Author: Thana
வி .தீபன்ராஜ் ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து. லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வேன் சாரதி காயமடைந்துள்ளார் என ஹட்டன் பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் ஹட்டன, டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே இன்று (26) முற்பகல் 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து நல்லத்தண்ணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகின. விபத்தில் வேன் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாகப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் தமது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011-2 78 42 08 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளசாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!து.
வி.தீபன்ராஜ் மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் மலையகப் பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களமும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை மற்றும் வீசியடிக்கும் பலத்த காற்று காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நுவரெலியா, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கடக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பாதை வீதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு குறைந்த வேகத்தில், கவனமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மலையகத்தில் உள்ள…
மலேசியாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சர்வதேச ‘பெஸ்டா ஹொக்கி’ (Pesta Hockey Tournament) தொடரில் பங்கேற்பதற்காக, மாத்தளை இந்து தேசியக் கல்லூரியின் திறமைமிக்க வீரரான உதயகுமார் திலான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து உருவாகி, சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள இவருக்கு, மாத்தளை இந்து தேசியக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். தனது அபாரமான திறமையாலும் அர்ப்பணிப்பான பயிற்சியினாலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ள திலான், மலேசியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கைக்கு பெருமை தேடித்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதி எடுப்பதற்காக 850 ரூபாய் அதிகட்டணம் அறவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 25ஆம் திகதி அதிகாரிகள் குறித்த கடையில் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அதிக விலை அறவிட்டமைக்கான முதற்கட்ட ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதிகார சபை,…
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற வாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், மருத்துவமனை கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது. மருத்துவமனையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலின்டர் ஒன்று திடீரென வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தம் சட்டமூலம் ஆகிய இரண்டிலும், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற விவாதங்களின் பின்னர், அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63…
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஹட்டனிலிருந்து நோர்வூட் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, எதிர்த்திசையில் சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. சாரதி தொலைபேசியில் உரையாடியவாறு அதிவேகமாக முச்சக்கர வண்டியைச் செலுத்தியமையினால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துடன் மோதியிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், விபத்தின் காரணமாக முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனினும், இந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகின்றது என்பதில்தான் தமது கேள்வி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது எனக் குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்பு வசதிகளையும் இணையாக மேம்படுத்த வேண்டும் என்றார். அரசாங்கங்கள் மாறும்போதெல்லாம் நீதித்துறையில் மாற்றங்களைச் செய்வது அதன் சுயாதீனத்தையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதித்துறை எப்போதும் நிலைத்தன்மையுடன் இயங்க வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு
வரும் 2026 நவம்பர் முதலாம் திகதி முதல், நாட்டின் பல முக்கிய செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதி பெறும்போது, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிக்கும் போது இனி TIN இலக்கம் கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், காணி உரிமங்களைப் பதிவு செய்தல், வணிகப் பதிவு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் புதிய கடன் அட்டைகளைப் (Credit Cards) பெறுவதற்கும் இந்த ‘TIN’ இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்கும் TIN இலக்கம் செல்லுபடியானது தானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத பொதுமக்கள், உள்நாட்டு…