Author: Thana

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹோமகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.  முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது…

Read More

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது விழா 2026 இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான இலக்கியப் படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளை கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது முறையாக அரச இலக்கிய விருது விழாவை ஏற்பாடு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குத் தமது சிறந்த படைப்புகளினால் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல மூன்று இலக்கியப் படைப்பாளிகளுக்கு…

Read More

ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம் ஜனாதிபதி – இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 03 புதிய ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன – இணையவழி ஊடாக 03 பெய்லி பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும் பிராந்திய…

Read More

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலையகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அறநெறிப் பாடசாலைகளை நடத்திச் செல்லல், குருமார்களின் தேவைகள், அத்துடன் ஆலய காணிகள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மலையக இந்து குருமார்கள் வாழும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்…

Read More

பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாடசாலைகளில் இரண்டு மாணவர்கள் ஒரே தடவையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். அத்தோடு பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதோடு வெட்டுப்புள்ளிக்கு மேல் இரண்டு மாணவர்களும்,100 புள்ளிகளுக்கு மேல் 07மாணவர்களும்,70- 100 புள்ளிகள் வரை 3 மாணவர்களும்  பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அத்தோடு இவ்வாறான வரலாற்று சித்தியினை மாணவர்களை சிறப்பாக வழிப்படுத்திய வகுப்பாசிரியர் S. மனோஜ்குமார் அவர்களை மெரிகோல்ட் தமிழ் வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் இவர்களை வாழ்த்துவதில் பெருமைக்கொள்கிறது. பாடசாலை சமூகம்

Read More

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) வழங்க ரூ.4,500 மில்லியன் ஒதுக்கிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள். அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்கள் 05.07.2017 அன்று, ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்காக 4.5 ஹெக்டேர்(10 ஏக்கர்) காணியைப் பெற்றுக்கொடுக்க எடுத்த நடவடிக்கையின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. மேலும், ஹட்டன் கல்வி வலயப் பணிமனையை கினிகத்தேனைக்கு மாற்றுவதற்குப் பதிலாக, ஹட்டன் புகையிரத கட்டிடத்தில் அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

Read More

பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அபிவிருத்தித் திட்டம் -ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட தோட்ட அமைப்பாளர் என்ற முறையில், பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக அபிவிருத்தி நிதியை வழங்கியமைக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தின் நலன் மற்றும் சமய வளர்ச்சிக்காக கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் வழங்கி வரும் மதிப்புமிக்க ஆதரவையும் பங்களிப்பையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். எமது சமூகத்தின் சமய மற்றும் கலாசார வளர்ச்சிக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் இத்தகைய ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, ஹரிஷ் ரவீந்திரன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட தோட்ட உட்கட்டமைப்பாளர் …

Read More

மலையகப் பகுதிகளில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வனப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி அதிகரித்துள்ளது. குறிப்பாக, தோட்டப்புற மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகள் விலங்குகளின் நடமாட்டத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. ​அந்த வகையில், திரேசியா மற்றும் சிங்காரவத்தை ஆகிய மலைப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் தீவிரமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தேயிலைத் தோட்டங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் சிறுத்தைகள் உலாவி வருவதால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ​அதிகாலை வேளையிலும் மாலை நேரங்களிலும் தேயிலைக் கொய்துவரும் தொழிலாளர்களும், வேலைக்குச் சென்று திரும்பும் பொதுமக்களும் பாதுகாப்புக் கருதி பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: ​குறிப்பாக காலை வேளையிலும், மங்கிய வெளிச்சம் உள்ள மாலை மற்றும் இரவு நேரங்களிலும் தனியாக நடமாடுவதைத் தவிர்க்கவும். ​வேலைக்குச் செல்லும்போதும் அல்லது வெளியே செல்லும்போதும் தொழிலாளர்கள் குழுவாகவும், சத்தமிட்டவாறும் செல்வது…

Read More

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ​எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றித் தப்பியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ​அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ​சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read More

ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம்-ஜனாதிபதி- இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 03 புதிய ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன – இணையவழி ஊடாக 03 பெய்லி பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும்…

Read More