Author: Thana
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொட்டகலை பிரதேச உறுப்பினர்களுக்கு தலா இரண்டு இலட்ச ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிட்டு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் நேற்று (13) நடைபெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில், 2026 இல் எமது சபைக்குக் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டத்துக்கும் இரண்டு இலட்ச ரூபா வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டியது எமது…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் லேசான மழை மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்…
கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.
கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 18 திகதி வரையில் கனடா, டொரோண்டோ நகரில் இடம்பெறவுள்ள செய்யறி உலகில் சொம்மொழி தமிழும் தமிழர்களும் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் ஆய்வாளர் அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரையும் இடம்பெறவுள்ளது. இவ் ஆய்வரங்கிற்காக உலகெங்கும் வாழும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுச்சுருக்கங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு அமைவாக இம் மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை தெரிவுக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்த 497 ஆய்வுச்சுருக்கங்களில் இருந்து 80 ஆய்வுச்சுருக்கங்கள் ஆய்வுக்கட்டுரையை முழுமைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. கனடா நேரப்படி 15.10.2026 அன்று தொடங்கும் இம் மாநாட்டில் 16.10.2026 அன்று பி.ப 12:40 மணி தொடக்கம் 14:10 வரையில் இடம்பெறவுள்ள அமர்விலேயே இவரது உரையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இம் ஆய்வு மாநாட்டில் இலங்கை மலையகத்தில் இருந்து பங்கேற்கும் ஓர் ஆய்வாளராக அருணாசலம் லெட்சுமணன்…
இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைத்தளப் பதிவு சவுதி உயர் நீதிமன்றத்தின் இந்த நீதிபரிபாலனத் தீர்மானத்தை வரவேற்று ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் முக்கிய குறிப்புகளை முன்வைத்துள்ளார்: இத்தீர்மானம் அனோஜனுக்கும், அவரது துயருற்ற குடும்பத்தினருக்கும் மற்றும் இவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் அளவிலா ஆறுதலையும் நிம்மதியையும் அளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நட்பு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து மேற்கொள்ளப்பட்ட பொறுமையான இராஜதந்திர தலையீடுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஓர் இலங்கையருக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அனைத்துத் தரப்பினரின் தளராத அயராத முயற்சியினாலேயே இந்த நல்முடிவைப் பெற்றுக்கொள்ள…
மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை தீவிரமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், பிற்பகல் 01.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!
இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணமாக, ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவு அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். தற்போது எச்.ஐ.வி தொற்றாளராக ஒரு பெண் அடையாளங்காணப்படும் போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேயே (MSM) எச்.ஐ.வி தொற்று அதிகமாகப் பதிவாவதாக இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறை விசேட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் (SLCoSHH) தலைவியான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய கவலை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பற்ற உடலுறவைத் தாண்டி, போதைப்பொருட்களை ஊசி மூலம் நரம்புகளுக்குச் செலுத்துவதனாலும் எச்.ஐ.வி தொற்று பதிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்…
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது. குறித்த விடயங்களை ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் புதிய சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கமைய, பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதகுருமார்களை சிறைச்சாலையில் தடுத்து வைக்கையில் அமுல்படுத்தப்பட்ட சட்டவிதிகளுக்கான திருத்த யோசனைகள் இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.…
இலங்கையின் இசை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உலகப் புகழ்பெற்ற சர்வதேச கலைஞர் டி.ஜே. ஸ்நேக் (DJ Snake) மற்றும் நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ‘சென்டர் இசை விழா’ (Senter Music Festival) கொழும்பு போர்ட் சிட்டியில் அரங்கேற உள்ளது. வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள் இந்த மெகா இசைத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நாள் (அக்டோபர் 30): பதியா மற்றும் சந்தேஷ் (BNS), வஸ்தி (Wasthi), ADK உள்ளிட்ட இலங்கையின் முன்னணி இசைக் கலைஞர்களின் கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இரண்டாம் நாள் (அக்டோபர் 31): “Lean On”, “Taki Taki” உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களின் மூலம் அறியப்பட்ட சர்வதேச எலக்ட்ரானிக் நடன இசைத் தலைவர் டி.ஜே. ஸ்நேக் முதன்முறையாக இலங்கையில் தனது நேரலை இசை நிகழ்ச்சியை வழங்குகிறார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இலங்கை அளவில் டி.ஜே.…
பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை, அப்பணியகத்தின் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக டி-ஷர்ட்டுகளைக் கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது. இதனைக் பரிசீலித்த நீதவான், பசில் ராஜபக்சவைக் கைது செய்து ஆஜர்படுத்துவதுடன், சர்வதேச பொலிஸார் ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக பாடுபட்ட சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த சட்டக் குழுவினருக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.