Author: Thana
குழந்தைகள் உட்தொடுகை: ‘நல்ல தொடுகை, கெட்ட தொடுகை’யை தாண்டிய குழந்தையின் சம்மதம் – துஷாரா விக்ரமநாயக்க கருத்து! பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நல்ல தொடுகை, கெட்ட தொடுகை’ (Good touch, bad touch) என்ற கருத்தாக்கத்திற்கு அப்பால், எந்தவொரு உடல்ரீதியான தொடுகைக்கும் முன்பாகக் குழந்தையின் தனிப்பட்ட சம்மதம் பெறப்படுவதே மிக முக்கியம் என சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர் டொக்டர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளம் ஒன்றில் அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட இரண்டு புகைப்படங்களை இணைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் விருப்பமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல்ரீதியான தொடர்பும் பொருத்தமற்றதாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த பதிவில் இடம்பெற்றுள்ள முதல் புகைப்படத்தில் உள்ள ஒரு தொடர்பை விமர்சித்துள்ள அவர், அது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இலங்கையில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பிலான பரந்த கவலைகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF மற்றும் ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF மற்றும் ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை! இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எல்கடுவ தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று அரச தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமலிருந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) சார்ந்த 4,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சட்டரீதியான நிலுவைத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட மக்கள் ஓய்வுபெற்ற பின்னரும், முதிய வயதிலும் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முதன்மை தலையீட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி அநுர…
நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட நூற்று பதினெட்டு நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, ஐம்பத்து நான்கு நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளதுடன், எழுபத்தாறு நிறுவனங்களில் பாணின் எடை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், அறுபத்தைந்து நிறுவனங்களில் பாணின் விலையும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு முழுப் பாண் நானூற்று ஐம்பது கிராமும், அரைப் பாண் இருநூற்று இருபத்து ஐந்து கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. பாணின் எடை, விலை அல்லது ஏதேனும் வர்த்தக முறைகேடுகள் தொடர்பாகப் புகார்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு…
காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இருநூறு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டாயிரத்து இருபத்தாறு ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட நானூறு கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு எட்டாம் மாதம் பதினைந்தாம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கத்தை மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதற்கமைய, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித…
தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள.
பொகவந்தலாவ கெம்பியன் பாடசாலையில் இவ்வருடம் (2026) உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்குச் சிறந்த உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். பரீட்சை முடிந்த கையோடு சும்மா இராமல், தாங்கள் கற்ற கல்வி நிலையத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கில் மாணவர்கள் தாமாக முன்வந்து பாடசாலையில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் இத்தகைய நற்செயற்பாடுகள், எதிர்காலத்தில் பாடசாலைக்கு வரவிருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. படிப்பை முடித்துவிட்டுச் செல்லும்போதும் தாம் கற்ற பாடசாலையின் மீது பற்றுடனும் நன்றியுணர்வுடனும் செயற்பட்ட இம்மா மாணவர்களின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை, கெம்பியன் பாடசாலையின் முழு சமூகமும் மனதார வாழ்த்திப் பாராட்டுகிறது. ஆசிரியர் ச. ஸ்ரீதரன்.
மமா/ஹவ/ கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்
2026 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்.. மஸ்கெலியா நகருக்கு அண்மையில் உள்ள மமா/ஹவ/ கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியயை திருமதி.டி.சிவமலர் அவர்களையும் பாடசாலை அதிபர் திரு.எஸ்.சுகேஸ்வரன் அவர்களையும் காணலாம். நாமும் வாழ்த்துவோம். செய்திகள் இராமன் கேதீஸ்வரன்
மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 8) உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குள் கடந்த 31 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையிலிருந்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரை வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….! இம்முறை வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/கிளன்லொச் தமிழ் வித்தியாலயம், கட்டுக்கித்துலையில் முப்பது வருடங்களின் பின் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஹெல்பொட கிளன்லொச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்பரீட்சையில் செல்வி பிரதீபன் லிசாலினி 136 புள்ளிகளையும், செல்வன் கந்தசாமி டிக்சான் 134 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 30 வருட கால இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியானது, பாடசாலையின் அதிபர் திரு.கந்தையா வாசுதேவன், மாணவர்களுக்குக் கற்பித்த வகுப்பாசிரியை திருமதி A. அனுசியா, ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிளன்லொச் சமூகம், அனைவருக்குமே அளப்பரிய பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இந்த சாதனைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வரலாற்றுச்…
கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.
கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன. கண்டி – மடுல்கலை உணனகலை முத்துமாரியம்மன் ஆலயம், டியனில்ல முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை கம்பளிக்கடை முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை விநாயகர் ஆலயம், ஆகலை அம்மன் ஆலயம், கந்தக்கட்டி அம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த ஆலயங்களின் நிர்வாகங்களால் பொலிஸ் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், கருவறை விக்கிரகத்திற்கும், ஏனைய விக்கிரகங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களும், உண்டியலும் திருடப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயங்களுக்குள் இதுவரை எவரும் பிரவேசித்து முழுமையாக பார்வையிடாதமையால், வேறு சிலைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பொலிஸ் விசாரணைகளின் பின்னரே, துல்லியமான தகவலை அறியமுடியும். குறித்த…