Author: Thana

மொனராகலை பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், 49 வயது ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலட்சக்கணக்கான ரூபாய் நஷ்டஈடும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை மொனராகலை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாடசாலையிலிருந்து மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் குற்றவாளியான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. ​இதற்கமைய, நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதித்ததோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தலா 250,000 ரூபாய் வீதம் மொத்தம் 750,000 ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 40வது கராத்தே போட்டிகளில், ஹட்டன் ஸ்ரீ பாத மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவச் சகோதர-சகோதரி இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ​மாத்தறை கொட்டவில விளையாட்டரங்கில் நடைபெற்ற இத்தொடரில், கே.எம். இஷினி எனாரா புஞ்சிபண்டா மற்றும் கே.எம்.எஸ்.வி. ஹித்தைஸி புஞ்சிபண்டா ஆகிய இருவரும் காத்தா பிரிவில் தங்கப் பதக்கங்களையும், குமிதே பிரிவில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்துள்ளனர். ​இதனிடையே, இத்தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் கே.எம். இஷினி தட்டிச் சென்றுள்ளார். ஹட்டன் கல்வி வலயத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த மாணவச் சாதனையாளர்களுக்குப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்! மட்டக்களப்பு செய்தியாளர் PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், PTA வும் வேண்டாம் PSTA யும் வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வாறு காந்தி பூங்கா வளாகத்தில் பேரணியொன்றையும் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

Read More

கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் அல்லது OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. ​நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ​இதன்போது OCI அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து அதிகாரிகளால் தெளிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக, அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ​இன வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த முயற்சிகள் தொடரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலும் அவதூறாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​எனவே, இது தொடர்பான போலித் தகவல்களையோ அல்லது முரண்பாடான பதிவுகளையோ பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ​இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி எச்சரித்துள்ளார்.

Read More

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ​இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களிடமிருந்து தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக CERT மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​போலி விளம்பரங்களின் பின்னணியில் உள்ள மோசடிகள் ​வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைவதன் மூலம் இலகுவாக விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் குடியுரிமையைப் பெறலாம் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ​இவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது, தங்களை உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திப் பேசுகின்றனர். ​கவர்ச்சி வாக்குறுதிகளும் போலி ஆவணங்களும் ​பதிவுக் கட்டணம் மற்றும்…

Read More

பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மொரட்டுவை மாவட்ட நீதிபதியும், முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை பதவியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ​சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன. ​இது தொடர்பான விசாரணைகளின் முடிவில், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ​ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைகள் காரணமாக அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

Read More

தலவாக்கலை – ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, அதன் களப்பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளன. ​மத்திய மாகாண சபையின் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ​கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான சுந்தரராஜா சுரேஷ் மற்றும் கோவிந்தராஜ் நேசமலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்தினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவிற்கமையவே இந்நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து பார்வையிடும் நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்த், பிரதேச சபை உறுப்பினர்களான சுந்தரராஜ் சுரேஷ் மற்றும் கோவிந்தராஜ் நேசமலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Read More

வி.தீபன்ராஜ் கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது. கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயா சுற்றுசூழலை அழித்து, அக்காப்பிற்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று வளி அமுக்கக் கருவி மூலம் காற்றை உட்செலுத்தி, ஆற்றுப் படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் இவர்கள் இம்மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சட்டவிரோத நடவடிக்கை குறித்து நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நுவரெலியா பொலிஸின் விசேட…

Read More

சவுதியில் இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்! ​ சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. ​அனோஜன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் கருத்துச் சுதந்திரம் சார்ந்தது என்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என அவ்வமைப்பு வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளது. ​இதேவேளை, தம்மாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் மீது மற்றொரு கைதி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அவரது நிலைமையைக் கண்டறிய சவுதிக்கான இலங்கைத் தூதுவர் இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார். ​மறுபுறம், அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சவுதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான மனு தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற…

Read More