Author: Thana

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பில், தம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி வெளியேறியபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த ஒளிப்பதிவாளர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இத்தாக்குதல் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.

Read More

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ​இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ​அத்துடன், ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ​அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 475 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் 285 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். ​இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாட்டின் பெறுமதிமிக்க பொக்கிஷம் “சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதிமிக்க பொக்கிஷமாவர். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நாளைய நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன. நாம் கட்டியெழுப்பும் நாடானது, நாளைய தினம் அவர்களிடம் கையளிக்கப்படும் நாடாக மட்டுமன்றி, இன்று அவர்களின் கனவுகளுக்கு இடமளிக்கும், அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கும் மற்றும் அவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் நாடாகவும் அமைய வேண்டும். சமமான கல்வி உரிமையும் மறுசீரமைப்பும் சாதி, மதம், பொருளாதார…

Read More

நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்  2026 சிறுவர் தின சிறப்பு அறிவிப்பு ஒரு வகுப்பறை… ஒரு நினைவு… ஒரு தலைமுறையின் எதிர்காலம்! நம் பாடசாலையின் **நூற்றாண்டை நோக்கிய பயணத்தின்** ஒரு பகுதியாக, சுமார் 60 வகுப்பறைகளையும் Smart Classrooms ஆக மாற்றும் PPA-வின் புதிய திட்டம்! 💻📚 🎓 பழைய மாணவர்கள் – தங்களுக்கு பிடித்த வகுப்பறையைத் தேர்வு செய்யலாம். 👨‍👩‍👧 பெற்றோர்கள்– தங்கள் பிள்ளை கற்கும் வகுப்பறையைத் தேர்வு செய்யலாம். 👩‍🏫 பழைய & தற்போதைய ஆசிரியர்கள்– தாங்கள் கற்பித்த / கற்பிக்கும் வகுப்பறையைத் தேர்வு செய்யலாம். 🤝 பழைய மாணவர்கள் • பெற்றோர்கள் • ஆசிரியர்கள் • நலன்விரும்பிகள் • NGOs • நிறுவனங்கள் ❤️ நாம் படித்த வகுப்பறை… இன்று நம் பிள்ளைகளின் எதிர்கால வகுப்பறையாகட்டும்! 🌟 நம் நினைவுகள் → நம் பங்களிப்பு → நம் குழந்தைகளின் எதிர்காலம்…

Read More

இன்றைய சிறார்களின் கனவுகளைப் பாதுகாப்பதே நாளைய நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு! சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜீவன் தொண்டமான் வாழ்த்து! *01.10.2026* சிறுவர் தினத்தை முன்னிட்டு, அனைத்து சிறார்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது அன்பான சிறுவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு குழந்தையின் கனவும், எதிர்கால சமூகத்தின் கனவாகும்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகள் ஒரு நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாது, அந்த நாட்டின் இன்றைய நம்பிக்கையும் நாளைய வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் திகழ்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். சிறார்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்போது மட்டுமே ஒரு நாட்டின் எதிர்காலம் வலுவானதாக அமையும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தங்களது கனவுகளை நனவாக்கவும் தேவையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இனம், மதம், மொழி, பிரதேசம் அல்லது பொருளாதார நிலை…

Read More

​”சிறுவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் நமது நிகழ்காலத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்கள்” என்பதை நினைவூட்டும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் இந்நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. ​ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின்படி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்படுகின்றனர். வாழும் உரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சமூகத்தில் பங்கெடுக்கும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை பாகுபாடின்றி அனைத்துச் சிறுவர்களுக்கும் உறுதி செய்வதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும். ​2026-ஆம் ஆண்டின் தற்போதைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சூழலில், சிறுவர்கள் புதிய வகை சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ​திரைப் பயன்பாடு அதிகரிப்பு, இணையவழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளன. அத்துடன் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர் உழைப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன. ​இத்தகைய சவால்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாத்து,…

Read More

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் பொகவந்தலாவ பிராந்திய அனுசரணைத் திட்டப் பிள்ளைகளுக்கான ‘Birthday Bounce Back’ பிறந்தநாள் கொண்டாட்டமும், பசி மற்றும் மந்தபோஷணையை தடுப்பதற்கான ‘ENOUGH’ விழிப்புணர்வுப் பிரச்சாரமும் அண்மையில் பொகவந்தலாவ சென். மேரீஸ் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்றன. ​வேர்ல்ட் விஷன் பிராந்திய முகாமையாளர் திருஷாந்த ருவான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொகவந்தலாவ நகரில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவணியுடன் ஆரம்பமானது. ​நிகழ்வின் போது சிறுவர்களுக்கான கேக் வெட்டும் நிகழ்வு, சித்திரப் போட்டிக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், உள்ளக விளையாட்டுக்கள் மற்றும் போஷணை தொடர்பான கண்காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.  ​சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோருக்கு கோலாலம்பூரில் மலேசிய இந்திய காங்கிரஸின் ஏற்பாட்டில் கௌரவிப்பு வழங்கப்பட்டது. ம.இ.கா ஆல் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த செந்தில் தொண்டமான்,ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் மலேசியாவிற்கும், இலங்கைக்கும் மற்றும் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான தொடர்புகளை வலுப்படுத்தியமைக்காக மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மலேசிய பாராளுமன்ற உறுப்பினரும், ம.இ.காயின் துணை தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

*சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் இன்று (30) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.  இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைந்து அனோஜனின் விடுதலைக்காகக் குரல்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் அனோஜனின் பெற்றோரைச் சந்தித்து, அவரைப் பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், அந்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலேயே பொதுமக்கள் தளத்தில் இந்த மனிதாபிமான குரல் எழுப்பப்படுவதாகத் தெரிவித்தனர்.  சவுதி அரேபிய நாட்டின் சட்ட அமைப்பை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், இரண்டு புனித…

Read More