Author: Thana
வருடாந்த கிறிஸ்மஸ் தின ஒளிவிழாவை முன்னிட்டு விஷ்ணு ஆரோஹணம் இலவச கல்வி திட்டத்தின் ஊடாக 24.12.2022 ஆம் திகதி விஷ்ணு ஆரோஹணா வட்டவளை தலைமை காரியாலயத்தில் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், அதே போல நுவரெலியா தொகுதி அமைப்பாளருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களின் தலைமையில் கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயில்கின்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்மஸ் தின ஒளிவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டதுடன், விழாவில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான பரிசுப் பொதிகளும் கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பார்கள் மற்றும் அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துசிறப்பித்தார்கள்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் மற்றும் ஊடக செயற் பட்டாளர் ராமன் கேதிஸ்வரனின் தாயார் மாரியப்பன் பொன்னம்மாள் காலமானார். அன்னாரின் இறுதிகிரிகைகள் அல்டோரி தோட்ட பொது மயானத்தில் நாளை(26) இடம்பெறும். 26)
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரையான அஞ்சல் தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இரவு அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, கண்டியில் தொடருந்து நிலையம் இன்று காலை நீரில் மூழ்கியிருந்ததுடன், தற்போது நீர் வழிந்தோடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிலிமத்தாலாவை மற்றும் பேராதனை தொடருந்து நிலையங்களுக்கு இடையே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அத்துடன் கெலிஓயா தொடருந்து நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாக கொழும்பில் கண்டி வரையான தொடருந்து சேவை பிலிமத்தலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி – அக்குறணை – துணுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.விபத்தின்போது உயிரிழந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்றுமொரு சகோதரர் என ஐந்து பேர் வீட்டில் இருந்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மற்றுமொரு சகோதரனும் படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை பிர்த்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என குறித்த மாணவியின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரும் மாணவியின் உறவினர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக நாட்டிற்குள் பரவேசித்து ,இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மேல் மத்திய , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பொலநறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி மீ. மேற்பட்ட கன மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ மேற்பட்ட கன மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு…
மானுடவெளி அமைப்பு “பொது சமையலறை” ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள் எனும் தொனிப்பொருளில், இரண்டாவது தடவையாக (24/12) சென்லெனாட்ஸ் கொனிக்கார் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய போசன மற்றும் கலை, கலாச்சார நிகழ்வில் எண்பதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் பங்கு பற்றி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் தாலாட்டு பாடல், கும்மிப்பாடல், தங்களின் பழங்கால அனுபவங்கள், தங்கள் ஊரின் இன்றைய நிலை போன்ற நல்ல பல விடயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாது தங்கள் தங்களின் பழைய சிநேகிதகங்களையும் புதுப்பித்துக்கொண்டார்கள். களைப்பில் இருந்தவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது பின், சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட பகல் உணவும் வழங்கப்பட்டது. “கொடுப்பதில் கடவுளுக்கு அடுத்தபடி ஒருசில மனிதர்கள் மட்டுமே. உங்களின் பணி தொடரவேண்டும். ஆண்டவன் அருள்புரிய வேண்டும்” என்று வாழ்த்தி மகிழ்ந்து சென்றார்கள். ஊரிலுள்ள இளைஞர்கள் பலரும் முன்வந்து தங்களின் ஒத்துழைப்பை நல்கினர். பல முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், கவனிக்கப்படாமல்…
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – பருத்தித்துறை – அருள்மிகு பசுபதீஸ்வரர் சிவன் திருக்கோயில் பக்தியுடன் உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே பார்வையினை எம்மீது வைத்திடுவாய் ஐயா பாவங்கள் போக்கி என்றும் நிம்மதியைத் தந்திடுவாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே நம்பி உன்பாதம் பற்றுகென்றோம் சிவனே நித்தமும் உடனிருந்து காத்தருள்வாய் ஐயா துன்பங்கள் போக்கி என்றும் துணையிருப்பாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே ஆறுதலை வேண்டி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே அச்சம் தவிர்த் தெம்மை ஆட்கொள்வாய் ஐயா நம்பிக்கை தந்து என்றும் நலமளிப்பாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே துணை நாடி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே துணையாக விருந்தெம்மைக் காத்தருள்வாய் ஐயா துணிவு தந்து என்றும் வலுதருவாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே ஆற்றலை வேண்டி உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே அந்தரிக்கும் நிலை அகற்றி நிம்மதியை அருள்வாய் ஐயா அன்பு மனம் தந்து என்றும் அரவணைப்பாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே வாழ்வில்…
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் அவிசாவளை ஹங்வெல்ல – அருள்மிகு அங்காளப் பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உற்ற துணையிருந்தெமது நலன் காக்கும் தாயே உடனிருந்து என்றும் எம்குறைகள் தீர்க்கவருவாய் நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய் ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா மேற்கிலங்கை இருந்தெமது நலன் காக்கும் தாயே மேன்மைபெற்று நாம்வாழ என்றும் அருள் தருவாய் நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய் ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா பெருந்தெருவின் அருகினிலே காட்சி தரும் தாயே பெருமையுடன் நாம்வாழ உடனிருந்து வழியமைப்பாய் நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய் ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா கேட்கும் வரம் தந்தெம்மை மகிழ்விக்கும் தாயே கவலைகள் அண்டாநிலை தந்து நலமளித்து வாழவைப்பாய் நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய் ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா விழிமலர்ந்து வீற்றிருந்து வேதனைகள் போக்கும்…
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது இன்று (23/12) கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸில் எட்டியாந்தோட்டயில் பாதிக்கப்பட்டவர் தனது பயணத்தை அரச பேருந்தில் மதியம் 12.40 அளவில் பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 2.30 மணிக்கு ஹட்டனில் இறங்கியுள்ளார். பஸ்ஸில் அதிக பயணிகள் இருந்ததன் காரணமாக ஓட்டுனர் பக்கத்தில் வைக்கப்பட்ட பையில் இருந்த 20.000 ரூபா பணம் மற்றும் ஸ்மாற் கைபேசி உட்பட அடையாள அட்டை என்பன காணாமல் போய் உள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் குறித்த பையிக்கு அருகாமையில் சந்தகேதுக்கு இடமான முறையில் நடந்து கொண்ட ஒருவர் ஹட்டன் வட்டவளை பிரதேச பகுதியில் இறங்கியதாகவும் தெரிவித்தார் ,எனவே தனது தேசிய அடையாள அட்டை மற்றும் இதர பொருட்களை கண்டெடுத்தால் அல்லது தொலைபேசி சரிபார்க்கும் அல்லது சந்தேகத்துக்கு…