Author: Thana
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்களுக்கான விண்ணப்பம் கோரல்! இ.தொ.கா அறிவிப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை சுயவிபரங்கள் உள்ளடக்கி, போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி சபையின் பெயர்,உள்ளூராட்சி சபையின் எல்லைக்கு உட்பட்ட போட்டியிட விரும்பும் வட்டாரத்தையும் குறிப்பிட்டு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஜனவரி 10ம் திகதிக்கு இடையில் இ.தொ.கா தேர்தல் பிரிவு கணக்காளர், இலக்கம் 72, சௌமியபவான், ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் பதிவு செய்யுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.
நு /தங்கக்கலை இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பிரியாவிடை நிகழ்வும் இன்று(23/12/22) இடம்பெற்றது. பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற ஒளிவிழாவும் அதே போல கல்வித்துறையில் இதுவரை காலம் பணியாற்றி ஓய்வுபெறவுள்ள கல்வியியலாளர்களுக்கான பிரியாவிடையும் பாடசாலை அதிபர் நோன்மதிதேவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கல்வித்துறையில் மிக நீண்ட காலமாக பல்வேறு சேவைகளை புரிந்த ஆரம்பக்கல்விக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் செல்வராஜ் ஐயா அவர்களும், அதே போல கோட்டம் 3 மெராயா தேசிய பாடசாலை அதிபர் முத்துகுமார் ஐயா ஆகிய இருவரும் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் இவர்கள் இருவரும் இப்பிரதேச கல்வி செயற்பாடுகளில் இதுவரைகாலம் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள நிலையில் பாடசாலை அதிபர் தலைமையில் இவர்கள் இருவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பல்வேறுப்பட்ட கலைநிகழ்வுகளும் அதே போல மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்ப்பட்டது. நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள், பாடசாலை பழைய…
மொனராகல நகரில் கண்டெடுக்கப்பட்ட ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொதியை பொலிஸாரிடம் கையளித்த நபர்
மொனராகல கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த திரு.கே.எம்.லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் நான்கரை பவுண், ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதியைக் கண்டெடுத்துள்ளார். நகரம். மொனராகல நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றின் கணக்கியல் பிரிவில் பணிபுரியும் இவர், நேற்று (21) பிற்பகல் நகரிலுள்ள நிறுவனமொன்றுக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று கொண்டிருந்த போது, நகரின் கடையொன்றிற்கு அருகில் இந்த தங்கப் பொதி கிடந்துள்ளது. இதேநேரம் மொனராகல பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரியை பி.எஸ்.சி.சஞ்சீவவைச் சந்தித்து தங்க ஆபரணங்களை மொனராகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான காலப்பகுதியில் கே.எம்.லக்மால் தயாரத்ன அவர்கள் செய்த இந்த நற்செயல் முழு சமூகத்திற்கே முன்னுதாரணமாக அமைவதுடன் உங்களின் இந்த மகத்தான செயலை மனதார பாராட்டுகிறோம் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நடராஜா மலர்வேந்தன்
சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். தெஹியோவிற்ற படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…. 2023ஆம் ஆண்டு இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். இதற்காக இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழிநுட்பத் துறையைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அந்த இடைவெளியை நிரப்புவது அவசியமானது. க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களை இத்துறைக்குள் உள்வாங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்…
தற்போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால், கல்வி அமைச்சு அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தலைமையில், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உரிய நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன்போது, பாடசாலைகளில், போதைப்பொருள் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது கல்வி அமைச்சினால் 2020.07.29 ஆம் திகதி (20/2020 இலக்க) வெளியிடப்பட்டுள்ள ‘கல்வி நிறுவன வளாகங்களில் புகையிலையுடன் தொடர்புடைய உற்பத்திகள், மது மற்றும் போதைப்பொருள் பாவனை, விளம்பரம் மற்றும் வியாபாரம் இல்லாத பகுதியாக மாற்றுதல்’ என்ற சுற்றறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் பாடசாலை அதிபர்களுக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாடசாலை, வலய மற்றும் மாகாண மட்டத்தில் போதைப்பொருள் நிவாரணக் குழுக்களை நியமித்து உரிய நடைமுறையில் பாடசாலை வளாகங்களில் இருந்து போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு…
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும். மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகளுடனான இந்த கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை நாளை 24ம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம். அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது இதேவேளை, நத்தார் தினத்தன்று மிருகக்காட்சிச்சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 8095 868 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இவ்வாறு போக்குவரத்து சேவைகள் பண்டிகை காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொதுவான நீண்ட தூர ரயில்களுக்கு மேலதிகமாக பின்வரும் வகையில் விசேட ரயில் சேவைகளுக்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான விசேட ரயில் சேவை 2022.12.23 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 9.20 காங்கேசன்துறை – கொழும்பு கோட்டைக்கு இடையிலான விசேட ரயில் சேவை 2022.12.26 காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் நேரம் காலை 4.00 கொழும்பு கோட்டை – பதுளைக்கு இடையிலான விசேட ரயில் சேவை 2022.12.23 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் மாலை 7.20 2022.12.24 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.10 2022.12.26 கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் காலை 7.10 பதுளை – கொழும்பு…
மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்- அரச அதிகாரிகள் என்ற அடிப்படையில் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்படுங்கள் • நுவரெலிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு பெப்ரவரி 04 இற்கு முன்னர் தீர்வு. • உலகின் எல்லையைப் பார்வையிட பட்டிபொல தொடக்கம் பொரலந்த வரை கேபல் கார் வேலைத்திட்டம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேயாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கக்கூடியவையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மட்டுமன்றி அமைச்சர் கூட கொழும்பிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக பட்ச சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். நுவரெலிய மாவட்டச் செயலக அலுவலகத்தில் நேற்று (22)…
உதிரி பாகங்களாக பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு பொறுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த இயந்திர திறன் கொண்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயது மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாகங்களை ஒன்றிணைத்துப் பொறுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், இந்நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட 1000 CC இயந்திர திறனைக் கொண்டவை என்றும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள்களில் மூன்று BMW வகையையும், மூன்று டுக்காமி வகையையும் சார்ந்தவை ஆகும். இவற்றில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் ஒருவரிடம் இருந்தும் மற்றையது இன்னொருவரிடம் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.