Author: Thana
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட ஆறு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவர் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். 2022-ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் ரூவன்புர பகுதியில் காணிகளை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமிருந்து ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை இவர் பண மோசடி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கள உத்தியோகத்தரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு விசாரணை…
மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!
மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு! மாத்தளை கல்வி வலையத்திற்குட்பட்ட கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் தொழில்முயற்சி, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் நடைமுறைப் பொருளாதார அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிறுவர் சந்தை சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை பதில் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில், உதவி அதிபர் அழகர் அவர்களின் பங்கேற்போடு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இச்சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பழவகைகள், குளிர்பானங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய பல்வேறு விற்பனைச் சாவடிகளை அமைத்திருந்தனர். பொருட்களைத் தயாரிப்பது முதல் விலையை நிர்ணயித்தல், வாடிக்கையாளர்களை உபசரித்தல் மற்றும் வரவு-செலவுகளைப் பதிவிடுவது வரை அனைத்துச் செயற்பாடுகளையும் மாணவர்களே முன்னெடுத்தனர். இதன்மூலம் வகுப்பறை அறிவை நடைமுறையில் செயல்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. இந்நிகழ்வில் பெற்றோர்கள்,…
கடும் காற்றுடன் பெய்யும் மழையால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
வி .தீபன்ராஜ் மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை நுவரெலியா,ஹட்டன் கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (25)அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இயக்குமாறு சாரதிகளுக்கு ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். மேலும், சில பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை நீடிப்பதால் ஆறுகளில் நீராடுவதையோ, நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதையோ மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு…
பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது-பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை
பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை பலாங்கொடை, உடகந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், உடனடியாக பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார். இதனையடுத்து, பிரதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, லெல்லோப்பிட்டிய தோட்டத்தின் 30ஆம் இலக்க லயன் குடியிருப்பு மீது பெரிய அரச மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குடியிருப்பு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இன்று மாலை 5:00 மணியளவில் இத்தீடீர் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த தொடர் லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த 14 குடும்பங்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு, இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தற்காலிகமாக அருகில் உள்ள கொழுந்து மடுவம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விக்னேஷ், இரத்தினபுரி.
குயில்வத்தை பகுதியில் மண்சரிவு : ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு! ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் இன்று 24ஆம் திகதி மாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டிருந்த அதே பகுதியில் மீண்டும் மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளன. இதனால் ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–கண்டி பிரதான வீதிகளூடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் வீதியில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அதுவரை சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–நுவரெலியா வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை…
வி.தீபன்ராஜ் நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது நோர்வுட் பகுதியில் கனமழை. ஒரு வீட்டின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், நோர்வுட் பிரதேசத்துக்கு செல்லும் வீதி தடைபட்டுள்ளது. ஹாட்டனின் நோர்வுட் பகுதியில் பெய்து வரும் கனமழையால், நோர்வுட் செல்லும் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், அந்தச் வீதி முழுவதுமாகத் தடைபட்டுள்ளது. (24) பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் வீட்டின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததாகவும், அந்த வீட்டில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் அந்த லாரியை அகற்ற முடியவில்லை என்றும் அந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், பிரதேசத்துக்கு செல்லும் வீதியில் இடிந்து விழுந்த பாதுகாப்புச் சுவரை அகற்றுமாறு நோர்வுட் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் கூறினர்.
மலையகப் பிராந்தியங்களில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக, நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை – செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை – விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா சந்ததென்ன வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மாநகர சபை உடனடி நடவடிக்கை!
நுவரெலியா – சந்ததென்ன செல்லும் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த உடனடியாகச் செயற்பட்ட நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாநகர சபை இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் காலமானார்: நீண்டகாலமாக மலையக இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிரேஷ்ட படைப்பாளி மறைவு மலையக இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான மு. சிவலிங்கம் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவு மலையக இலக்கியத் துறைக்கும், தமிழ் மொழிப் புலத்திற்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மலையக மக்களின் வாழ்வியல், போராட்டங்கள், கலாசாரம் மற்றும் சமூக மாற்றங்களை மையமாகக் கொண்டு பல தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதி வந்தவர் மு. சிவலிங்கம். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. மலையகச் சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகளை இளமுறைக்குக் கொண்டு சேர்த்ததில் இவரது எழுத்துகள் முன்னணி வகித்தன. இவரது மறைவையடுத்து இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.