Author: Thana

வாகன விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் வாகன தலைமையகத்தின் கல்வி மற்றும் பொதுஜன பாதுகாப்பு பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிளில் செலுத்துபவர்கள் என்று அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள்களுக்கான தலை கவசத்தின் தரம் குறித்து சமீபத்தில் வெளியான புதிய வர்த்தமானி அறிவிப்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக எதிர்காலத்தில் தரமான தலைக்கவசம் மாத்திரம் சந்தையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். போதை பொருளை பயன்படுத்தி வீதிகளில் வாகனத்தை செலுத்துவோரை அடையாளம் காண்பதற்கு தேவையான உபகரணங்கள் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதை பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.…

Read More

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு – மண்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில் நம்பிக்கை தந்து வாழ்வை வளப்படுத்தும் பெருமானே நிம்மதியைத் தந்திடுவாய் நிலை தளம்பா வளமளிப்பாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா வேழமுகம் கொண்டவனின் இளையவனே பெருமானே வேதனைகள் தடுத்திடுவாய் வெற்றிதந்து வளமளிப்பாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா கிழக்கிலங்கை கோயில் கொண்டு குலம் காக்கும் பெருமானே கிலேசம் அகற்றிடுவாய் எழுச்சியையும் தந்திடுவாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா வேல் தாங்கி நின்றிருந்து அருள் பொழியும் பெருமானே வெற்றிமுகம் காட்டிடுவாய் வீண்பகைமை நீக்கிடுவாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா மயிலேறியுலகளந்த மாதவனே பெருமானே மானம் காத்திடுவாய், மதிப்பை உயர்த்திடுவாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர் பதியமர்ந்த…

Read More

மொனராகலை மாவட்ட, படலகும்புற கோட்டத்துக்கு உட்பட்ட மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நூல் வெளியீட்டு நிகழ்வும் விருது வழங்கும் விழாவும் கடந்த வாரம் பாடசாலையின் அதிபர் திருமதி ப.ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது. அன்று 2022 அகில இலங்கை தமிழ் மொழித்தின , சிறுகதை போட்டி நிகழ்ச்சியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவி உபாசினி இன்,கதைகளை “செங்காந்தள் காற்றே” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் அந்த வருடத்தில் பாடசாலைக்கு வெற்றிகளை பெற்று தந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பாரட்டப்பட்டனர். நிகழ்வில் மாகாண பிரதி கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், Lanka help foundation முகாமையாளர், அயல் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றார்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வானது இந்த பாடசாலைக்கு பெரும் வரவேற்பைப் வலயத்தில் பெற்றுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஆசிரியர்களின் முயற்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும், பாடசாலையின் எதிர்கால…

Read More

நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2022 – 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உயர் தரப்) பரீட்சை – 2022 ஆம் ஆண்டில் நடாத்துதல் மற்றும் 2022 பாடசாலை மூன்றாம் தவணையை ஆரம்பித்தல் மற்றும் நிறைவுசெய்தல் 2022 ஆம் ஆண்டுக்குரியதான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையை கீழ்வரும் வகையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.             தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை             – 2022.12.18             க.பொ.த. (உயர் தரப்)…

Read More

பசறையில் போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது. https://youtu.be/6xyqvqGw5HM இன்று பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் பசறை பொலிஸாரினால் பேருந்து தரிப்பு நிலையம் மற்றும் பாடசாலை சுற்றுபுறங்கள் ஆகிய பகுதிகள் சுற்றி வளைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படும் சில சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்தினர். இதில் கஞ்சா போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19.25.22 வயதுடைய மூவரும் மாவா போதைப்பொருள் வைத்திருந்த 24 வயதுடைய ஒருவரும் பிடிவிறாந்து பிற்ப்பிக்கப்பட்ட ஒருவருமாக ஐவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

நோர்வூட் தேசிய பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவன் S.கிரிஷானினால் தொழில்நுட்பவியல் பீடத்திற்கான பச்சை இல்லத்தில் தாவரத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் பச்சை இல்லத்தில் உள்ள ஈரப்பதன் வெப்பநிலை ஆகியவற்றினை தன்னியக்கமாக கண்காணித்து இல்லத்திற்கான அனைத்து பரமானங்களையும் தண்ணியக்கமாக கட்டுப்படுத்தக்கூடிய IOT முறைமையினாலான செய்நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய வசதிகளுடன் கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு பச்சை இல்லத்தில் (Green House) பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பச்சை இல்லத்தினை இணையத்தின் வழியாக கண்காணிக்கவும் தன்னியக்கமாக கட்டுப்படுத்த கூடியதுமான முறைமை உருவாக்கிய மாணவர்களுக்கு மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

டிக்கோயா தமவி இன் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் அட்டன் வலய உஉடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்     ஏ. கே மகேந்திரன் அவர்களால் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இல்லங்களுக்கிடையிலான கரம் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளை நியமித்து விசேட வர்த்தாமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 04 (1) சரத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு இந்த நியமனங்கள் மேற்கொண்டுள்ளளது. வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு: http://documents.gov.lk/files/egz/2022/12/2311-26_T.pdf

Read More

எதிர்வரும் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினம் வார விடுமுறை தினமான 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதனால் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More