Author: Thana

காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இருநூறு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ​காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. ​நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டாயிரத்து இருபத்தாறு ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட நானூறு கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ​இச்சம்பவம் தொடர்பாக இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு எட்டாம் மாதம் பதினைந்தாம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கத்தை மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.​இதற்கமைய, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித…

Read More

தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள.

Read More

பொகவந்தலாவ கெம்பியன் பாடசாலையில் இவ்வருடம் (2026) உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்குச் சிறந்த உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். ​பரீட்சை முடிந்த கையோடு சும்மா இராமல், தாங்கள் கற்ற கல்வி நிலையத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கில் மாணவர்கள் தாமாக முன்வந்து பாடசாலையில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் இத்தகைய நற்செயற்பாடுகள், எதிர்காலத்தில் பாடசாலைக்கு வரவிருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ​படிப்பை முடித்துவிட்டுச் செல்லும்போதும் தாம் கற்ற பாடசாலையின் மீது பற்றுடனும் நன்றியுணர்வுடனும் செயற்பட்ட இம்மா மாணவர்களின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை, கெம்பியன் பாடசாலையின் முழு சமூகமும் மனதார வாழ்த்திப் பாராட்டுகிறது. ​ஆசிரியர் ச. ஸ்ரீதரன்.

Read More

2026 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்.. மஸ்கெலியா நகருக்கு அண்மையில் உள்ள மமா/ஹவ/ கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியயை திருமதி.டி.சிவமலர் அவர்களையும் பாடசாலை அதிபர் திரு.எஸ்.சுகேஸ்வரன் அவர்களையும் காணலாம். நாமும் வாழ்த்துவோம். செய்திகள் இராமன் கேதீஸ்வரன்

Read More

மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 8) உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குள் கடந்த 31 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையிலிருந்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரை வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….! இம்முறை வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/கிளன்லொச் தமிழ் வித்தியாலயம், கட்டுக்கித்துலையில் முப்பது வருடங்களின் பின் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஹெல்பொட கிளன்லொச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்பரீட்சையில் செல்வி பிரதீபன் லிசாலினி 136 புள்ளிகளையும், செல்வன் கந்தசாமி டிக்சான் 134 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 30 வருட கால இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியானது, பாடசாலையின் அதிபர் திரு.கந்தையா வாசுதேவன், மாணவர்களுக்குக் கற்பித்த வகுப்பாசிரியை திருமதி A. அனுசியா, ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிளன்லொச் சமூகம், அனைவருக்குமே அளப்பரிய பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இந்த சாதனைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வரலாற்றுச்…

Read More

கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன. கண்டி – மடுல்கலை உணனகலை முத்துமாரியம்மன் ஆலயம், டியனில்ல முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை கம்பளிக்கடை முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை விநாயகர் ஆலயம், ஆகலை அம்மன் ஆலயம், கந்தக்கட்டி அம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த ஆலயங்களின் நிர்வாகங்களால் பொலிஸ் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், கருவறை விக்கிரகத்திற்கும், ஏனைய விக்கிரகங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களும், உண்டியலும் திருடப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயங்களுக்குள் இதுவரை எவரும் பிரவேசித்து முழுமையாக பார்வையிடாதமையால், வேறு சிலைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பொலிஸ் விசாரணைகளின் பின்னரே, துல்லியமான தகவலை அறியமுடியும். குறித்த…

Read More

வட்டவளை மவுண்ட்ஜீன் தமிழ் வித்தியாலயம், மாணவி தேவதாஸ் நான்சி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றார்..

Read More

செ. திவாகரன் கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவுகள் காரணமாக பொலிஸ் வாகனத்தில் செல்லும் பாடசாலை மாணவர்கள். இன்று (07) புதிய கல்வியாண்டு தொடங்கியதையடுத்து, ஒரு குழு பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன (Panangammana) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதன் விளைவாக, பேருந்து இல்லாததால், பனங்கம்மன பகுதியிலிருந்து கொத்மலை புதுநகரில் உள்ள காமினி திசநாயக்க பள்ளிக்கு வரும் குழந்தைகளும் ஆசிரியர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொத்மலை பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித் மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள், தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தி, நிலச்சரிவு…

Read More

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. ​அதன்படி, பாடசாலைகள் இன்று தொடங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்களில் நேற்று விசேட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ​மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை தொடர்ச்சியாகத் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More