Author: Thana

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள…

Read More

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவரைக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

இன்று முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேர் மேலே…

Read More

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது – எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய செயற் திட்டம் எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. எல்-நினோ காலநிலை காரணமாக மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் தொடர்ந்தும்…

Read More

இந்த வருடப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில், இவ்வாண்டுப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 56 ஆயிரம் மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!

Read More

70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, இன்றைய தினம் உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது! நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குரிய இந்த முதியோர் கொடுப்பனவை, பயனாளிகள் இன்று முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 6 லட்சத்து 18 ஆயிரத்து 352 முதியோர்களுக்காக, 309 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மேலும் 70 வயதிற்கு மேற்பட்ட 78 ஆயிரத்து 260 முதியோர்களுக்காக 39 கோடியே 13 இலட்சம் ரூபா நிதியும் இதனுடன் வைப்பிலிடப்படவுள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள இலட்சக்கணக்கான முதியோர்கள் பயனடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி அவர்களுக்கு எதிராக உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்களையோ மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது உளவியல் ரீதியில் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான உள்ளடக்கங்களை பிள்ளைகளுக்கு வெட்கத்தையோ, மன உளைச்சலையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்தும் வகையில் ஊடக நிறுவனங்களும் சமூக வலைத்தளப் பயனாளர்களும் வெளியிடுவதிலிருந்தோ அல்லது பரப்புவதிலிருந்தோ த தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களின் கீழ் வரக்கூடும் எனவும், பொறுப்பானவர்கள் மீது அதிகபட்ச சட்ட…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

Read More

ஜப்பான் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் மேம்பாட்டிற்காக ஏழு தாழ்தளப் பேருந்துகள் (Low-floor buses) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா (Yokohama) நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் HE Akio Isomata அவர்களினால் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

Read More

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை: பிலியந்தலையில் 252 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறிவதற்கான திடீர் சோதனைகள் நேற்று (2026.09.01) முற்பகல் பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட சுமார் 252 பேர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 07 பேர் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Read More