Author: Thana

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (11) அதிகாலை இக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலின்போது, வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். சம்பவத்தில் காயமடைந்த 55 வயதுடைய சிறுவர்களின் தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read More

பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.  வெட்டுப்புள்ளிக்கு மேல் – 02 மாணவர்கள் | 22% 00 – 69 புள்ளிகள் – 03 மாணவர்கள் | 33% 70 – 100 புள்ளிகள் – 04 மாணவர்கள் | 44% சிறப்பாக சாதித்த அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்! மேலும் பல வெற்றிகளை நோக்கி பயணிக்க வாழ்த்துகள்! #Scholarship2026 #புலமைப்பரிசில்2026 #BonaccordTV #மாணவர்கள் #வெற்றி #வாழ்த்துகள்

Read More

சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில் ​(எம்.எல்.எஸ். முஹம்மத், இரத்தினபுரி) ​சபரகமுவ மாகாண தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன், சபரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாடு 2026/2027” வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களில் பங்கேற்பதற்காக, முதற்கட்டமாக 50 பயிலுநர் ஆசிரியர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ​இவர்களுக்கான முதலாவது ஆராய்ச்சி வழிகாட்டல் இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அட்லுகம கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளதாக சபரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஹுஸ்னா ஸஜான் தெரிவித்தார். ​பாடசாலைகளில் காணப்படும் கற்றல் கற்பித்தல் சவால்கள் மற்றும் கல்வித் தர அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு, செயல்முறை ஆராய்ச்சி முறையியல்கள்…

Read More

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன், இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இன்று (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற. விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார். மேலும், இந்த நிகழ்வில் என்னையும் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய நிர்வாக சபைத் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். ஊடகப்பிரிவு ஜீவன் தொண்டமான்

Read More

அரச இலக்கிய விழா 2026: விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு பிரதி அமைச்சர் வாழ்த்து ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் (08.09.2026) நடைபெற்ற அரச இலக்கிய விழா 2026 இல் தமிழ் மொழிப் பிரிவில் பல்துறைகளில் விருதுகளைப் பெற்ற பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கான சிறந்த நானாவித படைப்பிற்கான விருதை வென்ற திரு. இரா. சடகோபன், தமிழ் மொழிக்கான நானாவித படைப்பிற்கான (ஆங்கிலம்) விருதை பெற்ற திரு. எம். வாமதேவன், தமிழ்ப்பிரிவில் சிறந்த நாவலுக்கான விருதை, பெற்ற இரா. நித்தியானந்தன், தமிழ்ப்பிரிவில் சிறந்த தமிழ் சிறுகதை தொகுப்பிற்கான விருதை பெற்ற திருமதி. பிரமிளா பிரதீபன் ஆகிய நால்வரும் தமக்கான விருதுகளைப் பெற்று மலையக இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் எனவே இவர்களின் இலக்கிய பணி…

Read More

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்! இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Read More

இலங்கையின் நகரப் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து சேவைக்கு வசதிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மூன்றாவது டிப்போ முற்றம் ஜா-எல, ஏகலயில் நேற்று (09) முதல் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையில், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது. மெட்ரோ பேருந்து திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக சேவைகளை ஆரம்பித்துள்ள இந்த டிப்போவை மையமாகக் கொண்டு, 20 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் ஏகலயிலிருந்து கொழும்பு மாவட்டத்தின் தலங்கம வரை செல்லும் இந்த மெட்ரோ பேருந்து பாதை 29.9 கிலோமீட்டர் நீளமுடையதாகும். இதில் 21 மெட்ரோ பேருந்து நிறுத்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Read More

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Read More

நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குறித்த வர்த்தக நிலையத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2026/04/16 எனக் காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே பிரதான நீதவான் குறித்த நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நுகர்வோருக்கான விசேட அறிவித்தல்: உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதிகளை முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என…

Read More

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் www.ugc.ac.lk ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

Read More