சற்குருநாதன் அவர்கள் வரவேற்பு உரையினையும் தலைமை உரையினையும் வழங்கினார். அதனை தொடர்ந்து சில சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி திரு வ. செல்வராஜ் அவர்களினதும் திரு. சு. தவச்செல்வன் ஆகியோரதும் விமர்சன உரைகள் இடம்பெற்றன. இதற்க்கான ஏற்புரையை நூலாசிரியர் திரு.எம் எம். ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்வின் நன்றியுரையை ஆசிரியர் வி. சுதர்சன் அவர்கள் வழங்கியிருந்தார். ஆசிரியர் கலை…

Read More

பதுளை நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று 19/11/2022 . பிற்பகல் மாபெரும் மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் அமைப்பாளர்களை தேர்தெடுக்கும் இந்த மாநாடு பதுளை சேனா நாயக்க மைதானத்தில் இடம்பெற்றது. குறிப்பாக இன்று பதுளை நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி தலைவர் “பாராளுமன்ற உறுப்பினர் அனுரக்குமார சிசாநாயக்க” தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி. பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சக்தி உறுப்பினர் ஆதரவாளர்கள் மற்றும் சமய குரு மார்கள் , தேரர்கள் என கலந்து கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. அதிகமான மக்கள் வருகைத்தந்து கலந்து மாபெரும் மாநாட்டு கூட்டமாக இந்த மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது. ராமு தனராஜா

Read More

மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் திருமகளே மகிழ்ச்சி பொங்க வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா முயற்சியுடன் என்றும் நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் தாயாக இருந்தெம்மைக் காக்கின்ற திருமகளே தளர்வில்லா மனவலிமை எமக்களிக்க வேண்டுமம்மா திறமையை வெளிப்படுத்தி முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் ஓம் தேவி கருமாரி என்ற பெயர் கொண்டவளே திருமகளே ஒற்றுமையுடன் வாழும்வழி எமக்கருள வேண்டுமம்மா உரிமைகளுடன் நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் சூலத்தைக் கையிலேந்தி தீமைகளையழிக்கும் திருமகளே சோர்வின்றி வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா சோதனைகள் கடந்து நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா…

Read More

உலகில் இதுவரை பிறந்த இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் IQ அளவைத் தாண்டிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குறித்து இங்கிலாந்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அரியானா ஹிமால் தர்மசேனா, 10 வயது பள்ளி மாணவி, பிரபல விஞ்ஞானியாக வருவதே அவரது எதிர்கால லட்சியம். அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழின் படி, அவர் “மேதை” நிலை என்று அழைக்கப்படும் மென்சா நுண்ணறிவுத் தேர்வில் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த திறமையால் அவருக்கு மென்சா உயர் புலனாய்வு கிளப்பின் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி சேவை குறிப்பிட்டிருந்தது. பிரிட்டிஷ் ஊடக அறிக்கைகளின்படி, அவரது நுண்ணறிவு நிலை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் உளவுத்துறை அளவை 160 என மதிப்பிடப்பட்டுள்ளது. அரியானாவின் பெற்றோர், ஜானக தம்பர ஹவேகே மற்றும் மேகலா பெரேரா, இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டில் வசிப்பவர்கள். 2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்த…

Read More