Author: Thana

தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் மரணம் தொடர்பாக கடமை தவறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

Read More

நோட்டன் பிரிட்ஜ்: நோட்டன் – கார்பெக்ஸ் வீதியின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை (28.10.2026) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். ​ஒஸ்போன் திசையிலிருந்து அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. ​இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதனைச் செலுத்திச் சென்ற நபர் எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ​சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தலவாக்கலை மற்றும் பம்பரக்கலை தோட்டங்களில் இன்று காலை இடம்பெற்ற குளவி தாக்குதல்களில் 8 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​தலவாக்கலை தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற குளவி கொட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திலும் குளவி கொட்டியதில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​குறித்த வழக்கு இன்று (28) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ​இதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினமும் சந்தேகநபரைச் சிறைச்சாலை அதிகாரிகளினூடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டது.

Read More

கஹவத்தையைச் சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியரும் எழுத்தாளருமான தோழர் ரஞ்சித் ஜெயகர் எழுதிய ‘காலம் மறந்த கதைகள்’ எனும் நினைவுப் பதிகை (Memoir) நூல் அறிமுக விழா வத்தளையில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது. ​இந்நிகழ்வின் போது, அவரது நீண்டகால ஆவணக்காப்பு ஆய்வுப் பணிகளையும், வரலாற்றுத் தகவல் களஞ்சியமாக ஆற்றிவரும் சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவருக்கு அகில இலங்கை ரீதியில் புகழ்பெற்ற ‘தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருது – 2026’ வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளது. ​வத்தளையில் இயங்கி வரும் ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வகம் மற்றும் ஆவணகம்’ அமைப்பினால் இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. : ​2023 ஆம் ஆண்டு: மலையக ஆய்வாளர் மு.சி. கந்தையா (கூடலூர்) அவர்களுக்கு, திருச்சி தமிழ் காவேரி இதழ் மற்றும் தமிழகன் திருச்சிராப்பள்ளி குழுவுடன் இணைந்து, கோவை ‘மலையகம் 200’ மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. ​2024 ஆம் ஆண்டு: மலையக ஆவணக்காப்பாளர் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் அவர்களுக்கு, பதுளை மாவட்ட கலை இலக்கிய…

Read More

மாத்தறை, குடாவெல்ல பகுதியிலிருந்து 4 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ​காணாமல் போயுள்ள மீனவர்களையும் படகையும் கண்டறிந்து மீட்பதற்காக இலங்கை கடற்படையும், விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பித்துள்ளன. ​இத்தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர், குறித்த தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

நாட்டில் நிலவும் மழை உடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பாரிய நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன. ​தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களிலேயே நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். ​பாரிய வெள்ள அபாயம் இல்லை என்றபோதிலும், நில்வளா, கிங், களு மற்றும் களனி ஆகிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான வெள்ள நிலைமை நிலவி வருகின்றது. ​குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தின் கடான மற்றும் ஜா-எல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியிருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ​இன்றைய தினமும் மழை எதிர்பார்க்கப்படுவதால், ஆறுகள் மற்றும் வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் நீராடுவதையோ அல்லது ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

மேற்கு-மத்திய வங்கக் கடற்பகுதியில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் ஊடாகக் கரையை கடந்து வருகின்றது. ​இதன் காரணமாக, இலங்கை வானிலையில் குறித்த புயலினால் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ​இருப்பினும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ​அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ​இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக…

Read More

இலங்கைத் தொழிலாளர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், அவர்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ​ருமேனியத் தலைநகர் புக்கரெஸ்டில் (Bucharest) நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ருமேனியாவின் தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமை அமைச்சர் பெட்ரே-ஃபுளோரின் மனோலே (Petre-Florin Manole) ஆகியோர் பங்கேற்றனர். ​இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் வாழ்த்துகளை ருமேனிய அமைச்சருக்குப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கைமாறினார். அத்துடன், அண்மையில் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமைக்காக ருமேனிய அமைச்சருக்குத் தனது பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டார். ​கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ​வேலைவாய்ப்பு அடையாளம் காணல்: இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான புதிய வேலைவாய்ப்புத் துறைகளைக் கண்டறிதல். ​தொழிலாளர் நலன்: இருதரப்பு தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்தி,…

Read More

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியைப் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீரற்ற வானிலை காரணமாகப் பாதகமாகப் பாதிக்கப்பட்ட B329 நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியின் 10 தசம் 5 கிலோமீற்றர் முதல் 16 தசம் 8 9 கிலோமீற்றர் வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ​தேசிய போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களை பரிசீலித்த உயர்மட்டப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ​இதன்படி, பெறுமதி சேர் வரி நீங்கலாக 756 தசம் 9 ஒன்பது மில்லியன் ரூபாய் செலவில் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read More