Author: Thana

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!* கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் பிரபல ‘கதிரேசன் விளையாட்டு கழகம்’ விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகத் தடம் பதித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் இக்கழகத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது, கடந்த 2025-ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு நல்லாயன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கான உதவித்தொகைகளும் வழங்கப்பட இருப்பதாக கழகத்தினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும், எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து…

Read More

“நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்! உலகப் பொருளாதார மன்றத்தின் வரலாற்றில் இலங்கையிலிருந்து தெரிவான 10 பேரில் ஒருவர்! மலையகத்திற்கு சர்வதேச அரங்கில் கௌரவிப்பு! உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) இளம் உலகத் தலைவர்கள் (Young Global Leaders) பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்” என தனது உரையில் குறிப்பிட்டு, சர்வதேச அரங்கில் தனது சமூக அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் வரலாற்றில், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக ஜீவன் தொண்டமான் இடம்பெற்றுள்ளார். மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் (Young Global Leaders…

Read More

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்! ​உலகெங்கும் அக்டோபர் மாதம் சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உன்னத நோக்கில், விசேட கருத்தரங்கும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமும் எதிர்வரும் சனிக்கிழமை (ஒக்டோபர் 24) கொட்டாஞ்சேனையில் நடைபெறவுள்ளது. ​இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) இரண்டாம் இடத்திலும் உள்ளன. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் நாள்தோறும் சுமார் 14 முதல் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர். அத்துடன் தினமும் குறைந்தது 2 முதல் 3 பெண்கள் இந்நோய்களினால் உயிரிழக்க நேரிடுகிறது. ​இத்தகைய உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணம், நோயின் அறிகுறிகள் முற்றிய பின்னரே பெண்கள்…

Read More

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல – ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நேற்று (17) மாலை கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல்கள், ரிவால்வர், ரிப்பீட்டர் மற்றும் போர் 12 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஆயிரக்கணக்கான தோட்டாக்களும், இரண்டு கைக் குண்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

Read More

ஹப்புத்தளை நகரில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தினால் குறித்த இரு வீடுகளுக்கும் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் நீடிக்கும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாகப் பிரதான வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஹப்புத்தளை – வியாரகல பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது திடீரெனப் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததில், அந்த முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், சாரதி மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் உயிர் தப்பியுள்ளனர்.

Read More

கடுகண்ணாவைப் பகுதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது நேற்று (17) பெரிய பாறை ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். ​சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவிக்கையில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணித்த குறித்த பேருந்து கடுகண்ணாவைப்பகுதியை அடைந்தபோது, மலையோரத்திலிருந்து திடீரெனப் பாறாங்கல் ஒன்று சரிந்து பேருந்தின் மீது விழுந்துள்ளதாகக் குறிப்பிட்னര്‍. ​இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிகிக சிகிச்சைகளுக்காகப் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடுகண்ணாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார். ​அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ​நாட்டுப்புறப் பாடல்களையும் கானாப் பாடல்களையும் தமிழ்த் திரைப்பட இசையில் புகுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த தேவா அவர்களின் மறைவு, கலை உலகிற்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்! நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ராஜசுந்தரம் நலின்ராஜின் முயற்சியால் புதிய நடவடிக்கை – பொதுமக்கள் பாராட்டு! கஜரூபன் திவ்யா நுவரெலியா நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்க்ரப் தோட்டத்தில், லயன் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய பாதைகள் காரணமாகப் பாரிய குப்பை சேகரிப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதையடுத்து, முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பைகளைச் சேகரிக்கும் பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ராஜசுந்தரம் நலின்ராஜின் வேண்டுகோளுக்கு அமைய, இஸ்க்ரப் தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குறுகிய பாதைகளைக் கொண்ட லயன் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே குப்பைகளைச் சேகரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தமது வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை…

Read More

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ​கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ​நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை, இன்று அதிகாலை சுமார் 4.30 மணி வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ​இதன்போது அதிகாரிகள் வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனையிட்டதுடன், வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். எனினும், இந்தச் சோதனைக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை எனவும், மேலதிக தகவல்கள் இன்று பகல் வெளியாகலாம் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Read More