Author: Thana

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி கத்தோலிக்க குருவானவர் பரிதாபமாக உயிரிழப்பு! ​ சடலம் லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைப்பு; தலவாக்கலை பொலிஸார் தீவிர விசாரணை. ​ தலவாக்கலை – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கலுக்கு இலக்காகி நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. ​உயிரிழந்தவர் சுமார் 50 வயதுடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ​இடி-மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த போதிலும், உடனடியாக மீட்ட பொதுமக்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். ​சடலம் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபருக்கு எதிராக “S3-ICCPR” சட்டத்தின் கீழ், ஜீவன் தொண்டமான் பொலிஸ் முறைப்பாடு! மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (02) பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் “Tell IGP – Sri Lanka Police” முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் அளித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதற்கான குறிப்பு இலக்கத்தையும் (Reference Number) அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜீவன் தொண்டமான் பின்வருமாறு விடயங்களை முன்வைத்து முறைப்பாடு செய்துள்ளார்… குறித்த நபரால் முகநூலில் (Facebook) பகிரப்பட்டுள்ள ஒரு…

Read More

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுத் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக அபேகுணசேகரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, யாழ்ப்பாண நகர்ப் பகுதி சந்தை வளாகத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக யாழ்ப்பாணப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஆரம்பத்தில் காலி பகுதிக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்ததுடன், பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரை…

Read More

மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய சேவையொன்றை அறிமுகப்படுத்த ‘லங்கா மெற்றோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரியான சஞ்சய தயாரத்ன என்பவரின் கூற்றுப்படி, வார இறுதி நாட்களில் பல பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதால், வழக்கமான பயணிகளின் தேவை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மெட்ரோ பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதையே இந்த யோசனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் தற்போது திட்டமிடல் கட்டத்தில் உள்ளதாகவும், மெட்ரோ பேருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இதனை அறிமுகப்படுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதற்கமைய, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆர்வமுள்ள நபர்கள் நியமிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து…

Read More

கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு! கொழும்பிலிருந்து இன்று ஹட்டன் நோக்கி பயணித்த  பேருந்து ஒன்றில், குடிபோதையில் பயணித்த இருவர் இரு பெண்களுக்கு இடையூறு விளைவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இது குறித்து பேருந்து நடத்துனரிடம் முறையிட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஊழியர்கள், வட்டவளை பொலிஸ் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, தகராறில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்து மீண்டும் ஹட்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்தனர். நீண்ட தூரப் பயணங்களின் போது இதுபோன்ற அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, மது அருந்தியவர்களைப் பேருந்துகளுக்குள் அனுமதிக்கக் கூடாது எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராகுல்

Read More

இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்த மலையக மார்க்க ரயில் சேவைகள், சுமார் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ​இதன்படி, முதற்கட்டமாக கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். ​கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ சூறாவளி காரணமாக மலையக மார்க்க ரயில் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 10 மாதங்களுக்குப் பிறகு இந்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, லிந்துலை – மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ​நேற்று (01)பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பாடசாலை சுற்றுப்புறம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் ஆகியவற்றிற்குள் வெள்ள நீருடன் சேறும் சகதியும் புகுந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ​இது குறித்துப் பேசிய பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், சுகாதார நடைமுறைகளின்படி பாடசாலை வளாகத்தைச் சுத்திகரிப்பதற்காகவும், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி இந்த விடுமுறை தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ​சுத்திகரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே பாடசாலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார். ​அத்துடன், மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை வளாகம் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பிற்குள்ளாவதால், உரிய முறையில் வடிகால் மற்றும் கால்வாய் அமைப்புகளைச் சீரமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அவர்…

Read More

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காகத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையை உடனடியாக நிறைவேற்றுமாறும் கட்டளையிட்டுள்ளது.

Read More

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ தோட்டப் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்னசனத்தில் பயணித்த பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிக வேகம் காரணமாகவே சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜப்பானின் நிஷின்  நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இன்று (01) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சஹான் ஆரச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய…

Read More