Author: Thana

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் வெளியேற்ற அறிவிப்புகள் (Eviction Notices) வழங்கப்பட்டு, நீண்டகாலமாக அங்கு வசித்து வரும் மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலைமை தொடர்பில் செந்தில் தொண்டமான் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். குறிப்பாக, பல ஆண்டுகளாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் நடைமுறையிலுள்ள சிவில் நடைமுறைச் சட்டத்தின் 66ஆம் பிரிவைச் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், குடியிருப்பு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டின்…

Read More

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா, ஒக்டோபர் 07: நுவரெலியா மாநகர சபையின் கீழ் தற்போது நிர்வகிக்கப்பட்டு வரும் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு வந்து நிர்வகிப்பதற்கு நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்வதற்கு தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனவும், எனினும் தற்போது மாநகர சபையின் கீழ் இயங்கி வரும் இப்பிரிவை அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். நீர்வளப்…

Read More

செ. திவாகரன். பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி. நோட்டன் பிரிட்ஸ், ஹட்டன் பிரதான வீதியில் நோர்ட்டன்பிரிட்ஜ் பிக்போன் பகுதியிலேயே இன்று காலை 7.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். நோர்ட்டன்பிரிட்ஜ் பிக்போன் பகுதியைச் சேர்ந்த நோர்ட்டன்பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் ஜெயராம் போல்ராஜ் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹட்டன் நோக்கி பயணித்த இபோச பஸ் உடன், சைக்கள் மோதி, மாணவன் பஸ்ஸின் முன் சக்கர பகுதியில் சிக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவனை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இணைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக நோர்ட்டன்பிரிட்ஜ் நகரை நோக்கி சைக்களில் சிறுவன் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…

Read More

போலி ஆவணங்களைத் தயாரித்து, வைத்தியர்களைப் போல் செயற்பட்டு வந்த இருவர், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குருநாகல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ​கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 33 மற்றும் 62 வயதுடைய மீகலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ​கைப்பற்றப்பட்ட மருந்துத் தொகுதியுடன் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மீகலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ​குருநாகல் மாவட்ட மருந்தாய்வாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலாவ பொலிஸார் இணைந்து இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜித கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். களணி பகுதியைச் சேர்ந்த இந்த வங்கி அதிகாரி, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்தும், சந்தேகநபர் தனது வாகனத்தில் தேரரை இராஜகிரியவில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். ஞானசார தேரர் தப்பிச் செல்வதற்கு உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் சந்தேகநபர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

Read More

அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்  – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்  தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அனுர திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச் செல்ல மறுப்பதோடு மறைமுகமான ஓர் ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுக்கின்றது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் திலகர் படுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் அத்தகைய பாரபட்சங்கள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது. 1.பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை ( Nevida) நீக்கம் செய்யும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த அதே வேளை மலை கலைப்…

Read More

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ​இதற்கமைய, வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்- லவர்ஸ்லீப் தோட்டத்தில் தங்களுக்கென வழங்கப்பட்ட காணிப் பகுதியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள். மன்னர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு இலங்கைக்கு வந்து குடியேறினார்களோ, அதேபோன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையாக அழைத்து வரப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர். …

Read More

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி அலுவலக ரயில் ( கங்கொட மற்றும் கடிகமுவ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (05) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ​ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் கற்கள் சரிந்து விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்போது கடுமையாகத் தாமதமடைந்துள்ளன. ​’டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப் பெற்ற முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ​இவ்விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக கருத்துத் தெரிவிக்கையில், “ரயில் பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனை அவதானித்தபோது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. அதிவேகத்தில் மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி…

Read More

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ​நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More