Author: Thana
இதுவரை சிங்கள மொழி மூலமான படைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மதிப்புமிக்க ‘விதர்சனா’ (Vidarshana) இலக்கிய விருது, வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ் படைப்பாளி ஒருவருக்கு வழங்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. கைப்பிரதி சிறுகதை ஆக்கத்திற்காக, படைப்பாளி சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கோலாகலமான விருது வழங்கும் விழாவில் இந்தச் சிறப்பிடம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு மலையக ஊடக நெட்வொர்க் (Malayagam Media Network) சார்பாக எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு! நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182புள்ளிகளைப் பெற்று நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் குனசேகர் பிரபா தம்பதியின் செல்வப் புதல்வன் ஆவார். அத்தோடு தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு நுவரெலியா கல்வி வலயத்தில் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயம் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.
உடப்புஸ்ஸலாவ – அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலய மாணவர்கள் 13 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் உடப்புஸ்ஸலாவ – அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலய மாணவர்கள் 13 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். உடப்புஸ்ஸலாவ, அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலயம் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரே தடவையில் 13 மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடையச் செய்து, பாடசாலை வரலாற்றிலும் பிராந்திய மட்டத்திலும் மகத்தான வரலாற்றுச் சாதனையைப் பதிவுசெய்துள்ளது. இப்பரீட்சையில் V. சக்சயன் 155 புள்ளிகளையும், C. அனுக்சன் மற்றும் V. விலோசனா ஆகியோர் தலா 152 புள்ளிகளையும், A. ரித்திக்சன் 148 புள்ளிகளையும், K. ருபக்ஸன் 144 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். மேலும், P. சர்மேஷ் மற்றும் M. ரிக்காஸ் ஆகியோர் தலா 142 புள்ளிகளையும், M. டிலுசியா மற்றும் M. அதினேஷ் ஆகியோர் தலா 141 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களுடன் P. தனூஸ்கர் 139 புள்ளிகளையும், P. பிரசன்யா 137 புள்ளிகளையும், N. யசீனி…
பெருமைமிக்க 160வது பொலிஸ் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்று (04) பிற்பகல் நடைபெற்ற 160வது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மோதல் சூழ்நிலைகள், தொற்றுநோய்கள் போன்ற பொது மக்கள் பேரழிவுகளை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பொது மக்களுக்காகவும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் இலங்கை பொலிஸார் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ஜனாதிபதி இங்கு பாராட்டினார். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இலங்கை பொலிஸாருக்கு , போதைப்பொருள் கடத்தல்…
பாலம் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் என்ற 6 வயதுடைய சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளான். நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு மிக அருகில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்த போதிலும், அதற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பகல் 11.00 மணியளவில் சிறுவன் தன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அக்குழியில் தவறி விழுந்துள்ளான். உடனடியாக மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நீதவானுக்கு…
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவராவார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்காக, அவர் இன்று (04) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். அங்கு அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே, அதிகாரிகள் அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!
பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 12:35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெரேசியா பிரிவு தோட்டப் பகுதியில், 56 வயதுடைய வேலு புஷ்பராணி என்ற பெண் தொழிலாளி வழக்கம்போல தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது. சிறுத்தையின் தாக்குதலில் கீழே விழுந்த அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தை கடித்தபோது அவர் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த சக பெண் தொழிலாளர்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு ஓடிவந்துள்ளனர். தொழிலாளர்களின் கூச்சலைக் கேட்டு மிரண்டுபோன சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காயமடைந்த பெண் சக தொழிலாளர்களால் மீட்கப்பட்டு முதலில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் டிக்கோயா கிளங்கன் ஆதார…
இலங்கை விமானச் சேவை (SriLankan Airlines) ஏயர்பஸ் (Airbus) ஊழல் வழக்கு: பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) கைது! ஏயர்பஸ் நிறுவன விமானக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய இலஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பெறுகை மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.