Author: Thana
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிறிலிய சவிய’ கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரமையினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரின் இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு உடனடியாக கரோனரி தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமுள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்திற்கு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது. இந்த மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார். அத்துடன், ஷிரந்தி ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள மண் திட்டிலிருந்து இன்று (17) அதிகாலை மீண்டும் பெருமளவு மண் ரயில் பாதை மீது சரிந்து விழுந்துள்ளது. இதன்காரணமாக பொல்கஹவெலவிலிருந்து கம்பளை நோக்கி இயக்கப்படும் ரயிலும், கம்பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படும் ரயிலும் தமது பயணங்களை ஆரம்பிப்பதில் தாமதமாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பகுதியில் பெருமளவிலான மண் அகற்றப்பட்ட போதிலும், ரயில் பாதையில் விழுந்த மண்ணை அகற்றும் பணிகள் தற்போதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் உண்டாகும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை…
பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.
பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக இவ் வருடம் பெற்றுள்ளமை முக்கிய அம்சமாகும். இவ்வருடத்துக்கான சிறந்த அதிபருக்கான தேசிய விருதான குரு பிரதீபா பிரபா விருது மற்றும் தேசிய உற்பத்தி திறன் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது. எமது பாடசாலை 2025 ஆம் ஆண்டில் அதிமேதகு பிரதமரின் கையால் சிறந்த நடைமுறைக்கான குரு பிரதீபா பிரபா விருது பெறப்பட்டது. இவ்வருடம் சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா தேசிய விருதும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு வருடங்களாக பதுளை வலயத்தில் ப/எல்வட்டன் தமிழ் வித்தியாலயமே இவ்வாறு தொடர்ச்சியாக இவ் விருதுகளை தனதாக்கி கொண்டுள்ளது. முதல் தடவையாக தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு விண்ணப்பித்து முதல் தடவையிலேயே மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை மிகப்பெரியதொரு சாதனையாகும். 33 வருட பாடசாலை வரலாற்றில் 2023 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு…
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளைப் பகுதியில், இன்று காலை வேளையில் லொறியொன்றும் ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று காலை ஆறு முப்பது மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லொறியில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன. தனக்கு முன்னால் சென்ற காரொன்றை முந்திச் செல்ல ஜீப் வண்டி முயன்றபோதே, எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!
கிரிஷ் நிறுவன நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது, வழக்கில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குவது குறித்த உத்தரவை எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்த நீதவான், ஜானகி சிறிவர்தன தரப்பில் விசேட காரணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாததால் அவரது பிணை மனுவையும் நிராகரித்தார்.
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள வீதியில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்த இந்த குழுவினர், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து பிக்குமாரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். எனினும், ஞானசார தேரரின் விடுதலையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற தமது கோரிக்கையில் பிக்குமார் உறுதியாகவுள்ளமையால், அப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை நீடித்துவருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை ஏற்றே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மலையகத்தில் ‘கே.டானியல் 100’ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த எழுத்தாளர் கே.டானியல் நூற்றாண்டு நினைவேந்தலும் அவரது படைப்புகளின் அறிமுகமும் 17-10-2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை யில் அரசினர் ஆசிரிய கலாசாலை முதல்வர் எஸ். பிரசாந்தன் தலைமையில் *லெனின் மதிவானம் அரங்கமாக இடம்பெறவுள்ளது. அரசினர் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் ஆ.கலையரசு வரவேற்புரை வழங்க மறைந்த எழுத்தாளர் கே.டானியலின் புதல்வர் டானியல் வசந்தன் நூலறிமுகத்தையும் நோக்குரையையும் வழங்குவார். கே. டானியல் படைப்புகளை முன்வைத்து உரைகள் இடம்பெறவுள்ளன. ‘ தண்ணீர்’ புதினத்தை முன்வைத்து தேசிய கல்வியியல் கல்லூரியின் (மட்டக்களப்பு ) முன்னாள் பீடாதிபதி சிவ. இராஜேந்திரன், ‘ கோவிந்தன்’ புதினத்தை முன்வைத்து முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம், கவிஞர் சு. முரளிதரன், ‘ அடிமைகள்’ புதினத்தை முன்வைத்து – அரசினர் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் முதல்வர் சந்திரலேகா கிங்ஸ்லி, ‘பஞ்சகோணங்கள்’ புதினத்தை…
வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*
*வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்* *யாழ்ப்பாணத்தில் 257 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு* வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (14) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த அமைச்சர், அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார். இதன்போது, சொந்த வீடுகளை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகப் பயனாளிகள் தமது மகிழ்ச்சியையும்…