Author: Thana

அரசாங்கத்தால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்ட உதவிகளின் கீழ், தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2.04 பில்லியன் வரவு வைக்கப்படவுள்ளது. இதன்படி, தொடர்புடைய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 2,041,711,250 மாற்றப்படவுள்ளதுடன், பயனாளிகள் தங்களின் தொகையை  பெற்றுக் கொள்ள முடியும். இதற்கிடையில், முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கு அக்டோபர் 2026 மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்திற்காக ரூ. 9,123,802,500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளைத் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

Read More

கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி, விஷ போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ​கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் 31 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஆவார். இவர் கடந்த நான்கு வருடங்களாக புளூமெண்டல் காவல் நிலையத்தில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 17 தசம் ஒரு ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ், ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைக் குவித்தார். கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற போதிலும், இருபதுக்கு-20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Read More

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சவூதிக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு, ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நபர்கள், தமது பயண ஏற்பாடுகளின் போது மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், பயண முகவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏற்ற மாற்றுப் பயணத் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 21 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். இத்தொகையில் 17 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்பதுடன், 22 லட்சத்து எட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இதன்படி முதியோர் தொகையில் 56 சதவீதமானோர் பெண்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, 2026ஆம் ஆண்டில் 45 ஆயிரம் முதியோர் அடையாள அட்டைகளை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், வரும் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களைப் புனரமைத்து, அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

வங்காள விரிகுடாவில் நிலவும் கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குத் பின்னரே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் இன்று (13) பிற்பகல் 2:15 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. ​இத்தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ​இச்சம்பவத்தில் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ​இதற்கிடையில், தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் நிலவும் சூழ்நிலையையும் பார்வையிடுவதற்காகக் கொழும்பு மாநகரசபை மேயர் வ்ராய் கெலீ பல்தசார் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்திருந்தார்.

Read More

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை. மனோ, சஜித்திடம் தெரிவிப்பு கண்டி மல்வது பீடாதிபதியிடம் SJB சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ், முஸ்லிம், இலங்கையர்களை தொடர் படுத்தி பேசியமை கடும் தவறானது ஆகும். அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை சந்தோஷ படுத்த, ஞானசாரர் விவகாரத்தை பயன் படுத்துகிறது என்ற பொருள் படும் கிரியல்லவின் கருத்து அதிக பிரசங்கிதனமானதாகும். மேலும், சிறுபான்மை மக்களை “சுலுஜாதி”, பெரும்பான்மை மக்களை “மகாஜாதி” என அடையாள படுத்துகின்றமை தவறாகும். இந்த வார்த்தையாடல்களை நாம் இப்போது கடந்து வந்து விட்டோம். ஞானசாரர் என்ற சிறை கைதி தேரரின் சீருடை தொடர்பில் ஜனாதிபதி குழு இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கட்டும். அதேபோல், கடந்த ஜனாதிபதி அளித்த பொது மன்னிப்பு முறை படி இல்லை என சட்டம் கூறுகிறது. அதையும் முறை படி மாற்றி, ஞானசாரருக்கு இன்றைய…

Read More

வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு கொழும்பு: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் தங்களது சொந்தக்காலில் சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதன்கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்குச் சுயதொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 219 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழுப்பு டேம் வீதி (Dam Street) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட நவகம்புர வட்டாரத்தில் வரிய குடும்பங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு 15…

Read More

வி.தீபன்ராஜ் நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம், 21 ஆதரவு வாக்குகளால் இன்று உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ​பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இந்த அமர்வு நடைபெற்றது. ​தவிசாளர் உட்பட 21 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், இரு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. ​எந்தவொரு எதிர்ப்பும் இன்றி 21 ஆதரவு வாக்குகளைப் பெற்று, நுவரெலியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் வி.தீபன்ராஜ் தெரிவிக்கின்றார்.

Read More